மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் தரமான வசதியை கொண்டுவரும் வாட்ஸ்அப்.!

|

வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த செயலியில் பல்வேறு புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் டைப் செய்யும் இடத்தில் ஒரு பிரத்யேக பேமண்ட் பட்டனைச் சேர்க்கிறது.

 ஷார்ட்கட் ஆனது பய

அதாவது இந்த புதிய ஷார்ட்கட் ஆனது பயனர்களை சாட் பாரில் இருந்தபடியே விரைவாக பணம் அனுப்ப உதவும் என்றுகூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஷார்ட்கட் பற்றிய தகவலை WaBetaInfo தளம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அம்சம் இப்போது

குறிப்பாக இந்த புதிய அம்சம் இப்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா டெஸ்ட்களுக்கு அணுக கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஷார்ட்கட் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.21.1-க்கான வாட்ஸ்அப் பீட்டாவின் ஒரு பகுதியாக பயன்படுத்த கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி ஒரு ஈர்ப்பு: மறுபடியும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்- 8 ஜிபி ரேம், மூன்று கேமராவுடன் விவோ ஒய்33 எஸ்!அப்படி ஒரு ஈர்ப்பு: மறுபடியும் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்- 8 ஜிபி ரேம், மூன்று கேமராவுடன் விவோ ஒய்33 எஸ்!

ம் அனுப்ப வேண்டும்

வாட்ஸ்அப் வழியே பணம் அனுப்ப வேண்டும் என்றால், பயனர்கள் இப்போது குறிப்பிட்ட சாட்டில் உள்ள அட்டாச்மெண்ட் விருப்பத்தை கிளிக் செய்து, டாக்குமென்ட், கேமரா, Gallery, ஆடியோ போன்றவைகளுக்கு அடுத்தபடியாக இருக்கும் பேமண்ட் ஐகானை அணுகலாம். ஆனால் இப்போது கூறப்பட்டுள்ள புதிய பேமண்ட் பட்டன் ஆனது அட்டாச்மென்ட் ஐகானுக்குள் செல்லும் வேலையை குறைக்கும்.

எதிர்பார்த்திடாத மலிவு விலையில் புது Realme Narzo 30 5G மாடல்: ரியல்மி பேன்ஸ் பெஸ்டிவலில் இன்னும் ஏராள சலுகைஎதிர்பார்த்திடாத மலிவு விலையில் புது Realme Narzo 30 5G மாடல்: ரியல்மி பேன்ஸ் பெஸ்டிவலில் இன்னும் ஏராள சலுகை

பட்டுள்ளது. எனவே

அதாவது இது சாட் பாரிலேயே, அட்டச்மெண்ட், கேமரா பட்டனுக்கு இடையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் இனி சில நொடிகளில் பணம் அனுப்ப வாட்ஸ்அப் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகை வியப்பில் ஆழ்த்திய அரிய வகை 'பிங்க் டால்பின்'.. வைரல் ஆகும் வீடியோ.. நிறத்திற்கான காரணம் இதுதானா?உலகை வியப்பில் ஆழ்த்திய அரிய வகை 'பிங்க் டால்பின்'.. வைரல் ஆகும் வீடியோ.. நிறத்திற்கான காரணம் இதுதானா?

டெஸ்ட்களுக்கும் இந்த ஷார்ட்கர்ட்

மேலும் iOS பீட்டா டெஸ்ட்களுக்கும் இந்த ஷார்ட்கர்ட் அணுக கிடைப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்புஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்பு

மீபத்தில் கொரோனா தடுப்பூசி

அதேபோல் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ் வழங்கும் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ் நீங்கள் எடுத்திருத்தால், உங்களால் சான்றிதழை
பதிவிறக்கம் செய்ய முடியும். அதேபோல் இந்த சான்றிதழ் இருந்தால் தான் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் சுற்றுலா தளங்களில் அனுமதி வழங்கப்படுகிறது.

ய சுகாதாரத்துறை அமைச்சகம்

இதற்குவேண்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள +91 9013151515-மொபைல் எண்ணை பதிவு செய்து, அதன்பின்பு வாட்ஸ்அப்பில் 'COVID CERTIFICATE' என்று அனுப்பினால் ஓடிபி எண் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Credit- WaBetaInfo

Best Mobiles in India

English summary
WhatsApp brings new shortcut to send money soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X