கருத்து மோதல்: வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை.!

இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது யார் என்றே போட்டியேஇந்த கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

|

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் செயலியை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பல்வேறு வேலைகளுக்கு இந்த வாட்ஸ்ஆப் செயலி மிக அருமையாக உதவுகிறது. இருந்தபோதிலும் பேஸ்புக் போன்ற பல்வேறு சிக்கல்களை தற்சமயம் வாட்ஸ்ஆப் கொண்டுவருகிறது.

கருத்து மோதல்: வாட்ஸ்ஆப் குழு அட்மின் அடித்துக் கொலை.!

அதன்படி ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோனாபட் என்ற ஊரில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் வாட்ஸ்ஆப் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதில் குரூப்பின் அட்மினாக லவ் ஜோஹர் என்ற 28 வயது இளைஞர் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த ஞாயிறு:

கடந்த ஞாயிறு:

மேலும் லவ் ஜோஹர் மற்றும் அவரது சகோதரர் அஜய் ஆகியவரும் கடந்த ஞாயிறு அன்று இரவு உணவகம ஒன்றிக்கு சென்றுள்ளனர்.
அப்போது லவ் ஜோஹர் அவரது வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதன்பின்பு அந்த புகைப்படத்தால் குரூப்பில்
இருக்கும் தினேஷ் என்பவருக்கும் ஜோஹருக்கும் இடையே வாட்ஸ் அப் குரூப்பில் அதிக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தினேஷ் :

தினேஷ் :

இந்தப் பிரச்சணையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தினேஷ் தனது வீட்டிற்கு வறுமாறு கூறியுள்ளார், அதன்பின்பு ஜோஹர் மற்றும் அவருடைய 3 சகோதர்களும் அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்ப்பட்டுள்ளது.

 6 நபர்கள்:

6 நபர்கள்:

அன்பின்பு தினேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 6 நபர்கள் சேர்ந்து ஜோஹர் மற்றும் அவரது சகோதரர்களை கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜோஹர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார், பின்னர் அவரது 3 சகோதரர்களுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது.

தலைமறைவு:

தலைமறைவு:

இந்த சம்பவம் நடந்துமுடிந்த பின்னர் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். அதன்பின்பு தினேஷ்
குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதிகாரம்:

அதிகாரம்:

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் கூறும்போது குறிப்பிட்ட சமூகத்தில் அதிகாரம் செலுத்துவது யார் என்றே போட்டியே இந்த கொலைக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
WhatsApp group admin killed after fight over message turns violent in Sonepat : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X