இந்தியாவில் 2.2 மில்லியன் யூசர்களின் அக்கவுண்ட்களை நீக்கிய வாட்ஸ்அப் நிறுவனம்.! காரணம் என்ன?
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மற்ற செயலிகளை தனித்துவமான அம்சங்களுடன் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டு இந்த செயலி செயல்படுவதால் அதிக மக்கள் இதை பயன்படுத்துகின்றனர். அதேபோல் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை அனைத்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஆனாலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சிலர் போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். பின்பு இதை உண்மை என நம்பி பல்வேறு மக்கள் அப்படியே ஷேர் செய்து வருகின்றனர். எனவே இந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் தளங்களில் போலி தகவல்களை பரப்பி வருவதற்கு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.
அவ்ளோ சந்தோஷம் வேணாம்- பணம் கொடுக்கல மொபைல் லாக்: ஜியோபோன் நெக்ஸ்ட்டில் இருக்கும் டிவைஸ் லாக் அம்சம்!

அதிலும் வாட்ஸ்அப்பில் போலி அக்கவுண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்த வகை போலி அக்கவுண்ட்களை கொண்டு மக்கள் மத்தியில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுபோன்ற போலி அக்கவுண்ட்களை
வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது முடக்குகிறது.

அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 2.2 மில்லியன் வாட்ஸ்அப் யூசர்களின் அக்கவுண்ட்களை முடக்கி உள்ளது. அதாவது இந்த அக்கவுண்ட்கள் அனைத்தும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் விதிகளை மீறியதால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மற்ற வாட்ஸ்அப் யூசர்கள் சமர்ப்பித்த பாதுகாப்பு பற்றிய அறிக்கையின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்நிறுவனம் செயற்கை நுண்ணிறவு மூலம் வாட்ஸ்அப் யூசர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் செயலியில் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் மெசேஜிங் முறை இருப்பதால் மிகவும் பாதுகாப்பான வகையில் தகவல் பரிமாற்றம் செய்ய உதவுகிறது. பின்பு அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வருகிறது இந்நிறுவனம்.

வெளிவந்த தகவலின்படி, தடை செய்யும் பிரிவில் 309 அறிக்கைகளும், அக்கவுண்ட் சப்போர்ட் பிரிவில் 121 அறிக்கைகளும், பாதுகாப்பு பிரிவில் 32 அறிக்கைளும், புராடக்ட் சப்போர்ட் பரிவுகளில் 49 அறிக்கைகளும் வந்துள்ளன. எனவே இந்த அறிக்கையில் இடம்பெற்ற2,209,000 வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் முடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பயனர்களின் பாதுகாப்பை முதன்மையாக கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் கூறியுள்ளது. பின்பு கடந்த ஆகஸ்ட் மாதமும் இதுபோன்று பல வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் முடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications