Home
News

ஐபோனிலும் வந்தது இந்த அம்சம்- வாட்ஸ்அப் தாமாக மறையும் மெசேஜ்!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி பயனாளிகள் பார்த்தவுடன் குறிப்பிட்ட நாட்களில் தாமாக மறைந்து விடும் வகையில் மெசேஜ்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது. இந்த அம்சமானது ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது ஐபோன்களுக்கும் பீட்டா வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரைவேசி காப்பு அம்சம்

பிரைவேசி காப்பு அம்சம்

மிகவும் பிரபலமடைந்து வரும் வாட்ஸ்அப் செயலியில் பிரைவேசி காப்பு அம்சம் குறைவு என்ற புகார்கள் எழுந்த நிலையில் பிற தகவல்பரிமாறும் தளங்களுக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை சரிசெய்யும் விதமாக பல புதிய அம்சங்களை வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் அம்சத்தில் சமீபத்தில் பிரபலமாக இருப்பது தாமாக மறையும் மெசேஜ் அம்சமாகும்.

தாமாக மறையும் மெசேஜ்கள்

தாமாக மறையும் மெசேஜ்கள்

வாட்ஸ்அப் தாமாக மறையும் மெசேஜ்கள் அம்சமானது கடந்த நவம்பர் மாதம் ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஐபோன்களுக்கும் இந்த மறையும் மெசேஜ் வசதி முன்னோட்ட வடிவில் அறிமுகம் செய்துள்ளது. இது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பொருந்தக்கூடியவையாகும்.

தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை

தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை

சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக மாறிவருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து அதிகரிக்கும் வாட்ஸ்அப் பயன்பாடு

தொடர்ந்து அதிகரிக்கும் வாட்ஸ்அப் பயன்பாடு

சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக மாறிவருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து அப்டேட்கள்

தொடர்ந்து அப்டேட்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட அப்டேட்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். அதில் அப்டேட்கள் சில வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே இருக்கிறது.

மெசேஜ்கள் தாமாக மறையும் அம்ச பயன்பாடு

மெசேஜ்கள் தாமாக மறையும் அம்ச பயன்பாடு

பெறுநர்கள் இதுபோன்ற அனுப்பப்படும் படங்களை திறந்தவுடன் ஒரு அறிவிப்பையும் காண்பார்கள். இந்த படம் பிற பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் சுய அழிக்கும் படங்களை ஏற்றுமதிக்கு அனுமதிக்காது. இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் அத்தகைய படத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்தால் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் சேர்க்கவில்லை. அதேபோல் பெறுநர் புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் அனுப்புநருக்கு அது எச்சரிக்கை விடுக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தனியுரிமைக் குறித்த பிரதிபலிப்பு

தனியுரிமைக் குறித்த பிரதிபலிப்பு

பயனர்களுக்கு இது தனியுரிமைக் குறித்த பிரதிபலிப்பை ஏற்படுத்துவது போல் தவறான உணர்வை கொடுப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்களுக்கு படங்களை அழிக்கும் அம்சம் வழங்கினாலும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் எழுகின்றது.

கால அவகாசம் முடிவு செய்து கொள்ளலாம்

கால அவகாசம் முடிவு செய்து கொள்ளலாம்

சிலதினங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மெசேஜ்கள் மறைந்து போகும் அம்சத்திற்கான கால அவகாசம் ஏழு நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 7 நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப் மெசேஜ் தாமாகவே மறைந்துவிடும். வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சேட்டிங் அல்லது குரூப்பில் இதை பயன்படுத்தலாம்.

இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும்

இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும்

வாடஸ்அப்பில் இந்த அம்சம் ஆன் செய்வதற்கு முன்பு பெறப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. வாட்ஸ்அப் சேட்டிங்கில் Disappearing Message அம்சத்தை இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும். பயனர்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Whatsapp Disappearing Message Now Available in Iphone Beta Version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X