சத்தமின்றி வாட்ஸ்அப்-ல் இருந்து நீக்கப்பட்ட பிரபலமான வசதி.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும், இந்த செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை சேர்த்த வண்ணம் உள்ள அந்நிறுவனம். இந்நிலையில் பல மாதங்களாக டெவலப்மெண்டில் இருந்த ஒரு பிரபலமான வசதி நீக்கப்பட்டுள்ளது.

2018 முதல் டெவலப்மெண்ட்டில் இருந்து

அதன்படி கடந்த சில மாதங்களில் நீங்கள் வாட்ஸ்அப் அப்டேட் செய்தீர்கள் என்றால் Vacation என்ற ஒரு அம்சம் சோதிக்கப்படுவதை பார்திருக்கலாம். இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் மொபைல் பயன்பாட்டுக்கான இந்த அம்சம் 2018 முதல் டெவலப்மெண்ட்டில் இருந்து வருகிறது.

இருந்து மறைந்து விடும்

அதாவது ஒருவரின் சாட்டை ஆர்ச்சிவ் செய்து வைத்தால் வாட்ஸ்அப்பில் இருந்து மறைந்து விடும். ஆனால் மீண்டும் அந்த நபர் உங்களுக்கு மெசேஜ் செய்தால் அந்த சாட் ஆனது ஆர்ச்சிவில் இருந்து முற்றிலும் வெளியே வந்துவிடும். இந்த

பிரச்சினையை தவிரிக்க வெக்கேஷன் மோடை ஆன் செய்துவிட்டால் ஆச்சிவில் இருக்கும் நபர்களின் மெசேஜ்கள் ஆர்ச்சிவ்லேயே சேமிக்கப்படும்.

சத்தமில்லாமல் நீக்கப்பட்ட போர்ட்நைட் கேம்.! ரசிகர்கள் வருத்தம்! என்ன காரணம்?

வெக்கேஷன் மோட் வசதியை

இந்த நிலையில் வெக்கேஷன் மோட் வசதியை அறிமுகப்படுத்திய WABetalinfo தளம் ஆனது தற்போது அந்த வசதியை முற்றிலும் நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் நீண்டகாலமாக சோதனை முறையில் இயங்கிவந்த வெக்கேஷன் மோட் இனி வாட்ஸ்அப்பில் செயல்படாது என்று கூறியுள்ளது.

 புதிய புதிய செயலிகள்

மேலும் இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு புதிய புதிய செயலிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இன்ஸ்டாகிராம் தளத்திலும் டிக்டாக் போன்ற ரீல்ஸ் வசதியை கொண்டுவர அந்நிறுவனம் முயற்சி செய்துவருகிறது.

5000எம்ஏஎச் பேட்டரியுடன் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விபரங்கள்.!

வீடியோக்கள் மற்றும் பலவற்றை

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை கண்டறிய பயனர்களை அனுமதிக்கும் புதிய பயன்பாடுகளில் ஷேர்சாட் செயலியும் ஒன்றாகும், இதுவும் கிட்டத்தட்ட டிக்டாக் போன்ற செயல்படும் என்றுகூறலாம். தற்சமயம் வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர்சேட்டை ஒருங்கிணைப்பதில் இப்போது செயல்பட்டு வருகிறது.

BetaInfo இரண்டு

தற்போது வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் புதிய அம்சத்தை கண்ட WABetaInfo இரண்டு ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளது. மேலும் இதன் தோற்றத்திலிருந்தே நமக்கு தெரிவது என்னவென்றால், ஷேர்சாட் வீடியோக்களுக்கு ஒரு பிரத்யேக பிளேயரைக் கொண்டிருப்பதில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. இதே போன்ற ஒன்றை நாம் ஏற்கனவே யூடியூப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களுக்கு பார்த்திருக்கிறோம்.

ஷேர்சாட் வீடியோக்கள் மற்றும்

குறிப்பாக ஷேர்சாட் வீடியோக்கள் மற்றும் படங்களுக்கான வாட்ஸ்அப் ஒரு பிக்சர்-இன்-பிக்சர் (PiP)பயன்முறையைக் கொண்டிருக்கும் என்றும், PiP பயன்முறை தனிப்பட்ட அரட்டை மற்றும் குரூப்களில் பாப்-அப் செய்யப்படும் தனி ஒரு சாளரத்தில் வீடியோக்களை இயக்க அனுமதிக்கும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்-ன் பிரதான பக்கத்திற்கு திரும்பும்போது கூட தொடர்ந்து இயங்குவதற்கு PiP பயன்முறை வீடியோவை ஆதரிக்கிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,பயனர் ஒருவர் ஷேர்சாட்டில் இருந்து வீடியோவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்தால் ரிசீவர் இந்த வீடியோவை வாட்ஸ்அப்பிற்குள் தனித்தனியாக ஷேர்சாட்டைத் திறக்கமால் பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp has stopped developing this long-awaited feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X