Home
News

சும்மா ஒரு கிளிக் பண்ணா போதும்.. WhatsApp-ல் புதிய Scanning அம்சம் அறிமுகம்.. Attachment மெனுவில் சேர்ப்பு!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் மெசேஜ் சம்மரீஸ் (Message Summaries) என்று அழைக்கப்படும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்த கையோடு, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான இன்னொரு புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்துகிறது. கடந்த மாதங்களாக ஐஓஎஸ் (iOS) பயனர்களுக்கு அனுக கிடைக்கும் இந்த அம்சம் தற்போது தான் ஆண்ட்ராய்டுக்கு வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

என்ன அம்சம்? வாட்ஸ்அப் நிறுவனம் டாக்குமெண்ட் ஸ்கேனிங் (Document scanning) என்கிற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது வாட்ஸ்அப் வழியாகவே டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்ய உதவும் ஒரு அம்சமாகும்.

WhatsApp-ல் புதிய Scanning அம்சம் அறிமுகம்!

ஆப்பிளின் ஐஓஎஸ் பயனர்களுக்கு அணுக கிடைத்த இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் நீங்கள் ஒரு டாக்குமெண்ட்-ஐ ஸ்கேன் செய்ய எக்ஸ்டர்னல் ஆப்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த புதிய அம்சம் - வாட்ஸ்அப்பிற்குள் இருந்தபடியே நேரடியாக மிகவும் நெறிப்படுத்தப்பட்ட ஸ்கேனிங் அனுபவத்தை வழங்குகிறது

முன்னதாக இந்த புதிய டாக்குமெண்ட் ஸ்கேனிங் அம்சமானது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.25.18.29 க்கான வாட்ஸ்அப் பீட்டாவில் காணப்பட்டுள்ளது. தற்போது இது லேட்டஸ்ட் அப்டேட் வழியாக பப்ளிக் டெஸ்டிங்கிற்கு முன்னேறியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கிய பிறகு, இந்த புதிய அம்சத்திற்கான அணுகலை பெற்றதாக பல பீட்டா பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களுக்கு கிடைக்கும் லேட்டஸ்ட் அப்டேட் வழியாக, வாட்ஸ்அப்பில் உள்ள அட்டச்மெண்ட் மெனுவில் (Attachment Menu) புதிய 'ஸ்கேன் டாக்குமெண்ட்' என்கிற அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள 'ப்ரவுஸ் டாக்குமெண்ட' மற்றும் 'சூஸ் ஃப்ரம் கேலரி' ஆகிய விருப்பங்களுடன் தோன்றும்.

இந்த புதிய அம்சத்தை கிளிக் செய்தவுடன் உங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸில் உள்ள கேமரா ஓப்பன் ஆகும். அதன் வழியாக பயனர்கள் டைரக்ட் டாக்குமெண்ட் ஷேரிங்-கிற்காக புகைப்படங்களை கேப்ச்சர் செய்ய முடியும். இந்த அம்சம் இரண்டு கேப்ச்சர் விருப்பங்களை வழங்குகிறது: மேனுவல் மற்றும் ஆட்டோ.

மேனுவல் மோட் வழியாக பயனர்கள் எப்போது படத்தை எடுக்க வேண்டும் என்பதை துல்லியமாகத் தீர்மானிக்க முடியும். மறுகையில் உள்ள ஆட்டோ மோட் ஆனது வாட்ஸ்அப் ஆனது ஒரு டாக்குமெண்ட்டின் விளிம்புகளை அடையாளம் கண்டுபிடித்து, அதை தானே கேப்ச்சர் செய்யும்; ஸ்கேனிங் செயல்முறையையும் நெறிப்படுத்துகிறது.

புகைப்படம் எடுக்கப்பட்ட பிறகு, வாட்ஸ்அப் அந்த படத்தை விரைவாகப்ராஸஸிங் செய்து பிடிஎப் (PDF) பார்மெட்டிற்கு மாற்றும். இது ஃபைல்-ஐ பெர்சனல் சாட்கள் அல்லது க்ரூப் மெசேஜ்களில் உடனடியாக பகிரக்கூடியதாக மாற்றும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டின் சொந்த டாக்குமெண்ட் கேப்ச்சர் ஏபிஐ-களை பயன்படுத்தி, முழுமையான ஸ்கேனிங் மற்றும் கன்வெர்ஷன் வொர்க்ஃப்ளோவை பயனரின் ஸ்மார்ட்போனில் நேரடியாக நிகழ்த்துகிறது.

வாட்ஸ்அப்பில் முன்னதாக அறிமுகமான மெசேஜ் சம்மரீஸ் அம்சத்தின் பயன் என்ன? எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பெயர் குறிப்பிடுவது போலவே இது உங்களுக்கான மெசேஜ்களை சுருக்கமாக்கி காட்டும். மெட்டா (Meta) நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் பிரைவேட் ப்ராஸஸிங் (Private Processing) எனப்படும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

இது மெட்டா உட்பட சாட்-இல் உள்ள வேறு எவராலும் மெசேஜை படிக்காமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப்பில் பயனர்கள் சுருக்கமாக கூற வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்களை மட்டும் முன்னிலைப்படுத்த அட்வான்ஸ்டு சாட் ப்ரைவஸியையும் (Advanced Chat Privacy) பயன்படுத்தலாம்

இந்த புதிய அம்சம் குறித்த பிளாக் போஸ்ட்டில், வாட்ஸ்அப் நிறுவனம் மெசேஜ் சம்மரீஸ் அம்சத்தை விவரித்துள்ளது. வாட்ஸ்அப்பின் கூற்றுப்படி இந்த அம்சம் - பெர்சனல் மற்றும் க்ரூப் சாட்களில் கிடைக்கும். இது முற்றிலும் ஒரு விருப்பத்தேர்வாக இருக்கும் கூறப்படுகிறது. அதாவது தேவைப்பட்டால் பயன்படுத்தலாம் மற்றும் இது டீபால்ட் ஆக முடக்கப்பட்டு இருக்கும்.

Best Mobiles in India

English summary
WhatsApp Document Scanning Feature Now Available in Android How To Get How it Works How to Use
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X