'ஃபாஸ்ட் பிளேபேக்' என்ற புதிய அம்சத்தை வெளியிட்ட வாட்ஸ்அப்.. நேரத்தை மிச்சப்படுத்துறீங்க ஓகே.. ஆனா.?

|

வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக 'ஃபாஸ்ட் பிளேபேக்' என்ற புதிய அம்சத்தைத் தனது புதிய அப்டேட் மூலம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம், உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் வரும் ஆடியோ மெசேஜ்கள் மற்றும் பைல்களை இரண்டு பின்னணி வேகத்தில் இயக்க அனுமதிக்கிறது. நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை வேகமாக கேட்டு முடிப்பதற்கு இந்த அம்சம் வழிவகுத்துள்ளது. இந்த புதிய அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை இனி டக்குனு கேட்கலாம்

நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை இனி டக்குனு கேட்கலாம்

இந்த புதிய அம்சமானது நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை எளிதாகக் கேட்க உங்களை அனுமதிக்கின்றன. மேலும், நீண்ட செய்திகளில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்ந்தெடுப்பதற்கும், பெரிய வாய்ஸ் மெசேஜ்களுக்கென்று நாம் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும் இந்த ஃபாஸ்ட் பிளேபேக் அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் படி வாய்ஸ் மெசேஜ்களை வேகப்படுத்துவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது.

ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம்

ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம்

உண்மையைச் சொல்லப்போனால், நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை பெரும்பாலும் வாட்ஸ்அப் பயனர்கள் யாரும் முழுமையாகக் கேட்டு முடிப்பதில்லை. இதை எளிமையாக்கும் நோக்கத்தில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய ஃபாஸ்ட் பிளேபேக் அம்சம் தற்பொழுது அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கென்று வெளியிடப்பட்ட புதிய வாட்ஸ்அப் அப்டேட் மூலம் கிடைக்கிறது.

சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!சும்மா இல்ல., 62% தள்ளுபடி- அந்த விலை ஸ்மார்ட்போனே இந்த விலையில்: பிளிப்கார்ட் ஃபிளாக்ஷிப் ஃபெஸ்ட் சேல்!

1x, 1.5x மற்றும் 2x என்று மூன்று வேகம்

1x, 1.5x மற்றும் 2x என்று மூன்று வேகம்

இந்த ஃபாஸ்ட் பிளேபேக் அம்சத்தில் இரண்டு புதிய பின்னணி வேகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன, இதற்கு முன்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த இயல்பு வேகத்துடன் மொத்தமாக இப்போது மூன்று பின்னணி வேகங்களில் நீங்கள் இனி ஆடியோ மெசேஜ்களை கேட்கலாம். இதில் 1x, 1.5x மற்றும் 2x என்று வேகம் மூன்று தரப்பில் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 1x வேகம் என்பது எப்போதும் போல் செயல்படும் இயல்புநிலை வேகமாகும்.

5% மற்றும் 100% வேகத்தில் இயக்க புதிய அனுமதி

5% மற்றும் 100% வேகத்தில் இயக்க புதிய அனுமதி

டிஃபால்ட் வேகத்தைத் தவிர்த்து வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய வேகம் தான் 1.5x மற்றும் 2x வேகங்கள். வாய்ஸ் மெசேஜ்களின் அசல் பின்னணி வேகத்தை விட இவை கூடுதல் வேகத்தில் செயல்படுகிறது. தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 1.5x மற்றும் 2x ஆகிய வேகங்கள் உங்களின் வாட்ஸ்அப் ஆடியோ ஃபைல்களை முறையாக 5% மற்றும் 100% வேகத்தில் இயக்க அனுமதிக்கிறது என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

நேரத்தை மிச்சப்படுத்துறீங்க ஓகே.. ஆனா.?

நேரத்தை மிச்சப்படுத்துறீங்க ஓகே.. ஆனா.?

வாட்ஸ்அப் பயனாளர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்த விரும்பினால், உடனடியாக உங்களின் வாட்ஸ்அப் ஆப்ஸை அப்டேட் செய்தாக வேண்டும். வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்ஷனான 2.21.101 என்ற வெர்ஷனில் தான் இந்த புதிய 'ஃபாஸ்ட் பிளேபேக்' அம்சம் கிடைக்கிறது. அண்ட்ராய்டு மற்றும் iOS இரண்டிலும் இப்போது இந்த அம்சம் கிடைக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஆனால், அதிவேகத்தில் இயங்கும் போது வாய்ஸ் மெசேஜ்ஜில் என்ன தகவல் சொல்லப்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

Best Mobiles in India

English summary
WhatsApp Brings New Playback Speed Toggle for Voice Messages in Both Android and iOS Platforms : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X