இது பயனர்களுக்கு எதிரானது- "நாங்க கோர்ட்-க்கு போறோம்" மத்திய அரசு விதிகளை எதிர்த்து வழக்கு தொடுத்த வாட்ஸ் அப்!

|

சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள், செய்தி தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இந்த விதிகளை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.

மத்திய அரசின் புதிய விதிகள்

மத்திய அரசின் புதிய விதிகள்

இந்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளை செயல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பேஸ்புக், கூகுள், யூடியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தநிலையில், திடீர் திருப்பமாக பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி, மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மெசேஜிங் செயலிகள்

மெசேஜிங் செயலிகள்

மெசேஜிங் செயலிகளை தகவலை முதலில் உருவாக்கியவரை கண்டறிய நிர்பந்திக்கும் விதிகளை, தனியுரிமைக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்றும், இந்த விதிகள் வாடிக்கையாளர்களின் பிரைவசிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் மனுவில் குறிப்பிட்டுள்ளது.

எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்

எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்

மேலும், மத்திய அரசின் புதிய விதிகள் எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷனுக்கு விரோதமானது எனவும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள்

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள்

இந்திய அரசு இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021-ன் கீழ் செயல்படாத காரணத்தால் இன்று முதல் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஓடிடி தளங்கள் மே25 முதல் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. டுவிட்டர், பேஸ்புக் போன்ற குறிப்பிட்ட அளவிலான பயனர்களை கொண்ட சமூகவலைதளத்திற்கு இந்திய அரசு புதிய சட்ட திட்டங்களை அறிமுகம் செய்தது. இதை சமூகவலைதளங்கள் பின்பற்றுவதற்கான கால அவகாசம் மே 25 ஆம் தேதி வரை வழங்கப்பட்டது.

குறைகளை கேட்டறியும் அதிகாரி

குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ர விதிமுறைகள் விதிக்கப்பட்டது. கூ என்ற இந்திய சமூகவலைதளம் தவிர வேறு எந்த முன்னணி சமூகவலைதளம் நிறுவனத்தின் குறைகளை கேட்கும் அதிகாரி போன்ற எதையும் நியமிக்கவில்லை.

சமூகவலைதளம் இழக்க நேரிடும்

சமூகவலைதளம் இழக்க நேரிடும்

இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும். இது எதையும் சமூகவலைதளங்கள் பின்பற்றவில்லை, இது அரசு தரப்பை அதிருப்தி அடைய வைத்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Whatsapp Goes to Delhi HighCourt Because New Media Rules Can Violates User Privacy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X