Home
News

வெகேஷன் மோட்: வாட்ஸ்அப் நிறுவனத்தின் புத்தம் புதிய அப்டேட்.!

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய புதிய அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதிய வசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

வெகேஷன் மோட்

அதன்படி வெகேஷன் மோட் என்ற புத்தம் புதிய அப்டேட்டை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது தற்சமயம் பீட்டா பயன்பாட்டளர்களின் சோதனையில் உள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து ஆண்ட்ராய்டுவாடிக்கையாளர்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட் சிறப்பு என்னவென்றால்,

இந்த புதிய அப்டேட் சிறப்பு என்னவென்றால், அர்சிவ் செய்யப்பட்ட சாட்களையும் மியூட் செய்துகொள்ள முடியும். இதற்குமுன்பு வரை வாட்ஸ்அப்-ல் இந்த ஆப்ஷன் இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இந்த ஆப்ஷன் கொண்டுவரவுள்ளதாக அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம் சிலா காரணங்களால் அதை கிடப்பில் போட்டது. இந்தநிலையில் மீண்டும் வெகேஷன் மோட் ஆப்ஷனை டெவலப் செய்துள்ளது. பின்பு இது விரைவில் பயன்பாட்டுக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்அப் நிறுவனம் தனது

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சாட்டுக்கும் தனி வால்பேப்பர் வைத்துக்கொள்ளக்கூடிய புதிய அப்டேட்டை பரிசோதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வால்பேப்பர் அப்டேட் ஒன்றை

இந்நிறுவனம் புதிய வால்பேப்பர் அப்டேட் ஒன்றை விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, தற்போது இது வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டு சோதனையில் இருக்கும் அப்டேட்டின் மூலம் பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட சாட்-க்கும் தனித்தனியே வால்பேப்பரை வைத்துக்கொள்ள முடியும். பின்பு கேலரியில் இருக்கும் புகைப்படங்களையும் தனித்தனியாக மாற்றிக்கொள்ள முடியும்.

ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில்

அட்வான்ஸ் சர்ஸ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள் புதிய ஐகான்கள் உள்ளிட்டவற்றை அந்நிறுனம் தொடர்ந்து தயாரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டார்க் மோட் அல்லது லைட் மோட் என்று

மேலும் டார்க் மோட் அல்லது லைட் மோட் என்று ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியே வைத்துக்கொள்ள முடியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் அன்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய மேம்பட்ட தேடல் (Advanced Search Mode) முறை அம்சத்தை வெளியிட்டது.

 வாட்ஸ்அப்பில் அரட்டை,

இந்த Advanced Search Mode அம்சத்தின் உதவியுடன், பயனர் வாட்ஸ்அப்பில் அரட்டை, புகைப்படங்கள், ஜிஃப்கள், ஆடியோ, ஆவணங்கள் போன்றவற்றை மிக எளிதாக தேட முடியும். இருந்தபோதிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் ஒரு மாதத்திற்கு முன்பே ஐஒஎஸ் மொபைல் பயனர்களுக்கு கிடைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp Working on Vacation Mode for Android And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X