இதையெல்லாம் நாங்க பண்ண மாட்டோம்: வாட்ஸ்அப்பின் புதிய அறிக்கை.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் கூறவேண்டும். மேலும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

 பாகுபலி போல் மிகப் பெரிய வளர்ச்சி

குறிப்பாக பாகுபலி போல் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது சிக்னல் ஆப். அண்மையில் வெளிவந்த தகவலின்படி, சிக்னல் ஆப்பை இன்ஸ்டால் செய்த புதிய பயனர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது.

 பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி

மேலும் வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர்களின் தகவல்கள், செல்போன் நம்பர், முகவரி, ஸ்டேட்டஸ், பண பரிவர்த்தணை என அனைத்து வாட்ஸ்அப் சர்வரில் சேகரித்து வைக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் வருத்தம் அடைந்த பயனர்கள் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலியை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.

வாட்ஸ்அப் குரூப்பை அப்படியே புதிய பொலிவுடன் சிக்னல் ஆப்ஸிற்கு ஈஸியா மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

 ட்வீட்டர் வழியாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட்டர் வழியாக ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் புதிய ப்ரைவஸி அப்டேட் ஆனது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரும் மெசேஜ்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் கூறியுள்ளது.

100 சதவிகிதம் தெளிவாக

வெளிவந்த அறிக்கையின்படி, தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாப்பதில் நாங்கள் 100 சதவிகிதம் தெளிவாக இருக்கிறோம் என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

என்கிற தகவலை வாட்ஸ்அப்

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் கூறிய தகவலின்படி, வாட்ஸ்அப் செயலியும், பேஸ்புக்கும் உங்களது தனிப்பட்ட மெசேஜை அணுகவோ அல்லது உங்களது அழைப்புகளை கேட்கவோ முடியாது.

அதேபோல் நீங்கள் யாருக்கு மெசேஜ் செய்கிறீர்கள், யாருக்கு கால் செய்கிறீர்கள் என்கிற தகவலை வாட்ஸ்அப் நிறுவனம்

சேகரிக்காது.

பகிரும் லோக்கேஷனை

குறிப்பாக நீங்கள் பகிரும் லோக்கேஷனை வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பார்க்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாட்ஸ்அப் உங்களது தொடர்புகளை பேஸ்புக் நிறுவனத்திடம் பகிராது. அதேபோல் வாட்ஸ்அப் க்ரூப் எப்போதும் போல் தனியுரிமைமிக்கதாக இருக்கும்.

பின்பு உங்களது மெசேஜை டிஸ்ஸப்பியர் செய்ய முடியும். அதேபோல் உங்களது டேட்டாவை நீங்களே டவுன்லோட் செய்ய முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp clarifies that new privacy policy does not affect the privacy of your messages with your friends and families: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X