Home
News

18 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடை: நடவடிக்கைகள் தொடரும்., காரணம் தெரியுமா?

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-க்கு இணங்க மார்ச் 1 முதல் மார்ச் 31-க்கான தேதியில் வாட்ஸ்அப்-ன் நடவடிக்கை குறித்து நிறுவனம் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் சுமார் 10 லட்சம் கணக்குகளை தடை செய்தது.

மாதாந்திர இணக்க அறிக்கை

மாதாந்திர இணக்க அறிக்கை

வாட்ஸ்அப் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் பல அம்சங்களையும் தரங்களையும் கொண்டிருக்கிறது. அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். இணைக்க அறிக்கையில் பல்வேறு வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

மார்ச் 2022-க்கான பத்தாவது மாதாந்திர அறிக்கை

மார்ச் 2022-க்கான பத்தாவது மாதாந்திர அறிக்கை

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-க்கு இணங்க மார்ச் 1 முதல் மார்ச் 31-க்கான தேதியில் வாட்ஸ்அப்-ன் நடவடிக்கை குறித்து நிறுவனம் மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையிலான மார்ச் 2022-க்கான பத்தாவது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கிறது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் சுமார் 10 லட்சம் கணக்குகளை தடை செய்தது.

18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளுக்கு தடை

18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளுக்கு தடை

பிரபல செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் மார்ச் மாதத்தில் இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை இந்த தகவலை தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் மார்ச் 31 வரை தேதியிட்ட மார்ச் 2022-க்கான பத்தாவது மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதம் நாட்டில் சுமார் 10 லட்சம் மோசமான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்தது. தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி, மார்ச் 2022-க்கான அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பயனர் பாதுகாப்பு அறிக்கையில், பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள், வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கை மற்றும் வாட்ஸ்அப் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை தொகுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் தளத்தின் முறைகேடுகளை எதிர்த்து போராடுவோம், சமீபத்திய மாதாந்திர அறிக்கைப்படி, வாட்ஸ்அப் மார்ச் மாதத்தில் மட்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை

தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை

இவை மோசமான கணக்குகள் என குறிப்பிடப்படுகிறது, போலியான தகவல்களை பரப்புதல், பயனர்களை ஏமாற்றுதல் உள்ள பல தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தளத்தில் தவறான தகவல் மற்றம் போலி செய்திகள் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்து வருகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் மட்டும் 18 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் சில வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு ஏமாற்று செயலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ் சமீபத்திய வாட்ஸ்அப் இந்தியா மாதாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அக்டோபர் மாதத்தில் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விவரத்து அறவித்துள்ளது. இதில் பயனர்களிடம் இருந்து மொத்தம் 500 புகார்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை தடை மேல்முறையீட்டு வகையை சேர்ந்தவை என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதன்மூலம் நடவடிக்கை எடுப்பது என்பது பயனர் புகாரின் விளைவாக ஒரு கணக்கை தடை செய்வதையோ அல்லது முன்பு தடை செய்யப்பட்ட கணக்கை மீட்டெடுப்பதையோ குறிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதி

பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதி

பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது. அது [email protected] என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Banned Over 2 Million Indian Accounts in March 2022: Latest transparency Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X