இனி தலையை சுற்றி மூக்கை தொட வேண்டாம்! WhatsApp-ல் அறிமுகமாகும் புது அம்சம்! எல்லாரும் அலெர்ட்!
ஆஹா.. ஓஹோ.. என்று வாட்ஸ்அப் பயனர்களை பாராட்ட வைக்கும் ஒரு புதிய அம்சத்தை நிறுவனம் தற்போது உருவாக்கி வருகிறது. இனி உங்கள் வாட்ஸ்அப் சாட்டை எளிமையாக QR ஸ்கேன் மூலம் வேறொரு போனிற்கு மாற்ற இந்த புதிய அம்சம் அனுமதிக்கும்.
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களின் சாட் அனைத்தும் கூகுள் டிரைவ் (Google Drive) இல் பேக்அப் செய்யப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதை மற்ற போனிற்கு மாற்றம் செய்ய பயனர்கள், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள் டிரைவ் கணக்கை இணைக்க வேண்டும். இது தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்ற நீண்ட நேர செயல்பாடாகும். வாட்ஸ்அப் சாட்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றம் செய்ய நிறுவனம் தற்போது ஈஸியான ஒரு ரூட்டை உருவாக்கியுள்ளது.

அது தான் QR ஸ்கேன் முறைப்படி, ஸ்கேன் செய்து வாட்ஸ்அப் சாட் தகவலை முழுமையாக மற்றொரு போனிற்கு மற்றம் செய்யும் புதிய QR கோட் சாட் டிரான்ஸ்ஃபர் (WhatsApp QR Code Transfer) அம்சம். இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டால், கூகுள் டிரைவ் பேக்அப் மூலம் சாட்களை மாற்றம் செய்யும் வேலை எளிதாகும்.
இந்த புதிய அம்சம் ஒரே OS தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் சிறப்பாக செயல்படும் என்று மெட்டா (Meta) அறிவித்துள்ளது. வாட்ஸ்அப், ஏற்கனவே iOS மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்களுக்கு இடையிலான சாட் மாற்றம் அம்சத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது, இதேபோன்ற அம்சத்தை ஒரே தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்ய தயாராகிறது.
இந்த அம்சத்தின் படி, மாற்றம் செய்யப்படும் வாட்ஸ்அப் சாட் தகவல்கள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் மாற்றம் செய்யப்படும் என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேபோல், வாட்ஸ்அப் கம்பெனியன் மோட் என்ற அம்சத்தையும் தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த அம்சம் ஒரே கணக்கை இன்டர்நெட் சேவை இல்லாமல் வெவ்வேறு சாதனங்களில் அணுக அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப் இன்னும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்கி வருகிறது. சமீபத்தில், மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், ஸ்பேம் வாய்ஸ் கால்களை சைலன்ட் செய்யும் புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக அறிவித்திருந்தது. உலகளவில் ஸ்பேம் கால்களால் பாதிக்கப்படும் வாட்ஸ்அப் பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்த இத்தகைய அம்சத்தை நிறுவனம் உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது. இதேபோல், வாட்ஸ்அப் கால் பேக் அம்சம் மற்றும் மிஸ்டு கால் நோட்டிபிகேஷன் போன்ற அம்சத்தையும் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம், விரைவில் பல புதிய அம்சங்களை அதன் பயனர்களுக்காக அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் வேகமாக செயல்பட்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. விரைவில் வாட்ஸ்அப் நிறுவனம் QR ஸ்கேன் மூலம் சாட்களை மற்ற போனிற்கு டிரான்ஸ்பர் செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்யுமென்று அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








