கண்மூடித்தனமான வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, வருகிறது Restricted Groups.!

இனி யாரெல்லாம் செய்திகளை அனுப்புகிறார்களோ அவர்களின் மீது அட்மினால் ஒரு கண் வைத்திருக்க முடியும்.

|

வாட்ஸ்ஆப் நிறுவனம் பொதுவான முறையில் பல புதிய அம்சங்களை மாதந்தோறும் அறிமுகம் செய்தாலும் கூட, வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான மேம்படுத்தல்களை மிகவும் தாமதமான இடைவெளியில் தான் உறுத்துகிறது என்பதை நான் அறிவோம். அப்படியான ஒரு தாமதமான மேம்படுத்தலை தான் வாட்ஸ்ஆப் தற்போது நிகழ்த்தியுள்ளது.

வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கு ஆப்பு, வருகிறது Restricted Groups.!

ஒரு சக்தி வாய்ந்த ஊடக கருவியாக மாறிவிட்ட வாட்ஸ்ஆப்பின் பயனர்கள் - தனியார், சமூகம் மற்றும் தொழில்முறை என பல்வேறு வகையான வாட்ஸ்ஆப் க்ரூப்களில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் "வாட்ஸ்ஆப் க்ரூப்" ஆனது நேர்த்தியான முறையில் கையாளப்படவில்லை என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இடையே வாட்ஸ் ஆப் க்ரூப்களில் சில கட்டுப்பாடு அம்சங்கள் உருட்டப்படவுள்ளன.

எல்ஜி வைட் ஸ்க்ரீன் டெக்னலாஜி: இனி வேற லெவல் கேமிங் அனுபவம் உறுதி.!எல்ஜி வைட் ஸ்க்ரீன் டெக்னலாஜி: இனி வேற லெவல் கேமிங் அனுபவம் உறுதி.!

ஒரு கண் வைத்திருக்க முடியும்

ஒரு கண் வைத்திருக்க முடியும்

தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய அறிக்கையின்படி, வாட்ஸ்ஆப் நிறுவனம் அதன் வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின்களுக்கு அதிக கட்டுப்பாடு சக்திகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, இனி யாரெல்லாம் செய்திகளை அனுப்புகிறார்களோ அவர்களின் மீது அட்மினால் ஒரு கண் வைத்திருக்க முடியும்.

ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ்

ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ்

வாட்ஸ் ஆப் பயன்பாட்டின் பீட்டா கட்டமைப்பை அடிப்படையாக வெளிவரும் புதிய அம்சங்களை பற்றிய லீக்ஸ் தகவல்களை வெளியிடும் வலைத்தளமான வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, வாட்ஸ்ஆப்பில் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்ஸ் ' என்கிற பெயரின் கீழ் புதிய அம்சம் அறிமுகமாகவுள்ளது.

செய்தியை அனுமதிக்கலாமா.?

செய்தியை அனுமதிக்கலாமா.?

இந்த அம்சத்தினை கொண்டு ஒரு வாட்ஸ்ஆப் அட்மினால் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமான சில சலுகைகள் வழங்க முடியும். உடன் க்ரூப்பில் ஒரு குறியிட்ட செய்தியை அனுமதிக்கலாமா.? அல்லது வேண்டாமா என்பதை கூட அட்மின்களால் கட்டுப்படுத்தப்பட முடியுமென வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கை அறிவித்துள்ளது.

குழுவை விட்டு நீக்காமலேயே..

குழுவை விட்டு நீக்காமலேயே..

குறிப்பாக வாட்ஸ்ஆப் குழுவின் அம்சத்தை தவறாகப் புரிந்து கொண்ட உறுப்பினர்களை, குழுவை விட்டு நீக்காமலேயே அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உரையாடல்களை அல்லது விவாதங்களை நிகழ்த்தும் திறனும் கூறப்படும் 'ரெஸ்ட்ரிக்டட் க்ரூப்' அம்சத்தில் இடம்பெறலாம்.

வாட்ஸ்ஆப் பதிப்பு 2.17.430 வெர்ஷன்

வாட்ஸ்ஆப் பதிப்பு 2.17.430 வெர்ஷன்

மேலும் வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கையின்படி, வரையறுக்கப்பட்ட குழுக்கள் என்கிற இந்த அம்சம் ஏற்கெனவே வாட்ஸ்ஆப் பதிப்பு 2.17.430-இன் ஒரு பகுதியாக உள்ளது மற்றும் இது கூகுள் பிளே ஸ்டோர்மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மிகவும் வரவேற்கத்தக்கது

மிகவும் வரவேற்கத்தக்கது

போலியான அல்லது தவறான செய்திகள், தீங்கிழைக்கும் அல்லது வெறுப்பு நிறைந்த செய்திகள் அல்லது வன்முறை மிக்க மற்றும் ஆபாச வீடியோக்களை மிகவும் வேகமான முறையில் பரப்ப வாட்ஸ்ஆப் க்ரூப் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடையே அறிமுகமாகவுள்ள இந்த கட்டுப்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை.

Best Mobiles in India

English summary
WhatsApp group admins to get more power, ability to restrict messages from other members. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X