Home
News

16 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகள் தடை., ஓய்வில்லா நடவடிக்கை தொடரும்: வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக இருக்கிறது. இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நிறுவனம் பல அம்சங்களையும் தரங்களையும் கொண்டிருக்கிறது. அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். இணைக்க அறிக்கையில் பல்வேறு வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

6 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை

6 லட்சத்துக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் தடை

ஏப்ரல் மாத்ததில் மட்டும் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்திய பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயனர் புகார்களின் அடிப்படையில் 122 கணக்குகளை தடை செய்துள்ளதாகவும், செயலிக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க 16.66 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க நடவடிக்கை

தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க நடவடிக்கை

வாட்ஸ்அப் நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டைத் தடுக்க ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16 லட்சத்துக்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை தடை செய்திருக்கிறது. அரசு உத்தரவின் பேரில் வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் செயலியில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏப்ரல் 2022-க்கான அறிக்கையை வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கிறது. இதில், பயனர்கள் புகார்களின் அடிப்படையில் 122 கணக்குகளை தடை செய்ததாகவும், அதே சமயத்தில் பயன்பாட்டில் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை தடுக்க மொத்தமாக 16.66 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.

24 மணிநேரமும் நடவடிக்கை எடுக்கப்படும்: வாட்ஸ்அப்

24 மணிநேரமும் நடவடிக்கை எடுக்கப்படும்: வாட்ஸ்அப்

அந்த அறிக்கையில், தீங்கு ஏற்பட்ட பிறகு அதை கண்டறிவதை விட, தீங்கு விளைவிக்கும் செயலை முதலில் தடுப்பது மிகவும் சிறந்தது என தாங்கள் நம்புவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் கட்டமைப்பின்படி இது செயல்படுகிறது. அதாவது ஒரு பயனர் தங்கள் வாட்ஸ்அப் கணக்கை தவறாக பயன்படுத்துகிறார் என்பது இயந்திர கற்றல் அமைப்புளில் செயல்படுகிறது. "தவறான கணக்குகளை விரைவாக கண்டறிந்து அதை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள், 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்கள் என தவறான கணக்குகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான இயந்திர கற்றல் அமைப்புகள் தங்களிடம் உள்ளன" எனவும் வாட்ஸ்அப் தெரிவித்திருக்கிறது.

தவறான தகவல் மற்றம் போலி செய்திகள்

தவறான தகவல் மற்றம் போலி செய்திகள்

பயனர்களின் புகார்களை முறையாக கண்டறிந்து அது சரியாக இருக்கும்பட்சத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. தளத்தில் தவறான தகவல் மற்றம் போலி செய்திகள் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்காத கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்து வருகிறது. தடை செய்யப்பட்ட கணக்குகள் மோசமானது எனவும் போலியான தகவல்களை பரப்புதல், பயனர்களை ஏமாற்றுதல் உள்ளிட்ட பல தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயனர் பாதுகாப்பு அறிக்கையில், பயனர்களிடம் பெறப்பட்ட புகார்கள், வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கை மற்றும் வாட்ஸ்அப் சொந்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இந்த மாதாந்திர அறிக்கையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் தளத்தின் முறைகேடுகளை எதிர்த்து போராடுவோம் என வாட்ஸ்அப் அறிக்கையில் குறிப்பிட்டது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-க்கு இணங்க மார்ச் 1 முதல் மார்ச் 31 வரையிலான மார்ச் 2022-க்கான மாதாந்திர அறிக்கையில் இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. அதேபோல் பிப்ரவரி மாதம் வாட்ஸ்அப் சுமார் 10 லட்சம் கணக்குகளை தடை செய்தது.

பயனர்கள் குறைகளை நேரடியாக அறிவிக்கலாம்

பயனர்கள் குறைகளை நேரடியாக அறிவிக்கலாம்

பயனர்கள் குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் அனுமதிக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது. அது [email protected] என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Banned Over 16 Lakh Indian Accounts in April 2022: Latest transparency Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X