வாட்ஸ்அப் Disappearing Messages: ON மற்றும் OFF செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

|

வாட்ஸ்அப் செயலியில் வரும் புதிய புதிய அம்சங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்கி வருகிறது இந்த செயலி. கடந்த சில மாதங்களில் பயனுள்ள வகையில் பல்வேறு புதிய வசதிகளை சேர்த்துள்ளது இந்த வாட்ஸ்அப் நிறுவனம்.

றிப்பாக இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.

அதன்படி சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த Disappearing Messages என்ற அம்சம் இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கு கிடைக்கிறது. குறிப்பாக இது ஒரு பயனுள்ள அம்சமாகும்.

லியில் மறைந்துபோகும்

வாட்ஸ்அப் செயலியில் மறைந்துபோகும் மெசேஜஸ் ( Disappearing Messages) அம்சம் ஒருமுறை இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்கு பிறகு, அது மீடியா கோப்புகளாக இருந்தாலும் சரி, ஆடியோ கோப்புகளாக இருந்தாலும் சரி அல்லது சாதராண டெக்ஸ்ட் மெசேஜாக இருந்தாலும் சரி அது தானாகவே மறைந்து விடும்.

விவோ Origin OS அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?

ஒஎஸ்

குறிப்பாக இந்த Disappearing Messages அம்சம் இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது. பின்பு இந்த புதிய வாட்ஸ்அப் அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் முதலில் வாட்ஸ்அப்-ஐ அதன் சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டும்.

-ன் மறைந்துபோ

மேலும் வாட்ஸ்அப்-ன் மறைந்துபோகும் மெசேஜஸ் அம்சமானது ஐஒஎஸ்-ல் வெர்ஷன் 2.20.121 உடன் வருகிறது, இது புதிய storage management tool மற்றும் mute a chat always போன்ற அம்சங்களையும் கொண்டுவருகிறது. Mute a chat always என்பது எப்போதுமே குறிப்பிட்ட ஒரு சாட்டை ம்யூட் செய்ய உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையாக Disappearing Messages அம்சத்தினை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

எளிமையாக Disappearing Messages அம்சத்தினை பயன்படுத்தும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

முதலில் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப்-ஐ ஓப்பன் செய்யவும்

வழிமுறை-2

அடுத்து நீங்கள் Disappearing Messages அம்சத்தை இயக்க விரும்பும் காண்டாக்ட்-ஐ தேர்வு செய்ய,குறிப்பிட்ட காண்டாக்-ஐ திறக்கவும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உங்களது நண்பரின் ப்ரோபைலுக்குள் செல்லவும், அதாவது சாட்டிற்குள் நுழைந்து காண்டாக்டின் பெயரை கிளிக் செய்யவும்.

 விருப்பத்திற்கு மேலே

வழிமுறை-3

அங்கு Disappearing Messages எனும் புதிய அம்சத்தினை என்க்ரிப்ஷன் விருப்பத்திற்கு மேலே காண்பீர்கள். அதை கிளிக் செய்து பின்னர் குறிப்பிட்ட அம்சம் சார்ந்த தகவலை படித்துவிட்டு தொடரவும்.

வழிமுறை-4

இந்த Disappearing Messages என்கிற விருப்பம் இயக்கப்பட்டதும், குறிப்பிட்ட மெசேஜ் அனுப்பப்பட்ட நேரத்திலிருந்து ஏழு நாட்களுக்கு பிறகு அது தானாகவே மறைந்துவிடும் என்கிற குறிப்பு இடம்பெறும் அதன் கீழே ஆன் மற்றும் ஆப் என்கிற இரண்டு விருப்பங்கள் அணுக கிடைக்கும். இந்த புதிய அம்சம் டீபால்ட் ஆகவே ஆப்-ல் தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் ஆன் என்கிற விருப்பத்தை தேர்வு செய்தால் போதும் வேலை முடிந்தது.

ருப்பத்தை இயக்கிய பிறகு

மேலும் குறிப்பிட்ட விருப்பத்தை இயக்கிய பிறகு வாட்ஸ்ஆப் நீங்கள் disappearing messages அம்சத்தினை இயக்கியுள்ளீர்கள். பின்பு 7 நாட்களுக்கு பிறகு சாட்டில் இருந்து மெசேஜ்கள் மறைந்துவிடும். இதை மாற்ற இங்கே கிளிக் செய்யவும்" என்கிற தகவல் குறிப்பிட்ட சாட்டில் அணுக கிடைக்கும்.

 இயக்கப்படும்

இந்த அம்சத்தை நீங்கள் விரும்பும் போதெல்லாம் மாற்றுவதற்கான விருப்பமும் உள்ளது. குறிப்பாக இந்த disappearing messages அம்சம் இயக்கப்படும் போது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகள் உள்ளிட்ட அனைத்து செய்திகளும் சாட்டிலிருந்து தானாகவே நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Disappearing Messages: How to Use turn ON and OFF This Feature? Simple tips.!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X