Home
News

WhatsApp யூஸ் பண்ணுறீங்களா? உடனே கவனியுங்க மக்களே.. எச்சரிக்கும் காவல்துறை.. ஹேக்கரிடம் கைமாறும் கணக்குகள்..

வாட்ஸ்அப் (WhatsApp) யூஸ் பண்ணுறீங்களா? அப்போ கண்டிப்பா இந்த விஷயத்தை கவனியுங்க கட்டாயம் தெரிஞ்சுவச்சுகோங்க, எச்சரிக்கிறது காவல்துறை. இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை (new alert for WhatsApp users) செய்தி தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பல வாட்ஸ்அப் பயனர்களின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் (WhatsApp hacked) செய்யப்பட்டு வருகிறது. சாமானிய மக்கள் முதல் முக்கியமான பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகள் கூட ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால், புதிய எச்சரிக்கை நடவடிக்கையை ஹரியானா போலீஸ் எடுத்துள்ளது.

வாட்ஸ்அப் (WhatsApp) என்பது இப்போது எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஒரு தினசரி இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமாக மாறிவிட்டது. இந்தியாவில் இப்போது வாட்ஸ்அப் தளத்தை பலகோடி மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் ஒரு முக்கியமான தளமாக வாட்ஸ்அப் மாறியதால், ஹேக்கர்களின் கவனம் இப்போது வாட்ஸ்அப் மீது பதிந்துள்ளது. ஹேக்கர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான தளமாகவும் வாட்ஸ்அப் மாறியுள்ளது.

WhatsApp யூஸ் பண்ணுறீங்களா? உடனே கவனியுங்க மக்களே.. எச்சரிக்கை..

WhatsApp யூஸ் பண்ணுறீங்களா? உடனே கவனியுங்க மக்களே.. எச்சரிக்கும் காவல்துறை:

சைபர் குற்றவாளிகள் மற்றும் சைபர் தாக்குதலை ஏற்படுத்தும் ஹேக்கர்களால் வாட்ஸ்அப் இப்போது தொடர்ந்து பல சிக்கலை சந்தித்து வருகிறது. இதனால் வாட்ஸ்அப் பயனர்கள் பலரும் அவர்களின் வாட்ஸ்அப் கணக்கு மூலமாகவே மோசடி செய்யப்பட்டு வருகிறார்கள். இதை தடுக்க மக்கள் சில முக்கியமான விஷயங்களை கருத்தில்கொள்ள வேண்டுமென்று ஹரியானா காவல்துறை எச்சரித்துள்ளது.

ஒருவேளை உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் சில எச்சரிக்கை தகவல்களை வெளியிட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டால், அதை எப்படி ஹேக்கரின் பிடியில் இருந்து மீண்டும் மீட்டெடுக்கலாம் என்பதை பற்றி தெளிவாக இப்போது பார்க்கலாம். இது இன்று உங்களுக்கு பயனில்லாத ஒரு விஷயமாக தோன்றினாலும், கட்டாயம் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் கைகொடுக்கும் என்பதனால் இதை தெரிந்துகொள்ளுங்கள்.

1. அன்இன்ஸ்டால் வாட்ஸ்அப் (Uninstall WhatsApp):
உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று நீங்கள் சந்தேகித்தால், உடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து வாட்ஸ்அப் (WhatsApp) பயன்பாட்டை அன்இன்ஸ்டால் செய்வது தான். இது உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் ஹேக்கரின் உடனடி அணுகலைத் துண்டிக்க உதவுகிறது.

2. சிம் கார்டை உடனே வெளியில் எடுக்கவும் (Remove your SIM card):
உங்கள் போனில் இருக்கும் பிஸிக்கல் சிம் கார்டை உடனே போனில் இருந்து தனியாக பிரித்து எடுக்கவும். 2 சிம் கார்டுகளை பயன்படுத்தினால், எந்த வாட்ஸ்அப் கணக்கின் எண் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று சந்தேகிக்கப்படுகிறதோ அதற்கு இணக்கமான சிம் கார்டை பிரித்தெடுக்கவும்.

3. வைஃபை பயன்படுத்தி வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்யவும் (Reinstall WhatsApp via Wi-Fi):
பாதுகாப்பான வைஃபை இணைப்புடன் உங்கள் ஸ்மார்ட்போனை இணைத்து, அதில் வாட்ஸ்அப் பயன்பாட்டை இன்ஸ்டால் செய்யவும்.

4. பியூச்சர் போனில் சிம் கார்டை சொருகவும் (Insert SIM into a feature phone):
கீபேட் உடன் இயங்கும் ஒரு பேசிக் மொபைல் போனில், நீங்கள் வெளியே எடுத்த சிம் கார்டை சொருகி பயன்படுத்தவும்.

5. கால் வெரிஃபிகேஷன் அம்சத்தை கிளிக் செய்யவும் (Grant call permission for verification):
உங்கள் ஸ்மார்ட்போனில் இப்போது வாட்ஸ்அப் பயன்பாடு உங்கள் சிம் கார்டு இல்லாமல் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. இதனால், வெரிஃபிகேஷன் செய்யும் படி வாட்ஸ்அப் உங்களை வலியுறுத்தும். இப்போது நீங்கள் "Call me" என்ற விருப்பத்தை கிளிக் செய்து, வெரிஃபிகேஷன் கோட்காக முன்மொழியலாம்.

6. பியூச்சர் போனிற்கு வரும் வெரிஃபிகேஷன் கோட் எண் (Retrieve verification code on feature phone):
உங்கள் பியூச்சர் போனிற்கு அழைப்பு மூலம் வெரிஃபிகேஷன் கோட் கூறப்படும்.

7. ஸ்மார்ட்போனில் வெரிஃபிகேஷன் கோட் எண் (Enter code on Smartphone):
இப்போது உங்களுக்கு கிடைத்த வெரிஃபிகேஷன் கோட் எண்களை கவனமாக வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனில் பதிவிடவும்.

8. உங்களை போனை ரீஸ்டார்ட் செய்யவும் (Restart your phone):
உங்கள் ஸ்மார்ட்போனை இப்போது ரீஸ்டார்ட் செய்யவும்.

9. வாட்ஸ்அப் அக்கௌன்ட் ரெக்கவரி (WhatsApp account recovery):
இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் உங்கள் WhatsApp கணக்கை பாதுகாப்பாக அணுகவும் பயன்படுத்தவும் முடியும்.

இந்த செயல்முறையை பின்பற்றி உங்கள் வாட்ஸ்அப் கணக்கு மற்றவர் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம் என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp Hacked Alert To All Indian WhatsApp Users By Haryana Police How To Recover Hacked WhatsApp Account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X