வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் வைத்த கதை: "உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு"- இதை நோட் பண்ணிங்களா?

|

வாட்ஸ்அப் பிரைவரி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்து, பயனர்களுக்கு பாப் அப் மெசேஜ் ஒன்றை அனுப்பியது. மேலும் அதை Agree கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கணக்கு துண்டிக்கப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது. இதையடுத்து வாட்ஸ்அப்பின் புது பிரைவசி பாலிசிகளில் பயனர்கள் குழப்பம் அடைந்தனர்.

வாட்ஸ்அப் இணைமாற்று பயன்பாடு

வாட்ஸ்அப் இணைமாற்று பயன்பாடு

மேலும் ஏணைய பயனர்கள் வாட்ஸ்அப்பிற்கு பதிலாக மாற்று சிக்னல், டெலிகிராம் போன்ற மாற்று சேவைகளை தேர்ந்தெடுக்கத் தொடங்கினர். சிக்னல் பயன்பாட்டை ஏராளமான புதிய பயனர்கள் தேர்ந்தெடுத்ததால் அந்த பயன்பாடு சில மணிநேரங்கள் முடக்கப்பட்டது. இதையடுத்து வாட்ஸ்அப் பிரைவசி குறித்து பயனர்களிடம் உள்ள குழப்பத்தை தீர்க்க வாட்ஸ்அப் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஏணைய தவறான தகவல்கள்

ஏணைய தவறான தகவல்கள்

அதன்படி ஏணைய தவறான தகவல்கள் பயனர்களிடம் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய கொள்கை எந்தளவு குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பலரிடம் இருந்து அறிந்தோம். புதிய கொள்கைகளின் உண்மைகள் புரிதலுக்கு உதவ விரும்புகிறோம் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது.

தகவல்கள் பகிரப்பட மாட்டாது

தகவல்கள் பகிரப்பட மாட்டாது

உங்கள் தனிப்பட்ட செய்திகளை எங்களால் பார்க்கவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது எனவும் மேலும் பேஸ்புக்காலும் முடியாது எனவும் நிறுவனம் கூறியது. யார் மெசேஜ் அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை நாங்கள் வைத்திருக்க மாட்டோம் எனவும் அது பகிரப்படாது எனவும் நிறுவனம் விளக்கியது.

விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!விரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.! சோதனை மேல் சோதனை.!

வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்படாது

வாட்ஸ்அப் சேவை துண்டிக்கப்படாது

விதிமுறைகளை மதிப்பாய்வு செய்து பயனர்கள் புரிந்து கொள்வதற்கு நிறைய நேரம் வழங்கப்படும் எனவும் புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து பயனர்களுக்கு தெளிவாக விளக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்தது. மேலும் புதிய பிரைவசி பாலிசிகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்கு பிப்ரவரி 8 ஆம் தேதிமுதல் துண்டிக்கப்படும் என நிறுவனம் கூறியது. ஆனால் பயனர்கள் புதிய பிரைவசி கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் மே மாதம் வரை தள்ளிப்போடப்பட்டது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் விளக்கம்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் விளக்கம்

இதையடுத்து இதுவரை இல்லாதவகையில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு பிரைவசி கொள்கைகளை விளக்கும் வகையில் நிறுவனம் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது. அதில் பயனர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கண்காணிக்கப்படாது என நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. புதிய கொள்கையானது பேஸ்புக் உடன் வாட்ஸ் அப் தரவைப் பகிரும் திறனை விரிவாக்காது எனவும் வாட்ஸ்அப் குழுக்கள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் வாட்ஸ்அப் தெரிவித்தது.

வாட்ஸ்அப்பில் காண்பிக்கப்படும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

வாட்ஸ்அப்பில் காண்பிக்கப்படும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்

வாட்ஸ்அப்பால் உங்கள் இருப்பிடத்தை பகிர முடியாது எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ்அப் கணக்கில் ஸடேட்டஸ் என்ற பிரிவை ஓபன் செய்தால், முதலாவதாக வாட்ஸ் அப் வைத்த ஸ்டேட்டஸ் காண்பிக்கப்படும். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்ததை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் சமூகவலைதளங்களில் மீம்கள் அணல் பறந்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Explains its New Privacy Features Via Whatsapp Status

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X