உங்க மெசேஜ் உங்க உரிமை: "Delete for everyone" நேரத்தை நீட்டிக்கும் whatsapp: பயனர்கள் குஷி!

|

மெட்டாவுக்கு சொந்தமான பிரபல செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், அதன் பயனர்களின் தேவையறிந்து சமீப காலமாக தொடர்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பயன்பாட்டை எளிதாக்குவதற்கும் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பை பூர்த்தி செய்வதற்கும் வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும். அதன்படியான ஒரு தகவலை தான் பார்க்கப் போகிறோம்.

Delete For Everyone என்ற பிரதான அம்சம்

Delete For Everyone என்ற பிரதான அம்சம்

வாட்ஸ்அப் நிறுவனம் 2018 இல் அனைவருக்கும் நீக்கு (Delete For Everyone) என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் இந்த சேவை அறிமுகம் செய்த போது இதன் வரம்பு 7 நிமிடங்களாக வழங்கப்பட்டது. தொடர்ந்து Delete For Everyone வரம்பு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டது.

டெலிட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

டெலிட் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜை 1 மணிநேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளுக்குள் தற்போதுவரை டெலிட் செய்யலாம். இந்த நிலையில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய புதுப்பிப்பின் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜை 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரத்துக்குள் டெலிட் செய்யலாம்.

சோதனையில் இருக்கும் பிரதான அம்சம்

சோதனையில் இருக்கும் பிரதான அம்சம்

WABetaInfo இன் அறிக்கையின்படி, வாட்ஸ்அப் ஒரு சில பீட்டா பயனர்களுக்கு இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை iOS இல் உள்ள பீட்டா பயனர்கள் மட்டுமே சமீபத்திய புதுப்பிப்பைப் பயன்படுத்த முடியும். மேலும் தளத்தின் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Delete for Everyone செயல்பாட்டிற்கான நேரம்

Delete for Everyone செயல்பாட்டிற்கான நேரம்

Delete for Everyone செயல்பாட்டிற்கான நேரத்தை வாட்ஸ்அப் அதிகரித்து வழங்க இருக்கிறது. தற்போது வரை பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜை 1 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளுக்குள் டெலிட் செய்யலாம். தற்போது மெசேஜ்களை டெலிட் செய்யும் நேரம் நீட்டித்து வழங்கப்பட இருக்கிறது. இனி பயனர்கள் அனுப்பிய மெசேஜை 2 நாட்கள் 12 மணிநேரத்துக்கு பிறகும் டெலிட் செய்யலாம். இந்த அம்சம் பீட்டா பதிப்பில் சோதனையில் இருக்கிறது.

நேர வரம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே

நேர வரம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே

வாட்ஸ்அப் பயனராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக ஒன்று அல்லது அதற்கு மேலான குரூப்பில் இருப்பீர்கள். ஏன் குரூப் அட்மின்களாக கூட நீங்கள் இருக்கலாம். இந்த நிலையில் சில சமயங்களில் குரூப் அல்லது தனிநபருக்கு தவறுதலாக மெசேஜ்கள் அனுப்பும் பட்சத்தில், அதை நீக்குவதற்கான அம்சம் வாட்ஸ்அப் தளத்தில் இருக்கிறது. ஆனால் அதை நீக்குவதற்கான நேர வரம்பு என்பதும் அனைவரும் அறிந்ததே.

பயனர்களின் சிக்கலை தீர்க்க கூடுதல் நேரம்

பயனர்களின் சிக்கலை தீர்க்க கூடுதல் நேரம்

வாட்ஸ்அப் இல் தவறுதலாக அனுப்பப்படும் மெசேஜை நீக்குவதற்கான கால அவகாசத்தை கடந்துவிட்டால் அதை நீக்க முடியாது. இந்த சிக்கலை குறைக்க வாட்ஸ்அப் வழிவகை செய்திருக்கிறது. அதாவது மெசேஜ் டெலிட் செய்யும் நேரத்தை வாட்ஸ்அப் நீட்டித்து அறிவிக்க இருக்கிறது. தற்போது சோதனையில் இருக்கும் அம்சத்தின்படி ஒரு மெசேஜ் தவறுதலாகவோ தேவையில்லாமலோ அனுப்பும் பட்சத்தில் அதை டெலிட் செய்யும் கால வரம்பு 2 நாட்கள் மற்றும் 12 மணிநேரம் வரையில் வழங்கப்பட இருக்கிறது.

