குரூப் அட்மினுக்கு இவ்ளோ அதிகாரமா? WhatsApp கம்யூனிடிஸ் என்றால் என்ன? எப்படி உருவாக்குவது?

|

WhatsApp கம்யூனிட்டிஸ் இறுதியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய அம்சம் குறித்த தகவல் பல நாட்களாக வெளியான நிலையில் தற்போது நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

வாட்ஸ்அப் கம்யூனிட்டி

வாட்ஸ்அப் கம்யூனிட்டி

இந்த புதிய அம்சத்தின் மூலம் பல குழுக்களை ஒருங்கிணைக்கலாம். பல நபர்களை அல்ல பல குழுக்களை என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்று. அதேபோல் இந்த அம்சம் குரூப் அட்மின்களுக்கு புதிய சாத்தியக்கூறுகளையும் வழங்குகிறது. இதன்மூலம் வாட்ஸ்அப் குரூப் வசதி மேம்படுத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

WhatsApp கம்யூனிடி அம்சம் என்ன?

WhatsApp கம்யூனிடி அம்சம் என்ன?

பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு போன்ற விஷயங்களை மேற்கொள்ள இது மிகவும் பேருதவியாக இருக்கும். அதாவது பல குரூப்களை கம்யூனிடி என்ற ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம். இதன் மூலமாக ஒரு தகவலை பல்வேறு குரூப்களுக்கு எளிதாகக் கொண்டு செல்ல முடியும். நிறுவனத்தில் இருக்கும் வெவ்வேறு குரூப்கள், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் பல்வேறு குரூப்கள் போன்ற பல குரூப்களை ஒரு குடையின் கீழ் இமைக்க முடியும்.

1024 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்

1024 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்

ஒரு நிர்வாகி ஒரு புதிய சமூகத்தை உருவாக்கும் போது, அதில் பல குரூப்களை இணைக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த குழுவில் 5000 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம். கம்யூனிடி என்ற குடையின் கீழ் 50 குழுக்களை பயனர்கள் இணைக்கலாம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் தற்போது வாட்ஸ்அப் இல் மற்றொரு மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு குரூப்பில் 512 நபர்கள் மட்டுமே இணைக்க முடியும் என்ற நிலையில் தற்போது 1024 உறுப்பினர்கள் வரை இணைக்கலாம்.

ஒரே நேரத்தில் பல்வேறு அம்சங்கள்

ஒரே நேரத்தில் பல்வேறு அம்சங்கள்

வாட்ஸ்அப் இல் மொத்தமாக பல்வேறு புது அம்சங்கள் ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறது. இனி வீடியோ காலில் 32 பேர் வரை இணைக்கலாம். அதேபோல் இனி வாட்ஸ்அப் இல் 2 ஜிபி அளவு வரையிலான ஃபைல்களையும் அனுப்பலாம். முன்னதாகவே குறிப்பிட்டது போல் ஒரு குரூப் இல் 1024 நபர்கள் வரை இணைக்கலாம்.

வாட்ஸ்அப் கம்யூனிடி அம்சம்

வாட்ஸ்அப் கம்யூனிடி அம்சம்

வாட்ஸ்அப் கம்யூனிடி குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் தற்போதுவரை தெரியவில்லை. கம்யூனிடி என்ற ஒரு குடையின் கீழ் பல குரூப்களை இணைக்கும் போது, அந்தந்த குரூப் அட்மின்களின் அனுமதி தேவை என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் கம்யூனிடி அம்சம் என்பதை எப்படி உருவாக்குவது என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.

வாட்ஸ்அப் கம்யூனிடி உருவாக்குவது எப்படி?

வாட்ஸ்அப் கம்யூனிடி உருவாக்குவது எப்படி?

வாட்ஸ்அப் குழுவில் கேமரா அக்சஸ்-க்கு அருகில் சிறிய டேப் ஆக இந்த கம்யூனிடி விருப்பம் காட்டப்படும் என கூறப்படுகிறது.

புதிய கம்யூனிடி உருவாக்க பயனர்கள் புதிய சேட்டிங் என்ற மெனுவிற்குள் சென்று கம்யூனிடி உருவாக்குவதற்கான விருப்பத்தை கண்டறியலாம். இதில் ஒரு கம்யூனிடிக்கான பெயரையும் விளக்கத்தையும் உள்ளிடலாம், இதில் சுயவிவர படத்தையும் சேர்க்கலாம்.

கம்யூனிட்டி உள்ளே, பயனர்கள் புதிய குழுக்களை உருவாக்க அல்லது ஏற்கனவே உள்ள குழுக்களை சேர்ப்பதற்கான விருப்பங்களை கண்டறியலாம். நீங்கள் முன்னதாகவே பல குரூப்களை கையாளும் நிர்வாகியாக இருந்தால் அனைத்து குரூப்களையும் இங்கே ஒருங்கிணைக்கவும் முடியும். ஒவ்வொரு குரூப்-ம் வெவ்வேறு பெயர் ஐகானில் இருக்கலாம்.

வாட்ஸ்அப் குரூப் அணுகுவது எப்படி?

வாட்ஸ்அப் குரூப் அணுகுவது எப்படி?

இந்த அம்சம் உலகளாவிய ரீதியில் வெளிவந்திருக்கிறது. இது அனைத்து பிராந்தியங்களுக்கும் கிடைக்கும் என வாட்ஸ்அப் முன்னதாகவே அறிவித்தது. இருப்பினும் இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்க சிறிது காலம் எடுக்கலாம். வரும் மாதங்களில் அனைத்து பயனர்களையும் இந்த அம்சம் சென்றடையும் என வாட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது.

அப்டேட் செய்வது அவசியம்

அப்டேட் செய்வது அவசியம்

இந்த புதுப்பிப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இதற்கான அப்டேட்டிற்கு காத்திருக்க வேண்டும். எப்போது இதை பயன்படுத்த விரும்பினாலும் வாட்ஸ்அப் பயன்பாட்டை தங்களது ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்த பிறகு தான் இந்த அனைத்து அம்சங்களும் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
WhatsApp Communities: How to Create Communinity and What is the Use of it?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X