Home
News

WhatsApp-இல் அறிமுகமான புதிய பென்சில் ஐகான்.. மெசேஜ் அனுப்பும் முன் கிளிக் பண்ணா என்ன ஆகும் தெரியுமா?

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபாரம் ஆன வாட்ஸ்அப்பில் ரைட்டிங் ஹெல்ப் (Writing Help) என்கிற புதிய ஏஐ அம்சம் (AI Feature) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது பயனர்கள் தங்கள் உரையாடல்களின் தொனியை திருத்த, மீண்டும் எழுத அல்லது மாற்ற உதவுகிறது.

வாட்ஸ்அப் வழியாக நீங்கள் ஒருவருக்கு ஒரு மெசேஜை அனுப்புவதற்கு முன், இந்த புதிய ரைட்டிங் ஹெல்ப் ஏஐ அம்சத்தின் கீழ் பயனர்கள் தங்களுடைய மெசேஜிங் இலக்கணத்தை சரி செய்யலாம், மெசேஜ்களை சரியான சொற்றொடர்களாக மாற்றலாம், தேவைப்பட்டால் மெசேஜின் தொனியை (Tone) கூட மாற்றலாம்.

WhatsApp-இல் அறிமுகமான புதிய பென்சில் ஐகான்!

வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி, பயனர்கள் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த ஆப்பில் ஒரு மெசேஜை டிராப்ட் செய்யும் போது தோன்றும் புதிய பென்சில் அடையாளத்தை கிளிக் செய்ய வேண்டும். மெட்டா (Meta) நிறுவனத்தின் ப்ரைவேட் ப்ராசஸிங் (Private Processing) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் ரைட்டிங் ஹெல்ப் அம்சத்தின் கீழ் திருத்தப்பட்ட மெசேஜையோ அல்லது திருத்துவதற்கு முன்பிலான ஒரிஜினல் மெசேஜையோ மெட்டா அல்லது வாட்ஸ்அப் நிறுவனத்தால் அணுக / பார்க்க / சேகரிக்க முடியாது.

அதாவது பயனர்கள் புதிய அம்சத்தை பயன்படுத்தினாலும், வாட்ஸ்அப் தளத்தில் உள்ள மெசேஜ்கள் தனிப்பட்டதாகவே இருக்கும். இந்த தொழில்நுட்பத்தின் கீழ், ஒரு மறைகுறியாக்கப்பட்ட மற்றும் அநாமதேய வழியின் மூலம் மெசேஜ் கோரிக்கை அனுப்பப்படும், அதை சோர்ஸ் உடனும் பயனருடனும் மீண்டும் இணைக்க முடியாது.

மேலும் ரைட்டிங் ஹெல்ப் அம்சமானது சீரியஸ் ஆன அல்லது மிகவும் தொழில்முறையான மெசேஜ்களை மட்டுமின்றி நகைச்சுவையான மெசேஜ்களையும் உருவாக்கும் இந்த புதிய அம்சத்தின் அறிமுகத்தின் வழியாக, வாட்ஸ்அப் பயனர்கள் சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற மற்ற டூல்களை பயன்படுத்துவதற்கு, பதிலாக, அதன் சொந்த ஆப்பில் உள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்கான மெசேஜ்களை எழுதுவார்கள் என்று வாட்ஸ்அப் நம்புகிறது.

கூடுதலாக, வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது தகவல் அல்லது தொடர்புடைய கன்டென்ட்டை சேமிக்காது என்றும், நீங்கள் வாட்ஸ்அப்பில் எழுத ரைட்டிங் ஹெல்ப் டூலின் உதவியை பயன்படுத்த முடிவு செய்தால் மட்டுமே ஏஐ பரிந்துரைகள் காண்பிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் வலியுறுத்துகிறது. இந்த அம்சம் செயல்பாடு இயக்கப்பட்டிருந்தால், பயனர் அனுப்ப விரும்பும் மெசேஜின் சில வார்த்தைகளை உள்ளிட்டவுடன், ஸ்டிக்கர் ஐகானுக்கு பதிலாக ஒரு சிறிய பேனா ஐகானை காண்பிக்கும்.

மேலும் இந்த புதிய ரைட்டிங் ஹெல்ப் ஏஐ அம்சமானது விருப்பத்தேர்வுக்குரியது மற்றும் இயல்பாகவே முடக்கப்பட்டுள்ளது என்பதையும் வாட்ஸ்அப் நிறுவனம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இந்த அம்சம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட மெசேஜில் மட்டுமே செயல்படும், உங்கள் முழு உரையாடலிலும் செயல்படாது; மேலும் உங்கள் அனுமதியின்றி ஏஐ உதவியுடன் உருவாக்கிய டெக்ஸ்ட்ல்களை ஒருபோதும் அனுப்பாது.

முன்னதாக வாட்ஸ்அப்ல் சேஃப்டி ஓவர்வியூ டூல் என்கிற புதிய அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது, இது உங்களுக்கு தெரியாத ஒருவர், அடையாளம் காண முடியாத ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் உங்களை சேர்க்கும்போது வேலை செய்ய தொடங்கும். சேஃப்டி ஓவர்வியூ டூல் ஆனது உங்களை க்ரூப்பில் சேர்த்த நபர், அந்த க்ரூப்பில் உள்ள மொத்த மெம்பர்களின் எண்ணிக்கை, அந்த க்ரூப்பை உருவாக்கியவரின் விவரங்கள் மற்றும் அந்த க்ரூப் உருவாக்கப்பட்ட தேதி ஆகிய அனைத்து தகவல்களை காண்பிக்கும்.

அந்த தகவல்களை மதிப்பாய்வு செய்து, அந்த க்ரூப்பில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது வெளியேற விரும்புகிறீர்களா என்பதை பயனர்கள் முடிவு செய்யலாம். சேஃப்டி ஓவர்வியூ டூல் வழங்கும் தகவல்களின் வழியாக, குறிப்பிட்ட க்ரூப் உங்களுக்கு பரீட்சியமானதாக இருந்தால், மேலும் விவரங்களுக்கு அந்த க்ரூப்பின் சாட்களை பார்க்கலாம். வெளியேற விரும்பினால், அந்த க்ரூப்பில் உள்ள எந்த மெசேஜ்களையுமே பார்க்காமல் க்ரூப்பில் இருந்து வெளியேறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Introduced New AI Feature Writing Help Which Helps Users To Edit Rewrite Modify Messages
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X