2 நாட்கள் 12 மணிநேரம் வரை அவகாசம்

2 நாட்கள் 12 மணிநேரம் வரை அவகாசம்

WABetaInfo தகவலின்படி, "Delete For Everyone" செயல்பாட்டுக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தை WhatsApp அதிகரிக்க இருக்கிறது. பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை தற்போதுவரை 1 மணிநேரம், 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளுக்குள் டெலிட் செய்யலாம். ஆனால் இந்த மெசேஜை நிரந்தரமாக நீக்குவதற்கு 2 நாட்கள் 12 மணிநேரம் வரை கால அவகாசம் வழங்கப்பட இருக்கிறது.

விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்

விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்

அதேபோல் இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்சன் 2.22.15.8 பதிப்பில் சோதிக்கப்பட்டு வருகிறது. அம்சத்தின் படி மெசேஜ்களை அனைவருக்கும் நீக்கும் டெலிட் ஃபார் எவ்ரி ஒன் அம்சத்துக்கான கால வரம்பு 2 நாட்கள் மற்றும் 12 மணி நேரம் வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பயனர்கள் சந்திக்கும் சிக்கலை தவிர்க்க இந்த கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் நீட்டித்து வழங்கப்பட இருக்கிறது.

குரூப் அட்மின்களுக்கு முழு அதிகாரம்

குரூப் அட்மின்களுக்கு முழு அதிகாரம்

அதேபோல் குரூப் அட்மின்களுக்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் குழுவில் யார் அனுப்பிய மெசேஜை வேண்டுமானாலும் குரூப் அட்மின் டெலிட் செய்யும்படியான அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் தற்போது WABetaInfo பதிப்பில் சோதனையில் இருக்கிறது. உதாரணமாக குழு உறுப்பினரை கலங்கடிக்கும் வகையில் யாராவது ஒருவர் குரூப்பில் மெசேஜ் அனுப்பினால் அதை அட்மின் டெலிட் செய்யலாம்.

விரைவில் அனைத்து இமோஜிகளும் செயல்பாட்டில்

விரைவில் அனைத்து இமோஜிகளும் செயல்பாட்டில்

அதேபோல் வாட்ஸ்அப்பில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 இமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குப்பட்டு வரும் நிலையில் விரைவில் அனைத்து இமோஜிகளும் ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்கப்பட இருக்கிறது. இந்த அம்சமும் சோதனையில் இருக்கிறது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்நாள் வரை வாட்ஸ்அப்பில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 இமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குப்பட்டு வந்த நிலையில் விரைவில் அனைத்து இமோஜிகளும் அனுமதிக்கப்பட இருக்கிறது. WABeta தகவலின்படி, Android 2.22.15.7-க்கான பீட்டா பதிப்பு மற்றும் iOS 22.14.0.71-க்கான பீட்டா பதிப்பில் அனைத்து இமோஜிக்கான அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது

லாஸ்ட் சீன் அம்சத்தில் செய்யப்பட இருக்கும் மாற்றம்

லாஸ்ட் சீன் அம்சத்தில் செய்யப்பட இருக்கும் மாற்றம்

அதேபோல் வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது கடைசியாக வாட்ஸ்அப் பயன்பாட்டை அனுகினோம் என்பதை பிறருக்கு காண்பிக்க பயன்படும் அம்சமாகும். இந்த அம்சம் இதுநாள் வரை அனைவருக்கும் காண்பிக்கும்படியாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் தேவையில்லாத பயனர்களிடம் இருந்து லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் படியாகவும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp going to give More time to Delete for everyone option

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X