WhatsApp பயனர்களுக்கு குட் நியூஸ்: ரெடியா மக்களே.. எடிட் பட்டன் விதிமுறைகள் இதுதான்..

|

WhatsApp எடிட் பட்டன் குறித்த ஸ்க்ரீன் ஷாட்டை WaBetaInfo பகிர்ந்துள்ளது. மெசேஜ் எடிட் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இந்த அம்சம் வெளிப்படையாக தெரிவிக்கும் என்பது வெளியான ஸ்க்ரீன் ஷாட் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

டெலிட் செய்வது மட்டுமே ஒரே வழி..

டெலிட் செய்வது மட்டுமே ஒரே வழி..

வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை திருத்தம் செய்வதற்கான எடிட் ஆப்ஷன் தற்போது வரை இல்லை. தவறாக மெசேஜ் அனுப்பும்பட்சத்தில் அதை டெலிட் செய்வது மட்டுமே ஒரே வழி., ஆனால் திருத்தம் செய்ய முடியாது.

இந்த சிக்கலை சரி செய்ய வாட்ஸ்அப் எடிட் பட்டன் அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

விரைவில் அறிமுகமாகும் எடிட் பட்டன்

இரண்டு முக்கிய சமூகவலைதளங்களில் எடிட் ஆப்ஷன் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என நீண்ட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அது ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் ஆகும்.

ட்விட்டர் நிறுவனம் தங்களது ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு எடிட் ஆப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் வாட்ஸ்அப் தளத்திலும் இந்த அம்சம் விரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பது ஏறத்தாழ முடிவு செய்யப்பட்டு விட்டது.

எடிட் பட்டன் ஆப்ஷன்

எடிட் பட்டன் ஆப்ஷன்

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவையறிந்து தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதில் ஒன்று தான் எடிட் பட்டன் ஆப்ஷன்.. இந்த அம்சம் குறித்த தகவல் நீண்ட காலமாக தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் இந்த அம்சம் விரைவில் வெளியாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Edited என்ற குறிச்சொல்..

Edited என்ற குறிச்சொல்..

WaBetaInfo, வாட்ஸ்அப் எடிட் ஆப்ஷன் அம்சம் குறித்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளது. மெசேஜ் எடிட் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதை இந்த அம்சம் வெளிப்படையாக தெரிவிக்கும் என்பது வெளியான ஸ்க்ரீன் ஷாட் மூலம் உறுதி செய்யப்படுகிறது.

இந்த அம்சம் எவ்வாறு செயல்படும் என்பதை WaBetaInfo அறிக்கை தெளிவுப்படுத்தவில்லை.

வாட்ஸ்அப் எடிட் ஆப்ஷன் மூலம் மெசேஜ் திருத்தப்பட்டிருந்தால், மெசேஜ் கீழே Edited என்ற குறிச்சொல் காட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் மெசேஜ் திருத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

பீட்டா பதிப்பில் சோதனை

பீட்டா பதிப்பில் சோதனை

வாட்ஸ்அப் இந்த அம்சத்தை பீட்டா பதிப்பில் சோதனை செய்து வந்தாலும், விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்போது அறிமுகமாகும் என்ற குறிப்பிட்ட காலக்கட்டம் சரியாக தெரியவில்லை.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டின் 2.22.20.12 பதிப்பில் புதிய எடிட் அம்சத்தை சோதனை செய்து வருகிறது.

விரைவில் iOS பீட்டா பதிப்பிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துப் பிழை மற்றும் சொற்கள் பிழை

எழுத்துப் பிழை மற்றும் சொற்கள் பிழை

வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து மேம்பாடுகளையும் கண்காணிக்கும் Wabetainfo தளம் தான் இந்த எடிட் பட்டன் அம்சத்தை கண்டறிந்து தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த அம்சத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மெசேஜ்களை Copy செய்யும் தேர்வின் கீழ் இந்த திருத்த விருப்பம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெசேஜில் இருக்கும் எழுத்துப் பிழை மற்றும் சொற்கள் பிழையை திருத்தம் செய்து கொள்ளலாம்.

நேர கட்டுப்பாடு குறித்த தகவல்..

நேர கட்டுப்பாடு குறித்த தகவல்..

அதேபோல் இந்த எடிட் அம்சம் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், திருத்தப்பட்ட செய்திகளின் முந்தைய பதிப்பை காண்பதற்கான திருத்த வரலாறு (Correction History) இதில் இடம்பெறாது என கூறப்படுகிறது.

இந்த அம்சம் தற்போது சோதனையில் மட்டுமே இருக்கும் காரணத்தால் அறிமுகம் செய்யும்போது இதில் மாற்றம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

அதேபோல் பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பிய உடன் அதை எத்தனை மணிநேரத்துக்குள் திருத்த வேண்டும் என்ற நேர கட்டுப்பாடு குறித்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

பீட்டா பதிப்பின் ஸ்க்ரீன் ஷாட்..

பீட்டா பதிப்பின் ஸ்க்ரீன் ஷாட் WaBetaInfo மூலம் வெளியாகி இருக்கிறது. இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்படும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Edit Button Option: You Can Know a Message is edited or Not..

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X