வாட்ஸ்அப்க்கு வந்த புதிய அம்சம்.. அனிமேஷன் அவதார் இனி யாருக்கெல்லாம் கிடைக்கும்?
வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு அற்புதமான புதிய அம்சத்தை நிறுவனம் தற்போது அதன் பீட்டா சோதனை தளத்தில் அறிமுகம் செய்து, சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு வெளியாகியுள்ள அம்சம் என்ன செய்யும் என்பதை பார்க்கலாம்.
மெட்டாவின் பிரபலமான மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் பயன்பாடானது, கூகுள் ப்ளே பீட்டா திட்டத்தின் மூலம் ஒரு அற்புதமான புது அப்டேட்டை அறிமுகப்படுத்துகிறது. இதன் வெர்ஷன் 2.23.16.12 பீட்டா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. WABetaInfo இன் கூற்றுப்படி, சமீபத்திய WhatsApp அப்டேட் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை கொண்டுவருவதாக கூறப்பட்டுள்ளது.

அப்படி என்னப்பா அம்சம்? அது என்ன அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சம்? அது என்ன செய்யும் என்று வேகமாக சொல்லுங்க? என்று நீங்கள் அவசரப்படுவது எங்களுக்கு புரிகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் இப்போது அதன் தளத்தில் அனிமேஷன் அவதாரங்களின் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது முன்பு வளர்ச்சியில் இருந்தது. பரிசோதனைக்காக பீட்டா சோதனையாளர்களைத் தேர்ந்தெடுக்க இப்போது கிடைக்கிறது.
அனிமேஷன் செய்யப்பட்ட அவதார் அம்சமானது, பயனர்களுக்கு அவர்களின் தற்போதைய அவதார்களின் அனிமேஷன் பதிப்புகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே இருக்கும் அவதார் பேக்கை மேம்படுத்துகிறது. இது அவதாரங்களுக்கு ஒரு மாறும் மனிமேஷன் மூவ்மெண்டை கொண்டுவருகிறது. இந்த அம்சத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும் பயனர்களுக்கு வெளிப்படையான தகவல்தொடர்பு அனுபவத்தை மேம்படுத்துகிறது.
உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் அம்சம் இயக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க, சாட் சென்று அவதார் டேப் விருப்பத்தை திறக்கவும். சில அவதாரங்களுக்கு அனிமேஷன் இருந்தால், நீங்கள் இப்போது அனிமேஷன் அவதாரங்களைப் பகிரலாம் என்று அர்த்தம். இதில் மிக சிறந்த அம்சம் என்னவென்றால், பெறுநர்கள் உரையாடலில் அவர்கள் பெறும் அனிமேஷன் அவதாரங்களைப் பார்க்க அம்சத்தை இயக்க அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

அதாவது பீட்டா அல்லாத சோதனையாளர்களுடனும் உங்கள் அனிமேஷன் அவதாரங்களை நீங்கள் தாராளமாகப் பகிரலாம். தற்போது, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டாவை நிறுவிய சில பீட்டா சோதனையாளர்களுக்கு அனிமேஷன் அவதாரங்கள் கிடைக்கின்றன. வரவிருக்கும் வாரங்களில் இதன் வெளியீடு தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.
விரைவில் இந்த பீட்டா அம்சம், அணைத்து வாட்ஸ்அப் பயனர்கள் மற்றும் தொடர்ந்து பொதுவான வாட்ஸ்அப் இன் அதிகமான பயனர்களை சென்றடையும் என்று சில தகவல்கள் கசிய துவங்கியுள்ளது. அனிமேஷன் செய்யப்பட்ட அவதாரங்களுடன், வாட்ஸ்அப் இப்போது வாய்ஸ் மெசேஜ் போன்ற வீடியோ மெசேஜ்ஜிங் அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
இதேபோல், வாட்ஸ்அப் பயனர்களின் நேரத்தைச் சேமிக்கும் அம்சமாக குழு உருவாக்கும் அம்சம் மற்றும் மெட்டீரியல் டிசைன் 3 மேம்பாடுகள் உள்ளிட்ட பிற அற்புதமான அம்சங்களிலும் WhatsApp செயல்படுகிறது. இந்த புதிய அம்சங்களையும் நிறுவனம் மிக விரைவில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது. எது எப்படியாக இருந்தாலும், வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்களை இந்த ஆண்டில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் வெறும் மெசேஜ்ஜிங் தளமாக மட்டும் இருந்த வாட்ஸ்அப். இப்போது உலகளவில் பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் ஆள் இன் ஒன் ஆப்ஸாக மாறியுள்ளது. டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வாய்ஸ் காலிங், வீடியோ காலிங், குரூப் சாட், குரூப் வாய்ஸ் கால்ஸ், குரூப் வீடியோ காலிங், மீடியா மற்றும் பைல் ஷேரிங் போன்ற அம்சங்களையும் நிறுவனம் அறிமுகம் செய்து, இப்போது நாம் நினைத்து பார்க்காத அம்சங்களை எல்லாம் அறிமுகம் செய்து, அதன் தளத்தை மேம்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications








