புது IT விதியால் 47 லட்சம் இந்திய WhatsApp கணக்குகளுக்கு தடை! உப்பு தின்னா தண்ணீ குடிக்கணும்!
வாட்ஸ்அப் (WhatsApp) இல் எல்லை மீறுவர்களை கண்டித்து நீண்ட-காலமாக நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டை சிலர் சரியான விதிகளுடன் பயன்படுத்துவதில்லை. இத்தகைய கணக்குகள் மீது அதிகமான புகார்கள் பதிவாகியுள்ளது. இந்த கணக்குகள் மீது வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ்ஜிங் தளமான வாட்ஸ்அப் இப்போது இந்திய பயனர்கள் மீது கடும் நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. மார்ச் 2023 இல் இந்திய சந்தையில் இருந்து சுமார் 47 லட்சத்திற்கும் அதிகமான மோசமான வாட்ஸ்அப் கணக்குகளை நிறுவனம் பதிவைத் தடை செய்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டின், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் பதில் அளித்துள்ளது.

மார்ச் 1 மற்றும் மார்ச் 31 ஆம் தேதிக்கு இடையில், சுமார் 47,15,906 WhatsApp கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும் 16,59,385 கணக்குகள் முன்கூட்டியே தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த 16 லட்சம் கணக்குகள், பயனர்களிடமிருந்து எந்த புகார்களும் பதிவாகி வருவதற்கு முன்பே, WhatsApp இந்த கணக்குகளை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் இன் கண்காணிப்பில் சிக்கிய தவறான கணக்குகளையும் நிறுவனம் நீக்கிவிட்டதாக அதன் மாதாந்திர இணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கிட்டத்தட்ட 500 மில்லியன் பயனர்களைக் கொண்ட பிரபலமான மெசேஜ்ஜிங் தளமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. நாட்டில் மார்ச் மாதத்தில் 4,720 புகார் அறிக்கைகளைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 585 புகார்கள் மீது நிறுவனம் உடனடி நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளது. வாட்ஸ்அப்பின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்பான தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், "இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தில் முறைகேடுகளை எதிர்த்து வாட்ஸ்அப்பின் சொந்த தடுப்பு நடவடிக்கைகளாக என்னென்ன செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மில்லியன் கணக்கான இந்திய சமூக ஊடக பயனர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர், ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை (GAC) தொடங்கினார், இது உள்ளடக்கம் மற்றும் பிற சிக்கல்கள் தொடர்பான தகவல்களை ஆராயும் என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை குறைகள் மேல் முறையீட்டுக் குழுவிடமிருந்து பெறப்பட்ட உத்தரவுகள் 3 என்றும், இணங்கிய உத்தரவுகள் 3 என்றும் நிறுவனம் கூறியது. புதிதாக உருவாக்கப்பட்ட குழு, பிக் டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நாட்டின் டிஜிட்டல் சட்டங்களை வலுப்படுத்தும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமூக ஊடக தளங்களின் முடிவுகளுக்கு எதிராக பயனர்களின் மேல்முறையீடுகளையும் இது கவனிக்கும்.
சமீபத்தில் திருத்தப்பட்ட ஐடி விதிகள், 2021 இன் கீழ் தேவைப்படும் மூன்று ஜிஏசிகளை நிறுவ ஐடி அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. திறந்த, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை நோக்கிய ஒரு முக்கிய உந்துதலில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 'டிஜிட்டல் நாக்ரிக்ஸ் (Digital Nagriks)' உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








