Home
News

இந்தியா: ஜனவரி மாதத்தில் 18 லட்சம் அக்கவுண்ட்களை தடை செய்த வாட்ஸ்அப்.!

வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பு நிறைந்த அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 18 லட்சத்து 58 ஆயிரம் அக்கவுண்ட்களை இந்தியாவில் தடை செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி

அதாவது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் எத்தனை அக்கவுண்ட்கள் தடை செய்யப்படுகின்றன எனற முழு விவரங்களையும்வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தான் ஜனவரி 1,2022 முதல் ஜனவரி 31, 2022 வரை சுமார் 18 லட்சம் அக்கவுண்ட்கள் தடை
செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இதில் விதிகளை மீறியதாலே

குறிப்பாக இதில் விதிகளை மீறியதாலே பெரும்பாலான அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பயனர்கள் தெரிவிக்கும்குற்றச்சாட்டுகளின் அடிப்படையலும் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே
285 குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் எதிர்கொண்டுள்ளது.

எற்கனவே பதிவிடப்பட்ட குற்றச்சாட்டு

அதேபோல் எற்கனவே பதிவிடப்பட்ட குற்றச்சாட்டுகளே மீண்டும் பதிவாகி இருப்பின் அவற்றை மட்டும் வாட்ஸ்அப் நடவடிக்கைக்கு எடுத்துக் கொள்ளாது. மற்றப்படி பயனர்கள் தெரிவிக்கும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளை இந்நிறுவனம் பரிசீலனை செய்து அதற்கு தகுந்தநடவடிக்கை எடுக்கும்.

ந்நிறுவனம் பயனள்ள ஒரு புதிய

சமீபத்தில் இந்நிறுவனம் பயனள்ள ஒரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் குரலிலேயே தகவல்களை பதிவு செய்து அனுப்பும் வாய்ஸ் மேசேஜ் வசதி உள்ளது.தற்போது இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செயலியில் யாராவது வாய்ஸ் மெசேஜ்

வாட்ஸ்அப் செயலியில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சாட் விண்டோவில் தான் அவர் அனுப்பிய மேசேஜ்ஜை பார்க்க முடியும். குறிப்பாக ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் அந்த வாய்ஸ் மேசேஜ் ஆனது தானாக நின்றுவிடும் என்பது நமக்கு தெரியும்.

மீபத்தில் வெளியிட்டுள்ள அப்டேட்

ஆனால் சமீபத்தில் வெளியிட்டுள்ள அப்டேட் மூலம், வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே இந்த அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

வேண்டும் என்றால், ஒருவ

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சாட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் எப்போது கிடைக்கும் எனத் தகவல் வெளிவரவில்லை.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
WhatsApp bans 18 lakh accounts in January in india: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X