மீண்டும் சர்ச்சையில் சிக்கிய வாட்ஸ் ஆப்.! ஹேக் செய்யப்பட்டது உண்மை அதிர்ச்சி தகவல்.!
நடப்பு மக்களவை தேர்தலில் பரப்புரை தகவல்களை ஒரே நேரத்தில் அதிகப்படியான பயனர்களுக்குத் திருட்டுத்தனமாக ஹேக் செய்யப்பட்டுப் பகிரப்பட்டுள்ளது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடப்பு மக்களவை தேர்தலில் பரப்புரை தகவல்களை ஒரே நேரத்தில் அதிகப்படியான பயனர்களுக்குத் திருட்டுத்தனமாக ஹேக் செய்யப்பட்டுப் பகிரப்பட்டுள்ளது தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரப்புரை தொடர்பான தகவல்கள் அதிகப்படியாகப் பகிரப்பட்டுள்ள இந்த சர்ச்சை தற்பொழுது புது பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

5 நபர் ஃபார்வேர்ட் விதி
வாட்ஸ் ஆப் செயலில் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 5 நபர்களுக்கு மேல் மெசேஜ்கள் ஃபார்வேர்ட் செய்ய இயலாது என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் முன்பே விதி ஒன்றை அமல்படுத்தியது. போலி செய்திகள் அதிகம் பகிரப்படாமல் இருப்பதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் இந்த விதியை அறிமுகம் செய்தது.

ராய்ட்டர் நிறுவனம் அறிவிப்பு
ஆனால் நடைபெற்ற மக்களவை தேர்தலில், வாட்ஸ் ஆப் போன்றிருக்கும் ஜிபி வாட்ஸ் ஆப், ஜேடி வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் வழி அதிகப்படியான பரப்புரை தகவல்கள் ஒரே நேரத்தில் பகிரப்பட்டுள்ளதாக ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1000 நபர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் மெசேஜ்கள்
குறிப்பாக பிஸ்ஸினஸ் செண்டர் என்ற சாப்ட்வேர் பயன்படுத்தி, வாட்ஸ் ஆப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்ட 5 நபர் ஃபார்வேர்ட் விதியை ஹேக் செய்து 1000 நபர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் மெசேஜ்கள் பகிரப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கலில் வாட்ஸ் ஆப்
இதனால் அதிகப்படியான வாக்காளர்களை வாட்ஸ் ஆப் மூலம் கவர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுக்க வேண்டும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விதிமீறலுக்கு வாட்ஸ் ஆப் என்ன பதிலளிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








