Home
News

கலக்குற சந்துரு.. மொத்தம் 22 ஆப்ஷன்.. WhatsApp Settings-ல் சைலன்ட் ஆக சேர்க்கப்பட்ட 2 புதிய அம்சங்கள்!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது, இம்மாத தொடக்கத்தில் அதன் பிளாட்ஃபார்மில் சில முக்கியமான புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி இருந்தது. முதலில் - வாட்ஸ்அப் வீடியோ காலிங்கில் புதிய ஃபில்டர்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான பேக்கிரவுண்ட் (New Filters and backgrounds) அறிமுகமானது. பின்னர் - ஸ்டேட்டஸ் அப்டேட்டில் (Status Update) லைக் (Like), மென்ஷன்டு (Mentioned) மற்றும் ரீஷேர் (Reshare) ஆகிய அம்சங்கள் அறிமுகமானது.

அதனை தொடர்ந்து தற்போது இந்த வார தொடக்கத்தில் ஐஓஎஸ் அல்லது ஐபோன் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட 2 அம்சங்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அது என்ன அம்சங்கள்? அவைகளை பயன்படுத்துவது எப்படி? இதனால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:

WhatsApp Settings-ல் சைலன்ட் ஆக சேர்க்கப்பட்ட 2 புதிய அம்சங்கள்!

நாம் இங்கே பேசுவது, வாட்ஸ்அப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாட் தீம்ஸ் மற்றும் சாட் கலர் ஆப்ஷன்களை (WhatsApp chat themes and Colour options) பற்றித்தான். பெயர் குறிப்பிடுவது போலவே, இவைகள் வாட்ஸ்அப்பில் வெவ்வேறு சாட்ளுக்கு வெவ்வேறு தீம்களை மற்றும் கலர்களை செட் செய்ய அனுமதிக்கும். இதன்கீழ் 22 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வாட்ஸ்அப் சாட் தீம்கள் மற்றும் தேர்வு செய்ய 20 கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கும்.

இதன்கீழ் நீங்கள் ஒரு புதிய தீம்-ஐ தேர்வு செய்தவுடன், சாட் கலர்களும் அதனுடன் பொருந்துமாறு மாறும். இருப்பினும், நீங்கள் சாட்-க்கென வேறு நிறத்தையும் தேர்வு செய்யலாம். பெர்சனல் சாட்கள் மட்டுமின்றி க்ரூப்களுக்கும் கூட வெவ்வேறு தீம்களை செட் செய்யலாம். புதிய அம்சம் செட்டிங்ஸ் > சாட்ஸ் > தீம்ஸ் என்பதன் வழியாக அணுக கிடைக்கும்.

ஆனால் தற்போது வரையிலாக இந்த சாட் தீம்ஸ் மற்றும் சாட் கலர் ஆப்ஷன்கள் ஆனது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது. டபுள்யூஏஇன்ஃபோ-வின் (WABetaInfo) சமீபத்திய அறிக்கையின்படி, இந்த புதிய தீம்கள் மற்றும் கலர்கள் ஆண்ட்ராய்டு 2.24.21.34 பீட்டா அப்டேட்டின் (Android 2.24.21.34 Beta update) கீழ் அணுக கிடைக்கிறது.

இந்த பீட்டா அப்டேட் ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக இன்ஸ்டால் செய்யவும் கிடைக்கிறது. நீங்களொரு பீட்டா யூசர் ஆக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள வெர்ஷனை இன்ஸ்டால் செய்து, புதிய தீம்கள் மற்றும் கலர்களை முயற்சி செய்து பார்க்கவும். பீட்டா பயனராக இல்லாதவர்கள் சிறிது நாட்கள் காத்திருக்கவும், இதற்கான புதிய அப்டேட் கூடிய விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ்-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லைக்குகளை பொறுத்தவரை ஒரே ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் பயனர்கள் மற்ற பயனர்களின் ஸ்டேட்டஸ்-ஐ லைக் செய்யலாம். மேலும் இந்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் லைக்குகள் தனிப்பட்டவைகளாக இருக்கும், அதாவது நீங்கள் யாருடைய ஸ்டேட்டஸை லைக் செய்கிறீர்களோ அவரால் மட்டும் அதை பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் வீடியோ கால்களுக்கான புதிய ஃபில்டர்கள் மற்றும் பேக்கிரவுண்ட்களை பொறுத்தவரை, இவைகள் தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டு வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. இன்னும் அணுக கிடைக்காதோர் கூகுள் பிளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்யவும்.

இதன் கீழ் வார்ம் (Warm), கூல் (Cool), பிளாக் & ஒயிட் (Black & White), லைட் லீக் (Light Leak), ட்ரீமி (Dreamy), ப்ரிஸம் லைட் (Prism Light), ஃபிஷ்ஐ (Fisheye), விண்டேஜ் டிவி ( Vintage TV), ஃப்ரோஸ்டட் கிளாஸ் (Frosted Glass) மற்றும் டியோ டோன் (Duo Tone) போன்ற 10 ஃபில்டர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

கூடவே ப்ளர் (Blur), லிவிங் ரூம் (Living Room), ஆபீஸ் (Office), கஃபே (Cafe), பெபல்ஸ் (Pebbles), ஃபுடி (Foodie), ஸ்மூஷ் (Smoosh), பீச் ( Beach), சன்செட் ( Sunset), செலிப்ரேஷன் (Celebration) மற்றும் ஃபாரஸ்ட் (Forest) உள்ளிட்ட 10 புதிய பேக்கிரவுண்ட் விருப்பங்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் பயனர்கள், தாங்கள் மேற்கொள்ளும் வாட்ஸ்அப் வீடியோ கால்களின் தரத்தை மேம்படுத்த டச்-அப் மற்றும் லோ-லைட் ஃபில்டர்களையும் பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Introduced New Chat Themes And Colours For Android Beta Users How To Access Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X