Home
News

வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, அதுவும் அட்மினாக இருந்தால் பாவம்.!

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படம் தொடங்கி ஜல்லிகட்டு போராட்டம் வெடித்து மெரினாவில் கூடிய மாணவர்கள் கூட்டத்தினுள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று எல்லா போலியான தகவல்களும் வாட

By Muthuraj

பார்வேர்ட் மெசேஜ்கள் என்னென்ன செய்யும் என்பதற்கானஎடுத்துக்காட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையே இல்லை. அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் புகைப்படம் தொடங்கி ஜல்லிகட்டு போராட்டம் வெடித்து மெரினாவில் கூடிய மாணவர்கள் கூட்டத்தினுள் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று எல்லா போலியான தகவல்களும் வாட்ஸ்ஆப் மூலமே பரவின..

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களைப் போலவே நீங்களும் இருந்தால், அநேகமாக நீங்கள் பல வாட்ஸ்ஆப் க்ரூப்களின் ஒரு பகுதியாக இருப்பீர்கள். மற்றும் அதன் மூலம் ஒவ்வொரு நாளும் நீங்கள் நூற்றுக்கணக்கான செய்திகளைப் பெறுவீர்கள்.

எரிச்சலூட்டும்

எரிச்சலூட்டும்

அப்படியாக நீங்கள் பெறும் இந்த வாட்ஸ்ஆப் செய்திகள் பெரும்பாலும் உங்களுக்கு பாதிப்பில்லாதவைகள் தான் என்றாலும் கூட சிலர் அவற்றை எரிச்சலூட்டும் ஒன்றாக கருதுகிறார்கள் என்பதும் வெளிப்படை. முக்கியமாக பார்வேர்ட் மெஸேஜ்கள் - சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்மில் பலரையு க்ரூப்பை விட்டே வெளியற வைத்துள்ளது என்பதை நாம் ஒற்றுக்கொண்டே தீர வேண்டும். அங்குதான் முளைத்துள்ளது புதியதொரு சிக்கல்.!

சிக்கல்

சிக்கல்

வாட்ஸ்ஆப் பயனர்கள் இனி க்ரூபில் பார்வேர்ட் மெஸேஜ் ஒன்றை அனுப்பும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துப் பாருங்கள், இல்லையெனில் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ளும் நீங்களும், குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினும் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

கூட்டு உத்தரவின் கீழ்

கூட்டு உத்தரவின் கீழ்

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் கீழ் வாரணாசி மாவட்ட நீதிபதி யோகேஷ்வர் ராம் மிஸ்ரா மற்றும் போலீஸ் கண்காணிப்பாளர் நிதின் திவாரி ஆகியோரால் வழங்கப்பட்ட ஒரு கூட்டு உத்தரவின் கீழ், சமூக ஊடக குழுவில் ஏதேனும் ஒரு தவறான, வதந்தி அல்லது தவறான தகவல் வெளியானால் அது பெருங்குழப்பதை ஏற்படுத்துகின்ற காரணத்தினால் அம்மாதிரியான ஈடுபடும் க்ரூப் அட்மினுக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவை நிகழ்த்தலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வதந்தி கிளம்பினால்

வதந்தி கிளம்பினால்

ஒரு வாட்ஸ் ஆப் குழு உறுப்பினரால் போலி அறிக்கை வெளியானால் அதன் மூலம் மதம் சார்ந்த திணறல் அல்லது வதந்தி கிளம்பினால் குறிப்பிட்ட குழுவில் உள்ள குழு நிர்வாகி அதை மறுக்க வேண்டும் மற்றும் அம்மாதிரியான தகவலை வெளியிடுவோர்களை குழுவிலிருந்து நீக்க வேண்டும்.

அட்மினுக்கு எதிராகவும்

அட்மினுக்கு எதிராகவும்

அதை நிகழ்த்த தவறினால் குழு நிர்வாகியின் செயலற்ற தன்மை காரணமாக குறிப்பிட்ட குற்றத்தில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு, ஆக குறிப்பிட்ட குழு அட்மினுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் "என வெளியான அறிக்கை கூறுகிறது.

புகார்

புகார்

அதுமட்டுமின்றி, இதுபோன்று கிளம்பும் போலியான தகவல்கள் கிடைத்ததும் அது பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும் அப்போது தான்ஆரம்பத்திலேயே போலி செய்திகள் ஒடுக்கபப்டும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

குறுக்கு சோதனை

குறுக்கு சோதனை

சமூக ஊடகங்களில் பல குழுக்கள் செய்தி ஊடக குழுக்கள் என்றும் செய்திகளை மற்றும் தகவல்களை உடனுக்குடன் பகிரும் குழுக்கள் என்ற பெயரின் கீழ் நம்பக தன்மையற்ற தகவல்களை பரப்பி விடும் ஒரு குழுக்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. அதாவது சுருக்கமாக இந்தத் குறுக்கு சோதனையும் இல்லாமல் கிடைத்த தகவலை அப்படியே பரப்பும் குழுக்கள்.

சட்ட நடவடிக்கை

சட்ட நடவடிக்கை

இதனையெல்லாம் மனதிற்கொண்டு கடந்த புதனன்று வெளியிடப்பட்ட ஆணையின் கீழ், "சமூக ஊடகத்தில் வெளிப்பாடு சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அவைகள் பொறுப்புடன் இருப்பதும் அவசியம். குறிப்பாக மத உணர்வுகளை காயப்படுத்தும் எந்த விதமான பதிவுகளும் தவறான செய்திகளும் பரப்பப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படும்" என்று நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாயம் பரிசீலிக்கப்பட வேண்டும்

கட்டாயம் பரிசீலிக்கப்பட வேண்டும்

இவ்வகை குற்றங்கள் சைபர் குற்ற சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் ஐபிசி ஆகியவற்றின் கீழான விதி மீறிகளின் பெயரில் வழக்கு தாக்கல் செய்யப்படும். அதுமட்டுமின்றி நடவடிக்கை தொடங்குவதற்கு உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு உயர் நீதிமன்றங்களிடம் கட்டாயம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் இந்த உத்தரவு தெளிவுபடுத்துகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் எண்ணை ப்ரைவேட் நம்பராக மாற்றுவது எப்படி..?

Best Mobiles in India

English summary
WhatsApp Group Admins Legally Responsible for Shared Posts. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X