ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

|

வாட்ஸ்அப் ஆப்ஸ், உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சாட் பயன்பாட்டுத் தளமாகத் திகழ்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை இப்போது சோதனை செய்து அறிமுகம் செய்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்கான பல்வேறு மேம்படுத்தல்களைத் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வாட்ஸ்அப் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட இப்போது எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பது அதன் முதற்கட்ட பயனர்கள் அனைவரும் அறிவார்கள்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'அந்த' புதிய அம்சம்

அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'அந்த' புதிய அம்சம்

இப்போது வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களுக்காக உருவாக்கியுள்ள புதிய மாற்றம் என்ன என்பதைப் பார்க்கலாம். இந்த புதிய அம்சமானது பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான பயனர்களின் அனுபவத்தை முழுமையாக நிச்சயம் மாற்றும் என்று கூறப்படுகிறது. நாம் பேசும் அம்சம் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்றாகும் மற்றும் இந்த அம்சத்தைக் கிட்டத்தட்ட அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்றே கூறலாம். நீங்கள் அடிக்கடி வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தினால், ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்தியை அனைவருக்கும் நீக்கும் விருப்பத்தை ஆப்ஸ் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

WhatsApp சோதனை செய்யும் Undo பட்டன்

WhatsApp சோதனை செய்யும் Undo பட்டன்

இந்த அம்சம் கிட்டத்தட்ட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதில் ஒரு குறைபாடும் உள்ளது. நீங்கள் நீக்க நினைக்காத ஒரு செய்தியை தவறுதலாகி நீக்கிவிட்டால் என்ன செய்வது? அப்படி, ஒரு வேலை தவறுதலாக ஒரு செய்தியை நீங்கள் நீக்கிவிட்டால் அவற்றை மீண்டும் மீட்டெடுக்க முடியாது. ஆனால் மிக விரைவில், WABetaInfo அறிக்கையின்படி, WhatsApp அதன் பயனர்களுக்கு 'Undo' என்ற பட்டனைக் கொண்டு வரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பொத்தான் உண்மையில் என்ன செய்யும்? என்பதை விரிவாக்கப் பார்க்கலாம் வாங்க.

ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!ஆன்லைனில் ஆர்டர் செய்த மொபைல் போன் டெலிவரி: பார்சலை பிரித்து பார்த்ததும் மிரண்டு போன நபர்- இது ரொம்ப ஓவர்!

WhatsApp Undo பட்டன் என்ன செய்யும் தெரியுமா?

WhatsApp Undo பட்டன் என்ன செய்யும் தெரியுமா?

WhatsApp நிறுவனம் புதிதாக 'Undo' பட்டனில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. நீக்கப்பட்ட செய்திகளை மீட்டெடுக்க இந்த அம்சம் பயன்படுத்தப்படும். அதாவது வாட்ஸ்அப் அரட்டையில் இருந்து டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை இது மீட்டெடுக்க உதவும். தற்போது இந்த அம்சம் சோதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, ஒரு சிறிய தொகுதி பீட்டா பயனர்களுக்கு மட்டுமே தங்கள் பயன்பாட்டில் இப்போது இந்த அம்சத்தைப் பெறுகின்றனர். பீட்டா 2.22.13.5 எனக் குறிக்கப்பட்ட பயன்பாட்டின் பீட்டா பதிப்பிற்காக WhatsApp இந்த அம்சத்தை வெளியிடுகிறது.

இந்த Undo பட்டனை நிறுவனம் எந்த இடத்தில் கொண்டு வரப்போகிறது?

இந்த Undo பட்டனை நிறுவனம் எந்த இடத்தில் கொண்டு வரப்போகிறது?

இதில், பயனர்கள் தங்கள் திரையின் அடிப்பகுதியில் 'Undo' பொத்தான் காட்டப்படும், இது நீக்கப்பட்ட செய்தியைத் தேர்ந்தெடுத்து அதை மீட்டெடுக்க உதவும். இந்த அம்சம் எப்போதாவது பயன்பாட்டின் நிலையான பதிப்பிற்கு வருமா இல்லையா என்பது குறித்து நிறுவனத்தால் அதிகாரப்பூர்வ வார்த்தை எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதனால், இயல்பாகவே, இந்த அம்சம் அனைவருக்கும் எப்போது வரும் என்பது இப்போதைக்கு யாருக்கும் தெரியாது.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சத்தைப் பெறுவது எப்படி?

வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சத்தைப் பெறுவது எப்படி?

சில சமயங்களில் தற்செயலாக அனைவருக்கும் தவறான செய்தியை நீக்கும் நபர்களுக்கு இது நிச்சயமாக ஒரு பெரிய சிக்கலைத் தீர்க்கும் சிறந்த அம்சமாகும். மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடக அரட்டை தளமானது, தளத்திற்குத் தொடர்ச்சியான புதுப்பிப்புகளைச் செய்து வருகிறது மற்றும் சமீபத்திய காலங்களில் வாட்ஸ்அப் ரியாக்ஷன் போன்ற சில மிகவும் பயனுள்ள அம்சங்களைக் கூட நிறுவனம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ரியாக்ஷன் அம்சத்தைப் பெற நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் பயன்பாட்டை உடனே அப்டேட் செய்யுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp Experience Will Completely Change For Users After This Undo Button Get Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X