Home
News

டைட் செக்யூரிட்டி னா.. இப்படி இருக்கணும்.. WhatsApp க்கு வந்த 3 புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

பயனர்களின் ப்ரைவஸி (User's Privacy) மற்றும் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தின் கீழ், வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் 3 புதிய செக்யூரிட்டியை அம்சங்களை (Security Features) அறிமுகம் செய்துள்ளது. அதென்ன அம்சங்கள்? அதனால் நமக்கு என்ன பயன்கள்? இதோ விவரங்கள்:

அக்கவுண்ட் ப்ரொடெக்ட்: புதிதாக அறிமுகமாகியுள்ள மூன்று வாட்ஸ்அப் செக்யூரிட்டி அம்சங்களில் முதலாவது அக்கவுண்ட் ப்ரொடெக்ட் (Account Protect) என்று அழைக்கப்படுகிறது. ஒரு புதிய டிவைஸ்க்கு (New Device) மாற முயற்சிப்பது உண்மையிலேயே நீங்கள்தானா என்பதை சரிபார்ப்பதே இந்த அம்சத்தின் முதல் மற்றும் முக்கிய வேலையாகும்!

WhatsApp க்கு வந்த 3 புதிய பாதுகாப்பு அம்சங்கள்!

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை வேறொரு டிவைஸில் அங்கீகரிக்கப்படாத முறையில் யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அது குறித்த எச்சரிக்கை உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் அதை மறுக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட அங்கீகரிக்கப்படாத முயற்சி தடுத்து நிறுத்தப்படும்.

ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ்: இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள புதிய செக்யூரிட்டி அம்சம் ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ் (Automatic security codes) என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சம், வாட்ஸ்அப்பிற்குள் நடக்கும் உங்களுடைய செயல்பாடுகள் பாதுகாப்பான கனெக்ஷனின் கீழ் நடக்கிறதா என்பதை 'டக்கென்று' சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

இந்த அம்சத்தை அணுக, என்கிரிப்ஷன் டேப்பின் (Encryption tab) கீழ் உள்ள காண்டாக்ட் இன்ஃபர்மேஷன் (Contact's info) என்கிற அம்சத்தை கிளிக் செய்யவும். உடனே உங்களுடைய பெர்சனல் சாட் (Personal Chat) ஆனது செக்யூர்ட் (Secured) ஆக உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க முடியும்.

டிவைஸ் வெரிஃபிக்கேஷன்: இந்த பட்டியலில் கடைசியாக உள்ள அம்சம் டிவைஸ் வெரிஃபிக்கேஷன் (Device verification) என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் அக்கவுண்ட்டை அங்கீகரிக்க உதவும் ஒரு அம்சமாகும். இதற்காக நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்பட்டால் இந்த அம்சம் சிறப்பான முறையில் அதை மீட்டெடுக்கும். மேலும் உங்கள் அக்கவுண்ட்டை மால்வேர் அட்டாக்கில் இருந்தும் பாதுகாக்கும்.

Best Mobiles in India

English summary
whatsapp get 3 new security features account protect automatic security codes device verification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X