சர்ப்ரைஸ் கொடுத்த WhatsApp: 1 இல்ல புதுசா 21 வந்துருக்கு.. ஓபன் பண்ணி பாருங்க தெரியும்.!

|

WhatsApp பீட்டா ஆண்ட்ராய்ட் பதிப்பில் 21 புதிய இமோஜிகள் மற்றும் 8 புதிய இமோஜி ஸ்கின் டோன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு இமோஜியும் அனைத்து பயனர்களுக்கும் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

21 புதிய இமோஜிகள்

21 புதிய இமோஜிகள்

WhatsApp நிறுவனம் புதிய பீட்டா பதிப்பை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிற்கும் வெளியிட்டுள்ளது. 2.22.25.12 என்ற எண்ணுடன் கூடிய புதிய பீட்டா அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இருவருக்கும் கிடைக்கிறது. இந்த அப்டேட்டில் 21 புதிய இமோஜிகள் இணைக்கப்பட்டுள்ளன.

WAbetainfo மூலம் இந்த தகவல் வெளியானது. புதிய இமோஜிகள் உடன் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ஸ்கின் டோன்களையும் இணைத்திருக்கிறது. தற்போது பீட்டா அப்டேட் பதிப்பில் 21 புதிய இமோஜிகளும் காட்டப்படுகிறது.

என்னென்ன இமோஜி தெரியுமா?

என்னென்ன இமோஜி தெரியுமா?

21 புதிய இமோஜிகளின் விவரங்கள் குறித்து மேலோட்டமாக பார்க்கலாம். வெளியான ஸ்க்ரீன் ஷாட்டின் படியே இந்த தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. ரோஸ் நிற ஹார்ட், லைட் ப்ளூ நிற ஹார்ட், லைட் பிளாக் நிற கார்ட், கழுதை, புறா, ஜெல்லி மீன், இஞ்சி, வைஃபை, பறவை முகம் என 21 இமோஜிகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஹைஃபை குறியீடும் சரியாக வழங்கப்பட்டிருக்கிறது.

சரியாக ஹைஃபை அனுப்பலாம்

சரியாக ஹைஃபை அனுப்பலாம்

இதுநாள் வரை ஹைஃபை என்றால் கையின் முன்புறம் காட்டப்படும் இமோஜியை தான் அனுப்பி இருப்போம். அது ஹைஃபை குறிக்கிறதா அல்லது போதும் நிறுத்து என்பதை குறிக்கிறதா என குழப்பம் ஏற்பட்டிருக்கும். இனி இந்த குழப்பம் தேவையில்லை. காரணம் சரியான முறையில் ஹைஃபைக்கு என்று தனி இமோஜி அனுப்பப்பட்டிருக்கிறது. வலது புறத்தை பார்த்தப்படி ஒரு கையும், இடது புறத்தை பார்த்தப்படி ஒரு கையும் என இரண்டு கைகள் இருக்கிறது. இனி ஹைஃபை அனுப்ப வேண்டும் என்றால் வலது புறத்தை பார்த்திருக்கும் கையை அனுப்பலாம். அதற்கு பதில் அளிக்கும் விதமாக இடது புறம் பார்த்த கையை அனுப்பினால் துல்லியமான ஹைஃபையை குறிக்கும்.

Message Yourself

Message Yourself

அதேபோல் WhatsApp இல் Message Yourself என்ற அம்சம் அறிமுகமாகிறது. இந்த அம்சமானது உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்ய அனுமதிக்கும் சேவை ஆகும். இந்த அம்சமானது உங்களுக்கு நீங்களே மெசேஜ்கள், கோப்புகள் மற்றும் மீடியாக்களை அனுப்ப அனுமதிக்கிறது. WhatsApp Message Yourself அம்சம் ஆனது Android மற்றும் iOS ஆகிய இரண்டு பயனர்களுக்கும் கிடைக்கும்.

வேறு நபருக்கு அனுப்ப வேண்டாம்

வேறு நபருக்கு அனுப்ப வேண்டாம்

வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை உலகளாவிய பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு நோட்ஸ்களையோ அல்லது குறிப்பிட்ட தகவலையோ டைப் செய்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மெசேஜ் பயன்பாட்டிற்கு சென்று டைப் செய்வோம். பின் அதை Draft இல் சேமித்து வைப்போம். இது சேமிக்கப்படுகிறதா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. சரி இதற்கு என்ன தான் வழி என்றால். அதை டைப் செய்து வேறு நபருக்கு அனுப்பி வைப்போம். ஆனால் இது அனைத்து தகவலுக்கும் சாத்தியமில்லை.

உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்யலாம்

உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்யலாம்

அனைத்து குறிப்புகளையும், ரிமைன்டர்களையும், முக்கிய தகவல்களையும் பிறருக்கு அனுப்பிக் கொண்டே இருக்க முடியாது, சரி இதை வாட்ஸ்அப் இல் டைப் செய்யலாம் என நினைத்தால் அங்கும் அதே நிலைமை தான். இந்த பிரச்சனை இனி இருக்காது. இதை தீர்க்கவே மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. இனி இது அனைத்தையும் டைப் செய்து உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்து கொள்ளலாம்.

அனைத்து பயனர்களுக்கும் புதிய அம்சம்

அனைத்து பயனர்களுக்கும் புதிய அம்சம்

அதேபோல் Message Yourself என்ற அம்சத்தின் மூலம் நோட்ஸ், ரிமைன்டர்கள் மட்டுமின்றி புகைப்படங்கள், வீடியோக்கள், ஃபைல்கள் என அனைத்தையும் அனுப்பலாம். இந்த அம்சம் மிகவும் பேருதவியாக இருக்கும். உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுக்கு கிடைக்கத் தொடங்கியதும் "You" என்ற தனி அரட்டை பிரிவு காட்டப்படும்.

அனைத்துக்கும் அப்டேட் அவசியம்

அனைத்துக்கும் அப்டேட் அவசியம்

வாட்ஸ்அப் இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சத்தை பெறுவதற்கு நீங்கள் உங்கள் ஆப் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை செக் செய்து கொள்ளவும். கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று வாட்ஸ்அப் என டைப் செய்தால் ஓபன் அல்லது அப்டேட் என காட்டப்படும். இதில் அப்டேட் என காட்டப்படும் பட்சத்தில் அதை அப்டேட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
WhatsApp going to give a surprise to users: Get Ready to Use 21 New Emojis!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X