இனி புகைப்படங்களை அனுப்ப மூன்று விருப்பங்களை கொடுக்கும் வாட்ஸ்அப்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை விட தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த வாட்ஸ்அப் செயலியை பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம்

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது சார்ந்ததகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்கள

அதாவது வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் அம்சத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இன்னும் முழுமை பெறாத நிலையில், இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக பீட்டா பதிப்பில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..PF பயனர்கள் இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது.. தொடர்ந்து வைப்பு பணம் வைப்பதிலும் சிக்கல் ஏற்படும்..

இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில்

குறிப்பாக இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை அனுப்பும் போது மூன்று ஆப்ஷன்களை வழங்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இதுவரை வாட்ஸ்அப் செயலியில் நாம் புகைப்படங்களை அனுப்பும்போது தரம் தானாக குறைக்கப்பட்டு விடும். ஆனால் இனிமேல்
அந்த நிலை இருக்காது.

அதிரடி நடவடிக்கை: விரைவில் அரசு கேபிள் டிவியில் ஓடிடி தளங்கள்- அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் அறிவிப்பு!அதிரடி நடவடிக்கை: விரைவில் அரசு கேபிள் டிவியில் ஓடிடி தளங்கள்- அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் அறிவிப்பு!

 அம்சம் தற்போது வாட்ஸ்அப்

அதன்படி இந்த புதிய அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா v2.21.14.16 பதிப்பில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சத்தை இயக்க பயனர்கள் Storage பக்கத்திற்கு சென்று Data மெனுவில் உள்ள Photo Upload Quality என்பதை
கிளிக் செய்தால் போதும்.

இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..இனி 'இந்த' ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அப்டேட் கிடையாது.. கூகிள் தீர்வுடன் வெளியிட்ட அறிவிப்பு..

lity ஆப்ஷன்களை க்ளிக்

நீங்கள் Photo Upload Quality ஆப்ஷன்களை க்ளிக் செய்ததும், ஆட்டோ, பெஸ்ட் குவாலிட்டி, டேட்டா சேவர் என்ற மூன்று தரங்களில் புகைப்படங்களை அனுப்ப முடியும்.

 ஆட்டோ(Auto) எனும்

குறிப்பாக நீங்கள் ஆட்டோ(Auto) எனும் விருப்பத்தை தேர்வுசெய்தால், ஒவ்வொரு புகைப்படத்திற்கு சிறந்த தேர்வை வாட்ஸ்அப் கண்டறிந்து அனுப்பும். அடுத்து பெஸ்ட் குவாலிட்டி (Best Quality) என்பதை நீங்கள் தேர்வுசெய்தால், அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்ப முடியும். கடைசியாக டேட்டா சேவர் (data saver) எனும் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படங்களின் அளவை குறைத்து வேகமாக அனுப்பும். ஆனால் இந்த டேட்டா சேவர் விருப்பத்தை தேர்வு செய்தால் உங்களின் புகைப்படத்தின் தரம் குறைந்தவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் வீடியோக்களிலும்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் வீடியோக்களிலும் இதேபோன்ற அம்சங்களை முந்தைய பீட்டாவில் வழங்கி இருந்தது. தற்போது இந்த இரண்டு அம்சங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த இரண்டு அம்சங்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

image courtesy: wabetainfo

Best Mobiles in India

English summary
WhatsApp gives three options to send photos anymore: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X