இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!

|

வாட்ஸ்அப் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் பல அம்சங்களையும் தரங்களையும் கொண்டிருக்கிறது. அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். இணைக்க அறிக்கையில் பல்வேறு வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை

வாட்ஸ்அப் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை

அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, அக்டோபர் மாதத்தில் மட்டும் 20,60,000 இந்திய கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து மொத்தம் 500 புகார்கள் வந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 2.069 மில்லியன் கணக்குகளை தடை செய்ததாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதேபோல் 248 பயனர்களிடம் இருந்து குறிப்பிட்ட வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்ய வேண்டும் என முறையீடுகளை பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

2 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் தடை

2 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் தடை

அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது என சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கை தெரிவிக்கிறது. ஐடி விதிகள் 2021-ன் படி அக்டோபர் மாதத்திற்கான ஐந்தாவது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட பயனர் புகார்கள் மற்றும் அதற்குரிய நடவடிக்கை குறித்து வாட்ஸ்அப் அறிக்கையில் குறிப்பிட்டு வருகிறது. பயனர் அறிக்கைகளின் அடிப்படையில் 18 வாட்ஸ்அப் கணக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அக்டோபர் தடை செய்யப்பட்ட 2.069 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் வாட்ஸ்அப்பின் சொந்த கருவிகள் பயன்படுத்தி கண்காணிக்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ் அறிக்கை

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ் அறிக்கை

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ் சமீபத்திய வாட்ஸ்அப் இந்தியா மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதத்தில் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விவரத்து அறவித்துள்ளது. இதில் பயனர்களிடம் இருந்து மொத்தம் 500 புகார்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை தடை மேல்முறையீட்டு வகையை சேர்ந்தவை என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நடவடிக்கை எடுப்பது என்பது பயனர் புகாரின் விளைவாக ஒரு கணக்கை தடை செய்வதையோ அல்லது முன்பு தடை செய்யப்பட்ட கணக்கை மீட்டெடுப்பதையோ குறிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதி

குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதி

பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது. அது grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.

2.069 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை

2.069 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை

அக்டோபர் மாதம் தடை செய்யப்பட்ட 2.069 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகளில் பெரும்பாலானவை இந்த முறைகேடு கண்டறிதல் செயல்முறையில் கீழ் கண்டறியப்பட்டது. இதேபோல் செப்டம்பர் மாதம் இந்தியாவில் 2.209 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதில் பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட 309 தடை முறையீடுகளும் அடங்கும். இதில் 50 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தவறான நடத்தையை தடுக்க நடவடிக்கை

தவறான நடத்தையை தடுக்க நடவடிக்கை

வாட்ஸ்அப் தனது ஆதரவு பக்கத்தில் இந்த தகவல் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. புகார்கள் பெறும் தளத்தில் பயனர்களிடம் புகார்கள் பெறப்பட்டு தளத்தில் தவறான நடத்தையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில், வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்களையும் அதற்கேற்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விவரிக்கப்பட்டு வருகிறது. அதிக தீங்கிழைக்கும் கணக்குகள், தேவையற்ற செய்திகளை அனுப்புவதைத் தடுக்கவும் வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வழக்கத்திற்கு மாறான செய்திகள் கண்காணிப்பு

வழக்கத்திற்கு மாறான செய்திகள் கண்காணிப்பு

அதேபோல் வழக்கத்திற்கு மாறான செய்திகளை அனுப்பும் கணக்குகளை அடையாளம் காண வாட்ஸ்அப் அதன் தளத்தில் மேம்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புகார் பக்கத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தீங்கிழைக்கும் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற துஷ்பிரயோக செயல்களை தடுக்க இந்தியா உட்பட உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது.

தொடரும் தடை நடவடிக்கை

தொடரும் தடை நடவடிக்கை

ஜூலை மாதத்தில் உலகளவில் தடைசெய்யப்பட்ட அனைத்து கணக்குகளிலும் 25 சதவீத கணக்குகள் இந்தியாவில் இருப்பதாக வாட்ஸ் தெரிவித்துள்ளது. உலகளாவிய சராசரி தடை குறித்து பார்க்கையில், உலகளவில் சுமார் 8 மில்லியன் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதித்தது. இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இடையீட்டாளர்கள் என்ற நிலை சமூகவலைதளம் இழக்க நேரிடும். மேலும் அனைத்து குற்றச் செயல்களுக்கும் அந்தந்த நிறுவனங்களே பொறுப்பேற்கும் நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சர்ச்சை பதிவுகளை அகற்ற புதிய திருத்தம்

சர்ச்சை பதிவுகளை அகற்ற புதிய திருத்தம்

தனிநபர் கணக்குகள் தனிச்சையாக முடக்குதல், மத ரீதியான அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கை, பாலியல் புகார்கள் போன்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற அறிக்கையும் சமூகவலைதளங்கள் அளிக்க வேண்டும். புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியல் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Whatsapp Banned Over 2 Million Indian Accounts in October: Latest transparency Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X