வாட்ஸ்ஆப் அப்டேட் : சட்டு'னு நினைச்சா பட்டு'னு தூக்கிடலாம்.!

கொஞ்ச நாட்களுக்கு முன் தான் புதிய வாட்ஸ்ஆப் அப்டேட் வழங்கப்பட்டது அதற்குள் இன்னொன்றா இதில் என்ன அம்சம் வழங்கியுள்ளார்கள், பார்ப்போமா.??

By Meganathan
|

வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் மூலம் போட்டி ஆப்ஸ்களிடம் இருந்து வித்தியாசமானது என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியாக வாட்ஸ்ஆப்பில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ கால் அம்சம் சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. தற்சமயம் மற்றொரு அம்சமும் பீட்டா ஆப்பில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் ஷேர் செய்யப்பட்ட வீடியோக்கள் டவுன்லோடு ஆகும் போதே ஸ்ட்ரீம் செய்ய முடியுமாம்.

வாட்ஸ்ஆப் அப்டேட் : சட்டு'னு நினைச்சா பட்டு'னு தூக்கிடலாம்.!

வாட்ஸ்ஆப்பிற்கு பல்வேறு காண்டாக்ட் மற்றும் க்ரூப்களில் இருந்து வரும் வீடியோக்களை முழுமையாக டவுன்லோடு செய்து அதன் பின் வீடியோ பிடிக்காமல் போகும் அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. இனி வாட்ஸ்ஆப் வீடியோக்களை முழுமையாக டவுன்லோடு செய்யும் முன், இந்த வீடியோ வேண்டுமா, அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்திட முடியும்.

புதிய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பு (v2.16.367) மூலம் உங்களுக்கு வரும் வீடியோக்கள் டவுன்லோடு ஆகும் போதே அவற்றை ஸ்ட்ரீம் செய்து பார்க்க முடியும். இதனால் இந்த வீடியோ வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியும். இதனால் வீடியோ டவுன்லோடு ஆகும் போதே அவற்றை நிறுத்த முடியும். இவ்வாறு செய்யும் போது பிடிக்காத வீடியோக்கள் டவுன்லோடு ஆகும் டேட்டாவை மிச்சம் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதாரண வாட்ஸ்ஆப் அப்டேட் போன்று டவுன்லோடு பட்டன் மட்டும் இல்லாமல் வீடியோவை பிளே செய்யக் கோரும் ஆப்ஷனும் இருக்கும். இதனைக் கிளிக் செய்ததும் வீடியோ பேக்கிரவுண்டில் டவுன்லோடு ஆகும் போதே வீடியோ பிளே ஆகும். வீடியோ பிளே ஆகும் போதே அது பஃப்பர் ஆவதையும் உங்களால் பார்க்க முடியும்.

இந்த அம்சமானது தற்சமயம் வரை வாட்ஸ்ஆப் பீட்டா ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதோடு வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் இருந்து வரும் வீடியோக்களில் பிளே செய்யும் பட்டன் தெரியும். சாதாரண வாட்ஸ்ஆப் பயனரிடம் இருந்து வரும் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். புதிய அம்சம் அனைத்துப் பயனர்களுக்கும் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் தற்சமயம் வரை வழங்கப்படவில்லை.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
WhatsApp beta’s new feature lets you stream shared video, as it is downloading

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X