இனி அந்த கவலை வேணாம்- வாட்ஸ்அப்-ல் வரவிருக்கும் புதிய மேம்பட்ட தேடுதல் அம்சம்: குறிப்பா அவர்களுக்கு தான்!

|

புதுப்பிக்கப்பட்ட தேடல் அம்சமானது வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் தங்கள் தொடர்புகள், தெரியாத எண்களின் தகவல் அல்லது படிக்காத செய்திகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட செய்திகளை ஒரே நேரத்தில் வேகமாக பார்க்க அனுமதிக்கிறது. மேம்பட்ட தேடல் விருப்பம் பயனர்கள் தங்கள் தொடர்புகளின் புகைப்படம் அல்லது வீடியோ போன்ற பெறப்பட்ட தகவல்களை தேடவும் அனுமதிக்கிறது.

ஆன்லைன் வணிக தளமான வாட்ஸ்அப்

ஆன்லைன் வணிக தளமான வாட்ஸ்அப்

சமூகவலைதள தகவல்கள் மற்றும் ஆன்லைன் வணிக தளமான வாட்ஸ்அப், அதன் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த புதிய புதுப்பிப்புகள் மற்றும் அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. பயனர்கள் தங்கள் தேடல்களை ஃபில்டர் செய்யவும் பிறர் அனுப்பும் செய்திகளை எளிதாக கண்டறியவும் பயன்படுகிறது. இந்த அம்சமானது வாட்ஸ்அப் பிஸ்னஸ் புதுப்பிப்பில் கிடைப்பதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த புதுப்பிப்பு அம்சமானது தற்போது சோதனையில் இருக்கிறது.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் புதிய அப்டேட் ஆனாது வாட்ஸ்அப் பீட்டா டிராக்கரான வீபீட்டா இன்ஃபோ-வில் இருந்து அறிக்கை வந்துள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுக்கு மூன்று வெவ்வேறு மேம்பட்ட தேடல் ஃபில்டர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட தேடல் ஃபில்டர்கள் ஆனது வாட்ஸ்அப் பிஸ்னஸ் பயனர்கள் தங்கள் தொடர்புகள், தெரியாத எண்கள் அல்லது படிக்காத செய்திகளை ஒரே நேரத்தில் வேகமாக படிக்க அனுமதிக்கிறது. அதேபோல் தங்கள் தொடர்புகள் அனுப்பிய புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்பிய சேட்டிங்கில் இருந்து தேடுவதற்கு அனுமதிக்கிறது.

புதுப்பிப்பு குறித்த ஸ்க்ரீன்ஷாட்

புதுப்பிப்பு குறித்த ஸ்க்ரீன்ஷாட்

இந்த புதுப்பிப்பு குறித்த ஸ்க்ரீன்ஷாட்டையும் வீபீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. ஸ்க்ரீன்ஷாட்டின்படி வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்ட் தளத்தில் இந்த பயன்பாடு காணப்படுகிறது. ஐஓஎஸ் சாதனங்களுக்கான வாட்ஸ்அப் பிஸ்னஸ் பீட்டா பதிப்பிலும் இந்த புதிய அம்சங்கள் வெளியிடப்படுவதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் இந்த அம்சத்தை சோதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் குறித்த கூடுதல் தகவல் விவரமாக தெரியவில்லை.

பல்வேறு புது அம்சங்கள்

பல்வேறு புது அம்சங்கள்

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் தளத்தில் வாய்ஸ் மெசேஜ் ப்ரிவ்யூ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் மற்றும் டெஸ்க்டாப் அடிப்படையிலான இயங்குதளத்தில் கிடைக்கிறது. இந்த அம்சத்தின் விரிவான பயன்பாடு மற்றும் ஆக்டிவேட் செய்வது குறித்து பார்க்கலாம்.

பயனர்களின் தேவை புரிந்து பல்வேறு அம்சங்கள்

பயனர்களின் தேவை புரிந்து பல்வேறு அம்சங்கள்

மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர்களின் தேவை புரிந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் புது அம்சங்கள் அறிமுகம் செய்துள்ளது என்ற தகவல் அறிந்தாலும் சிலர் தங்களது வாட்ஸ்அப் பயன்பாட்டில் அந்த புதிய அம்சங்களை காண்பது இல்லை என தெரிவிக்கின்றனர். காரணம், பலரும் வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்வதில்லை என்பதே ஆகும். ப்ளேஸ்டோருக்கு சென்று வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்யும் பட்சத்தில் தொடர்ந்து புது அம்சங்களை பயன்படுத்தலாம்.

வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் புதிய மேம்பாட்டு அம்சம்

வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் புதிய மேம்பாட்டு அம்சம்

வாட்ஸ்அப் தளம் பயனர்களின் தேவை அறிந்து பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ்களுக்கு ப்ரிவியூ அம்சத்தை அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப் தளம் அதன் வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை படிப்படியாக மேம்படுத்தி வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் தளத்தின் வாய்ஸ் மெசேஜ் பயன்பாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வாய்ஸ் செய்தியில் பின்னணி வேகத்தை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்அப் அதன் வாய்ஸ் மெசேஜ் தளத்தில் மற்றொரு மேம்பட்ட அம்சத்தை அறிமுகம் செய்தது.

மற்றொரு புதுப்பிப்பு அம்சம்

மற்றொரு புதுப்பிப்பு அம்சம்

வாட்ஸ்அப் அதன் தளத்திற்கு மற்றொரு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் தளத்தில் வாய்ஸ் மெசேஜ்களை தங்கள் தொடர்புகளுக்கு அனுப்பும் முன் அவற்றை ப்ரிவ்யூ செய்ய அனுமதிக்கிறது. இந்த அம்சமானது voice message preview Feature என்று அழைக்கப்படுகிறது. வாட்ஸ்அப் தளத்தில் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட்டை தொடர்புகளுக்கு அனுப்பும் முன் அவற்றை ஒருமுறை கேட்க அனுமதிக்கும். தொடர்புகளுக்கு அனுப்பப்படும் வாய்ஸ் மெசேஜ்களில் இந்த மேம்பாடு மிக உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது

Best Mobiles in India

English summary
Whatsapp Business is testing the new advanced search option feature in beta

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X