Home
News

இது ரொம்ப கட்டாயம்- வாட்ஸ்அப்-ல் மறைந்திருக்கும் மூன்று முக்கிய அம்சங்கள் தெரியுமா?- இனி தனித்து தெரியலாம்!

வாட்ஸ்அப்பில் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று வாட்ஸ்அப்பில் சேட் செய்யும் போது பயன்படுத்தப்படும் ஸ்ட்ரைக் த்ரூ அம்சமாகும். வாட்ஸ்அப் பயன்பாட்டில் மறைந்திருக்கும் மூன்று அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாட்ஸ்அப்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாட்ஸ்அப்

சமூகவலைதள பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகவலைதளங்களில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். டெலிகிராம், சிக்னல் என பல போட்டியிடும் தளங்கள் வந்தாலும் அசைக்க முடியாத செயலியாக இருக்கிறது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் பயனர்களின் தேவை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்யும் புது அம்சங்களும் வாடிக்கையாளர்களை தக்கவைக்க ஒரு காரணமாகும். வாட்ஸ்அப் தளத்தை பயன்படுத்தும் பலரும் அதை மேலோட்டமாக பயன்படுத்துவார்களே தவற அதில் இருக்கும் முழு அம்சங்களையும் விரிவாக அறிந்துக் கொள்வது இல்லை. வாட்ஸ்அப் தளத்தில் இதுபோன்ற சுவாரஸ்ய அம்சங்களை பயன்படுத்துவதன் மூலம் இது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடையே தனித்து நிற்க உதவும். வாட்ஸ்அப் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மூன்று அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஸ்ட்ரைக்த்ரூ டெக்ஸ்ட்

ஸ்ட்ரைக்த்ரூ டெக்ஸ்ட்

வாட்ஸ்அப் தளத்தில் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று வாட்ஸ்அப் சேட்டிங் பயன்படுத்தும் போது உபயோகமாகும் ஸ்ட்ரைக்த்ரூ அம்சமாகும். ஸ்ட்ரைக்த்ரூ அம்சமானது நோட்புக்கில் எழுதும் போது பயன்படுத்தப்படும் அம்சம் போன்றதாகும். இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைக்கு மேலே ஒரு கோட்டைக் கூட வரையலாம். ஸ்ட்ரைக் த்ரூ அம்சம் பொதுவாக ஏதாவது எழுத்துப்பிழை, புறக்கணிக்க வேண்டிய வார்த்தைகளை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

இட்டாலிக் டெக்ஸ்ட்

இட்டாலிக் டெக்ஸ்ட்

தாங்கள் பயன்படுத்தும் டெக்ஸ்ட்களில் இந்த இட்டாலிக் டெக்ஸ் பயன்பாட்டை பயன்படுத்தும் போது இது தனித்து வார்த்தைகளை காட்ட உதவும். வாட்ஸ் அப் அதன் பயனர்களை மிகவும் எளிமையான முறையை பயன்படுத்தி சாய்வு எழுத்து (இட்டாலிக் டெக்ஸ்ட்) பயன்படுத்த அனுமதிக்கிறது. சாய்வு எழுத்தை பயன்படுத்த பயனர்கள் உரையில் ஒவ்வொரு பக்கத்திலும் அடிக்கோடினை பயன்படுத்த வேண்டும்.

போல்ட் எழுத்துகள்

போல்ட் எழுத்துகள்

உரையை போல்ட் எழுத்துகள் மூலம் பயன்படுத்தும் போது அந்த வார்த்தையை தனித்து காட்டுவதோடு அதன் முக்கியத்துவத்தை காட்ட அனுமதிக்கிறது. அதேபோல் இந்த போல்ட் டெக்ஸ்ட் அம்சத்தை பயன்படுத்தி உரைக்கு தலைப்பை வைக்க பயன்படுத்தலாம். எழுத்துகளை போல்ட் ஆக மாற்ற பயனர்கள் உரையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு ஸ்டாரை வைக்கலாம். *வார்த்தை* இப்படி செய்வதன் மூலம் வார்த்தையை போல்ட் ஆக்கலாம்.

செய்திடல் தளமான வாட்ஸஅப்

செய்திடல் தளமான வாட்ஸஅப்

மெட்டாவுக்கு சொந்தமான செய்திடல் தளமான வாட்ஸஅப், அதன் பயன்பாடு மற்றும் இணைய பதிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி புதுப்பித்து வருகிறது. அதன்படி வாட்அப் தளத்தில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் புதிய ஐந்து அம்சங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் காணாமல் போகும் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலாமான செய்தியிடம் தளமாக இருந்து வருகிறது. வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமான என கூறப்படுகிறது. தகவல் தொடர்பு, வணிக பயன்பாடு தொடர்பான நடவடிக்கை பலவற்ற தேவைகளுக்கு என தளம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு புதுப்புது அம்சங்கள்

பல்வேறு புதுப்புது அம்சங்கள்

வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல நன்மைகளை வழங்கி வருகிறது. அதேபோல் பயனர்கள் தேவை அறிந்து புதிய அம்சங்களை புதுப்பித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் இமேஜ் எடிட்டர், மறைந்த வரும் செய்திகள், குரல் குறிப்புகளின் வேகம் போன்ற மிக தேவையான பல அம்சங்களை அறிமுகம் செய்தது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் தகவல் குறித்து பார்க்கலாம்.

தாமாக மெசேஜ் மறையும் வசதி

தாமாக மெசேஜ் மறையும் வசதி

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு மறைந்து போகும் மெசேஜ்களை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் இயக்கப்பட்டால் சேட்டிங் பயன்பாட்டில் இருந்து மெசேஜ் தாமாகவே நீக்கப்படும். இந்த நிலையில் வாட்ஸ் அப் தாமாக மெசேஜ் மறையும் வசதி குறுகிய காலம் மட்டும் இருந்த நிலையில் தற்போது இது 90 நாட்கள் அம்சத்தோடு வழங்கப்போகிறது என தகவல்கள் தெரிவிக்கிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Hidden Features: How to type italics text, bold text and strikethrough
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X