வாட்ஸ்அப் பல்க் டெலிட் அம்சம்.! பயன்கள் என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?

|

வாட்ஸ்அப் நிறுவனம் மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகளவு மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். அதன்படி பயனர்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

என்றுதான்

வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அம்சம் என்னவென்றால், bulk delete (மொத்தமாக டெலிட் செய்தல்) அம்சம், இது கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

சேஜ்கள் அல்லது ஒரு

இந்த புதிய bulk delete வாட்ஸ்அப் அம்சமானது டாக்குமென்ட், லின்க்ஸ், டெக்ஸ்ட்கள், காண்டாக்ஸ், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள், போட்டோஸ் மற்றும் ஒரு தனிப்பட்ட சாட்டின் வாய்ஸ் மெசேஜ்கள் அல்லது ஒரு க்ரூப் சாட்டை ஒரே கிளிக்கில் டெலிட் செய்ய உதவுகிறது.

Samsung M7 மற்றும் M5 ஸ்மார்ட் மானிட்டர் அறிமுகம்.. ஒரே நேரத்தில் பல வேலை பார்க்கலாம்..பலே..

ஆயிரக்கணக்கான

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இது வாட்ஸ்அப்-ல் சிறிய அளவிலான இடத்தை விடுவிக்கவும், உங்கள் ஆயிரக்கணக்கான மெசேஜ்களையும் மற்றும் மீடியா பைல்களையும் நிர்வாகிக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

 நீங்கள் வாட்ஸ்அப்

இந்த புதிய அம்சத்தினை நீங்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனுவில் காணலாம். ஒருவேளை இந்த புதிய அம்சம் உங்களுக்கு அணுக கிடைக்கவில்லை என்றால், ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர்-லிருந்து பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யலாம்.

வ்வாறு பயன்படுத்துவது என்பது

இந்த அட்டகாசமான அம்சத்தினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த எளிமையான வழிமுறைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆண்ட்ராய்டில் பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டில் பயன்படுத்துவது எப்படி?

உங்களது ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்அப்-ஐ திறந்து மேலே காணப்படும் மூன்று புள்ளிகளை கிளக் செய்யவும். அடுத்து உங்களது செட்டிங்ஸ்-பகுதிக்கு செல்லவும்.

இப்போது 'Data and storage usage' என்பதை கிளிக் செய்து பின்னர் Storage usage-ற்குள் செல்லவும்.

பின்னர் பல்க் டெலிட் அம்சதினை பயன்படுத்த விரும்பும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட க்ரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டை தேர்வு செய்யவும்.

அடுத்து Free up space என்பதை தேர்வு செய்து Delete items என்பதை கிளிக் செய்தால் போதும்.

ஐபோனில் பயன்படுத்துவது எப்படி?

ஐபோனில் பயன்படுத்துவது எப்படி?

உங்களது ஐபோனில் வாட்ஸ்அப்-ஐ திறந்து செட்டிங்ஸ் மெனுவிற்குள் செல்லவும்.

இப்போது scroll செய்து கீழ் நோக்கி செலவும், அங்கு Storage Usage என்கிற விருப்பத்தை கிளிக்

செய்யவும்.

அடுத்து பல்க் டெலிட் அம்சத்தினை பயன்படுத்த விரும்பும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட க்ரூப் சாட் அல்லது தனிப்பட்ட சாட்டை தேர்வு செய்யவும்.

பின்னர் கீழ் பகுதியில் Manage என்கிற விருப்பத்தினை நீங்கள் காண்பீர்கள். கடைசியாக Clear என்பதை கிளிக் செய்தல் வேண்டும், அவ்வளவு தான்.

ஆனாலும் நீங்கள் டெலிட் செய்த மெசேஜ்கள் உங்களது ஸ்மார்ட்போனில் இருந்து அல்ல வாட்ஸ்அப்பில் இருந்து மட்டுமே நீக்கப்படும் என்பதை இங்கே கவனிக்க வேண்டியது அவசியம். சுருக்கமாக இந்த அம்சம் ஆப்பின் ஸ்டோரேஜை சுத்தம் செய்ய மட்டுமே உதவும். போன் ஸ்டோரேஜை சுத்தம் செய்ய உதவாது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Bulk Delete feature.! What are the uses? How to use?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X