நீங்க யாரு., க்ரூப் அட்மின்- வாட்ஸ்அப் புது அம்சம்: இனி யார் மெசேஜ் அனுப்பினாலும் நீங்க டெலிட் செய்யலாம்!

|

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையை அறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி சமீபத்திய அம்சமாக அட்மின்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குழுவில் வரும் மெசேஜ்களை நீக்குவதற்கு அதன் அட்மின்களுக்கு அதிகாரம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு குழுவில் யார் மெசேஜ் அனுப்பினாலும் அதை அட்மினால் நீக்கம் செய்ய முடியும் என கூறப்படுகிறது. இது குழு நிர்வாகியால் நீக்கப்பட்டது என திரையில் ஒரு குறிப்பு மட்டும் தோன்றும் என கூறப்படுகிறது.

பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப் குழு அம்சம்

பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப் குழு அம்சம்

வாட்ஸ்அப்பில் பிரதான பயன்பாடாக இருப்பது அதன் குழு அம்சமாகும். குடும்ப உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், தகவல் பரிமாற்ற நபர்கள், தொழில் சார்ந்த குழுக்கள் என பல்வேறு வகையில் இந்த குழு அம்சம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் குழுவில் வழங்கப்பட்டிருக்கும் அனுமதியை பலர் தவறாக பயன்படுத்துவார்கள். தேவையற்ற மெசேஜ், ஃபார்வேர்ட் மெசேஜ், தவறான தகவல் என தொடர்ந்து பகிர்ந்து வெறுப்புக்கு உள்ளாக்குவார்கள். இதுபோன்ற செயல் குழு தொடங்கப்பட்ட நோக்கத்தையே கெடுத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் குழுவில் இருந்து வெளியேறிவிடுவார்கள். அட்மின்களுக்கு இது தொந்தரவாகும் மன உளைச்சலாகவும் இருக்கும்.

க்ரூப்பில் பகிரப்படும் பல்வேறு மெசேஜ்கள்

க்ரூப்பில் பகிரப்படும் பல்வேறு மெசேஜ்கள்

அதுமட்டுமின்றி க்ரூப்பில் பகிரப்படும் பல்வேறு மெசேஜ்களுக்கும் குழு அட்மின்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை இருந்தது. இந்த தொல்லையில் இருந்து விடுபட குழு ஆரம்பிக்கும் அட்மின்கள் யாரெல்லாம் மெசேஜ் செய்யலாம் என்ற விருப்பத்தை தேர்வு செய்யும் வசதி பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும் ஒருவர் தவறாக மெசேஜ் செய்துவிட்டார் அதை க்ரூப் அட்மினால் எதுவும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பொறுப்பேற்கும் நிலைக்கும் குழு அட்மின்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து தேவையற்ற பதிவுகளை நீக்கும் வகையிலான புதிய அப்டேட்டை க்ரூப் அட்மின்களுக்கு வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை

பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை

இந்த அம்சத்தை பீட்டா பதிப்பில் வாட்ஸ்அப் சோதனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் வாட்ஸ்அப்பில் தற்போது உள்ள டெலிட் ஃபார் எவ்ரிஒன் அம்சமானது மணிநேரங்கள் கணக்கில் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் இது நாட்கள் அளவில் நீடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த அம்சமும் தற்போதுவரை சோதனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த அம்சங்கள் விரைவில் பயனர்களுக்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

மெட்டாவுக்கு சொந்தமான செய்திடல் தளமான வாட்ஸஅப்

மெட்டாவுக்கு சொந்தமான செய்திடல் தளமான வாட்ஸஅப்

மெட்டாவுக்கு சொந்தமான செய்திடல் தளமான வாட்ஸஅப், அதன் பயன்பாடு மற்றும் இணைய பதிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி புதுப்பித்து வருகிறது. அதன்படி வாட்அப் தளத்தில் 2022 ஆம் ஆண்டு அறிமுகமாகும் புதிய ஐந்து அம்சங்கள் குறித்து பார்க்கலாம். கடந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் காணாமல் போகும் மெசேஜ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சத்திலும் மாற்றம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலாமான செய்தியிடம் தளமாக இருந்து வருகிறது. வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமான என கூறப்படுகிறது. தகவல் தொடர்பு, வணிக பயன்பாடு தொடர்பான நடவடிக்கை பலவற்ற தேவைகளுக்கு என தளம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.

தேவை அறிந்து பல்வேறு நன்மைகள்

தேவை அறிந்து பல்வேறு நன்மைகள்

வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல நன்மைகளை வழங்கி வருகிறது. அதேபோல் பயனர்கள் தேவை அறிந்து புதிய அம்சங்களை புதுப்பித்து வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வாட்ஸ்அப் தளத்தில் இமேஜ் எடிட்டர், மறைந்த வரும் செய்திகள், குரல் குறிப்புகளின் வேகம் போன்ற மிக தேவையான பல அம்சங்களை அறிமுகம் செய்தது. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படும் தகவல் குறித்து பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp gives extra power to group admins: Admin can Able to Delete For Everyone Messages in Group

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X