மிகவும் எதிர்பார்த்தாலே இப்படி தான், செம்மையா "மொக்க" வாங்கும்.!

இந்த அம்சம் "புண்ணியமே இல்லாதது" என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

|

ஒரு நீண்ட காத்திருப்பிற்கு பின்னர், வாட்ஸ்ஆப்பில் நாம் மிகவும் எதிர்பார்த்த ஒரு அம்சமான - டெலிட் பார் எவ்ரிஒன் அல்லது ரீகால் அல்லது - டெலிட் பார் ஆல் அம்சம், அதாவது அனுப்பிய மெசேஜை திரும்பப்பெறும்/டெலிட் செய்யும் அம்சமானது அனைவர்க்கும் உருட்டப்பட்டது.

மிகவும் எதிர்பார்த்தாலே இப்படி தான், செம்மையா

இந்த அம்சத்தின் வழியாக, இனி வாட்ஸ்ஆப்பில் தவறுதலாக அனுப்பப்பட்ட மெசேஜை ரீகால் செய்யலாம். அதாவது சென்ட் ஆனதொரு மெசேஜை டெலிட் செய்யலாமென பயனர்கள் எண்ணினர். ஆனால் இந்த அம்சம் "புண்ணியமே இல்லாதது" என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

அனைத்து வகையான மெசேஜ்களையும் திரும்ப பெறலாம்.!

அனைத்து வகையான மெசேஜ்களையும் திரும்ப பெறலாம்.!

அனுப்புனர் மற்றும் பெறுநர் ஆகிய இருவருக்குமே இந்த அப்டேட் கிடைத்தபின்னர் தான் இந்த அம்சம் செயலாக்கம் பெறும். இந்த அம்சத்தின் கீழ் கிப் (GIF), டெக்ஸ்ட் மெசேஜ்கள், படங்கள், குரல் செய்திகள், ,லொகேஷன், ஸ்டிக்கர்கள் (வரும் காலங்களில்), தொடர்பு எண்கள், ஸ்டேட்டஸ் ரிப்ளை போன்ற அனைத்து வகையான மெசேஜ்களையும் திரும்ப பெறலாம் என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

நோட்டிபிகேஷன் பதிவில் நீக்கப்பட்ட செய்திகள் .!

நோட்டிபிகேஷன் பதிவில் நீக்கப்பட்ட செய்திகள் .!

ஆனால் சமீபத்தில், ஒரு ஸ்பானிஷ் ஆண்ட்ராய்ட் வலைப்பதிவானது (ஆண்ட்ராய்டு ஜெபீ), வாட்ஸ்ஆப்பில் நீக்கப்பட்ட மெசேஜ்களை பெறுநர்களால் பெற முடியும் எனபதை கண்டுபிடித்து வெளிப்படுத்தியது. அதாவது, பெறுநரின் ஸ்மார்ட்போனில் உள்ள நோட்டிபிகேஷன் பதிவில் நீக்கப்பட்ட செய்திகள் இருப்பதாக ஆண்ட்ராய்டு ஜெபீ அறிக்கை கூறுகிறது.

டெலிட் அம்சம் முற்றிலும் பயனற்றது.!

டெலிட் அம்சம் முற்றிலும் பயனற்றது.!

அதாவது, நோட்டிபிகேஷனி கிளிக் செய்வதின் வழியாக, அனுப்புநரால் டெலிட் செய்யப்பட்டதொரு மெசேஜை ஒருவரால் அணுக முடியும். இதன் மூலம் வாட்ஸ்ஆப்பின் டெலிட் அம்சம் முற்றிலும் பயனற்றது என்பதை அறிய முடிகிறது.

ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷனில் குறிப்பிட்ட செய்தி.!

ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷனில் குறிப்பிட்ட செய்தி.!

டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை அணுக சில மூன்றாம்-தரப்பு பயன்பாடுகளும் உதவும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதில் ஒன்றுதான் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி (Notification History). இந்த பயன்பாட்டை பதிவிறக்கிய பிறகு, நீங்கள் உங்களின் ஆண்ட்ராய்டு நோட்டிபிகேஷனில் குறிப்பிட்ட செய்தியைத் தேட வேண்டும்.

டெலிட் செய்யப்பட்ட மெசேஜை அணுகும் செயல்முறை.!

டெலிட் செய்யப்பட்ட மெசேஜை அணுகும் செயல்முறை.!

நீங்கள் நோவா லான்சர் போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பயன்படுத்துகிறீர்கள் என்றால், டெலிட் செய்யப்பட்ட மெசேஜை அணுகும் செயல்முறை எளிமையானதாகும். விட்ஜெட்ஸ் → ஆக்டிவிட்டீஸ் → செட்டிங்ஸ் → நோட்டிபிகேஷன் லாக் சென்று அணுகலாம். இந்த அறிவிப்பு பதிவுகளுக்கான அணுகலானது ஸ்டார்க் ஆண்ட்ராய்டுகளில் கூட உள்ளது.

ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது.!

ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது.!

இதுபோன்று நீக்கப்பட்ட செய்திகளுக்கான அறிவிப்புப் பதிவைச் சரிபார்ப்பதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது என்பதை நினைவில் கொள்க. ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யபடாத வரை மட்டுமே பதிவுகள் சேமிக்கப்படும். ஒருமுறை ரீஸ்டார்ட் செய்துவிட்டால் அறிவிப்பு பதிவுகள் அழிக்கப்படும். மேலும், நீக்கப்பட்ட செய்திகளின் முதல் 100 எழுத்துகள் மட்டுமே தெரியும், முழு செய்தியையும் காண முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் அதற்கு மேற்பட்ட அப்டேட்.!

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் அதற்கு மேற்பட்ட அப்டேட்.!

இந்த நோட்டிபிகேஷன் லாக் பதிவு அம்சமானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் அதற்கு மேற்பட்ட அப்டேட் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். குறிப்பாக, இந்த அம்சம் மீடியா கோப்புகளை மீட்டெடுக்க அனுமதிக்காது. இந்த நோட்டிபிகேஷன் லாக் பதிவு அம்சமானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் மற்றும் அதற்கு மேற்பட்ட அப்டேட் பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஐஓஎஸ் சாதனைகளில் எந்த ஓட்டையும் கிடையாது.!

ஐஓஎஸ் சாதனைகளில் எந்த ஓட்டையும் கிடையாது.!

குறிப்பாக, இந்த அம்சம் மீடியா கோப்புகளை மீட்டெடுக்க அனுமதிக்காது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே பொருந்தும். ஐஓஎஸ் கருவிகளை பொறுத்தமட்டில், டெலிட் செய்யப்பட்ட மெசேஜின் முழு அறிவிப்பும் நீக்கப்படும். நீக்கப்பட்ட செய்தியை அணுகவோ, பார்க்கவோ எந்த வழிமுறையும் கிடையாது.

சாட் ஹிஸ்ட்ரியில் சேமிக்கப்படாது என்றும்  கூறப்பட்டிருந்தது.!

சாட் ஹிஸ்ட்ரியில் சேமிக்கப்படாது என்றும் கூறப்பட்டிருந்தது.!

விளக்கத்தின் இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும் போது, ​​நீங்கள் ஒரு குறிப்பிட்ட மெசேஜை திரும்பப்பெறுகையில், வாட்ஸ்ஆப் ஆனது உங்கள் மெசேஜின் நகல் ஒன்றை பெறுநருக்கு அனுப்பும் என்றும், பெறுநர் ஒரு போலியான நகலைப் பெறுவார். ஆனால் அது சார்ந்த எந்த விதமான நோட்டிபிக்கேஷனையும் பெற மாட்டார், குறிப்பாக அந்த செய்தி அவரின் சாட் ஹிஸ்ட்ரியில் சேமிக்கப்படாது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் நடப்பதோ வேறு.!

"செம்ம பல்ப்" வாங்குகிறது என்பதே நிதர்சனம்.!

இந்த அம்சம் ஒரு நேர-உணர்திறன் மிக்க அம்சம். செய்தியை அனுப்பும் ஏழு நிமிடங்களுக்குள் மட்டுமே செய்திகளை ரீகால் செய்ய முடியும். குறிப்பிட்ட 7 ஏழு நிமிடங்களில் ஒரு செய்தியை நீங்கள் ரீகால் செய்யவில்லையெனில் மறுபடியும் அதை ரீகால் செய்யவே முடியாது என்று வாட்ஸ்ஆப் கொடுத்த ஒட்டுமொத்த பில்ட்-அப்களும் "செம்ம பல்ப்" வாங்குகிறது என்பதே நிதர்சனம்.!

Best Mobiles in India

English summary
WhatsApp: Did you know that deleted messages can be read. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X