Home
News

அடடா! இனி WhatsApp-க்கு மொபைல் நம்பர் தேவையில்லையா? வரப்போகும் புது அம்சம் என்ன தெரியுமா?

வாட்ஸ்அப் (WhatsApp) பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் கொஞ்சம் கொஞ்சமாக டெலெக்ராம் (Telegram) ஆப்ஸ் போல மாறிவருகிறது. அதாவது, டெலெக்ராமில் கிடைக்கும் பல அம்சங்களை வாட்ஸ்அப் இப்போது அதன் தளத்தில் மெல்ல-மெல்ல களமிறக்கி வருகிறது.

அந்த வரிசையில், மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் தளம் இப்போது அதன் பயனர்களை தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான பயனர்பெயர்களை அமைக்க உதவும் புதிய அம்சத்தில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அதவாது, வாட்ஸ்அப் யூசர்நேம் (WhatsApp Username) கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ்அப் கணக்கை அடையாளம் காண அனுமதிக்கும் அம்சத்தில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதே போன்ற அம்சத்தை அடிப்படையாக கொண்டு டெலெக்ராம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடடா! இனி WhatsApp-க்கு மொபைல் நம்பர் தேவையில்லையா?

வழக்கமாக பயன்படுத்தப்படும் மொபைல் எண் (WhatsApp Mobile Number) கொண்ட அடையாள விபரங்களை போல் அல்லாமல், இனி எதிர்காலத்தில் வாட்ஸ்அப் பயனர்கள், அவர்கள் விரும்பும் தனி பயனர் பெயர்களை கொண்டு தங்களை தனித்து அடையாளம் காண்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய அம்சத்தை நிறுவனம் மிக விரைவில் அதன் பீட்டா அப்டேட் இல் அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது.

WABetaInfo இன் அறிக்கையின்படி, Google Play Store இல் கிடைக்கும் Android 2.23.11.15 வெர்ஷன் அப்டேட்டில் இந்த அம்சம் கண்டறியப்பட்டது. WhatsApp யூசர்நேம் (Username) அமைப்பதற்கான புதிய திறன் பயனர்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் தனிப்பயனாக்கத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது, ​​வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களின் மொபைல் ஃபோன் எண்களால் அடையாளம் காணப்படுகிறார்கள், இது பயன்பாட்டில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதற்கான விருப்பங்களை கட்டுப்படுத்துகிறது.

WABetaInfo ஆல் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட், யூசர்நேம் அம்சத்தை பயன்பாட்டின் அமைப்புகள் மெனு மூலம் அணுக முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக ப்ரொபைல் பிரிவில் இது அமைக்கப்பட்டுள்ளது. யூசர்நேம்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் தனித்துவத்தையும், பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி பயனர்கள் அவர்களுடைய மொபைல் எண்களை வெளிப்படுத்தாமல் மெசேஜ் (WhatsApp Message) செய்துகொள்ளலாம்.

அடடா! இனி WhatsApp-க்கு மொபைல் நம்பர் தேவையில்லையா?

வாட்ஸ்அப்பில் இந்த யூசர்நேம் அம்சம் எவ்வாறு செயல்படும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், பயனர்பெயர்கள் மூலம் தொடங்கப்படும் உரையாடல்கள் பயன்பாட்டின் புகழ்பெற்ற எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனுடன் (End-to-End Encryption) செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. Meta இன் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் உலகளவில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர் தளத்தைக் கொண்டுள்ளது.

பயனர் பெயர்களைச் சேர்ப்பது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், பயன்பாட்டில் கூடுதல் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை வழங்குவதற்கும் மற்றொரு படியாகும். இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. விரைவில் இது பீட்டா சோதனைக்காக WhatsApp இதை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. பீட்டா சோதனையாளர்கள் பயனர்பெயர் அம்சத்தை முயற்சித்து அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கச் செய்வதற்கு முன் கருத்துக்களை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Could Soon Launch Username Feature To Use Messaging Without Mobile Number Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X