100 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலி வாட்ஸ்ஆப்

Written By:

பிரபல குறுந்தகவல் அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் 100 கோடி முறை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜான் கோம் தெரிவித்தார்.

100 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலி வாட்ஸ்ஆப்

இந்த தகவலை ஜான் ட்விட்டர் மூலம் உறுதி படுத்தியதோடு வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு குழுவினரை வெகுவாக பாராட்டினார். 'வாட்ஸ்ஆப் செயலி 100 கோடி முறை ஆன்டிராய்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ப்ரியான் மற்றும் நான்கு பேர் அடங்கிய வாட்ஸ்ஆப் ஆன்டிராய்டு குழுவினர் இதை சாத்தியமாக்கியுள்ளனர். சிறிய குழு ஆனாலும் பெரிய விளைவினை ஏற்படுத்தியுள்ளனர்', என ஜான் தன் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

100 கோடி பேர் பதிவிறக்கம் செய்த செயலி வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தாண்டு ஜனவரி மாதம் 700 மில்லியன் பயனாளிகளை பெற்றுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதோடு வாட்ஸ்ஆப் செயலியில் வாய்ஸ் காலிங் அம்சம் சேர்க்கப்படுவது இன்த எண்ணிக்கையை அதிகமாக்கும் என்று நம்பலாம்.

இதுவரை ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், யூட்யூப், பேஸ்புக் மற்றும் ஆங்ரி பேர்ட்ஸ் செயலிகளை தொடர்ந்து வாட்ஸ்ஆப் 100 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

English summary
WhatsApp crosses 1 billion downloads on Android. Mobile messaging service WhatsApp has crossed a billion downloads for Android smartphones on Google Play Store.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot