பாட்ஷாவாக மாறிய WhatsApp: 1 மாதத்தில் 23 லட்ச இந்திய கணக்குகள் க்ளோஸ்!

|

உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக வாட்ஸ்அப் இருக்கிறது. WhatsApp பயனர்களின் தேவையறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேநேரத்தில் யாரும் இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்து வருகிறது.

வாட்ஸ்அப் இணைக்க அறிக்கை

வாட்ஸ்அப் இணைக்க அறிக்கை

மத்திய அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் எடுக்கும் நடவடிக்கையை இணக்க அறிக்கையாக சமர்பித்து வருகிறது. இணைக்க அறிக்கையில் தவறான வாட்ஸ்அப் கணக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயனர்கள் அளிக்கும் புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு இணங்க அக்டோபர் 2022 க்கான அதன் மாதாந்திர அறிக்கையை WhatsApp வெளியிட்டுள்ளது. விதிகள் மீறல், பயனர்களிடம் பெற்ற புகார்கள் என்ற அடிப்படையில் வாட்ஸ்அப் இல் இருந்து சுமார் 23 லட்ச இந்தயர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகள் மற்றும் கொள்கைகளை மீறியதற்காக 8.1 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் மாதம் எடுத்த நடவடிக்கை

அக்டோபர் மாதம் எடுத்த நடவடிக்கை

தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் படி பயனர்களின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி, வாட்ஸ்அப் தினசரி நடவடிக்கை எடுத்து மாதாந்திர அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்திருக்கிறது.

23 லட்ச கணக்குகள் தடை

23 லட்ச கணக்குகள் தடை

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 2022 வரை பயனர்களிடம் இருந்து பெற்ற புகார்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில் 2,324,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட 23 லட்ச கணக்குகளில் பயனர் புகார்களை பெறுவதற்கு முன்பே 811,000 இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. தளத்தின் கொள்கைகள் மற்றும் விதிகளுக்கு இணங்காததால் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் கணக்கு ஏன் தடை?

வாட்ஸ்அப் கணக்கு ஏன் தடை?

ஸ்பேம் மெசேஜ்கள் குறித்து பல புகார்களை பெற்றால், ஒரு பயனர் விதித்த நிபந்தனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் வாட்ஸ்அப் பயனர்கள் கணக்குகளை தடை செய்கிறது. ஸ்பேம் அல்லது மோசடி பயனர்களைக் கண்டறிய, தானியங்கி முறைகளை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது.

WhatsApp கணக்குகள் குறித்து எவ்வாறு புகாரளிப்பது?

WhatsApp கணக்குகள் குறித்து எவ்வாறு புகாரளிப்பது?

"wa@support.whatsapp.com" என்ற மின்னஞ்சல் மூலம் தீங்கிழைக்கும் கணக்குகள் குறித்து அனைத்து பயனர்களும் புகார் அளிக்கலாம். உங்கள் கணக்கு தடை செய்யப்பட்டிருந்தால் இதே மெயில் ஐடி மூலம் சிக்கலை தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் போது காரணத்திற்கான சான்றாக ஸ்க்ரீன் ஷாட்டை பகிர வேண்டும். உங்கள் வாட்ஸ்அப் கணக்கை திறந்து வாட்ஸ்அப் சேட் என்ற பயன்பாட்டை ஓபன் செய்து Tap More options என்பதை கிளிக் செய்து More என்ற தேர்வை கிளிக் செய்யலாம். இதில் காட்டப்படும் பிளாக் என்ற விருப்பத்தை தேர்வு செய்து புகாருள்ள கணக்கை பிளாக் செய்யலாம்.

45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை

45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை

மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு என புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதில் பிரதான ஒன்று 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்ட தளங்கள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாகும். இதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மாதந்தோறும் அறிக்கையை சமர்பித்து வருகிறது.

வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடி

வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடி

இதையடுத்து பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் வழிவகை செய்திருக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிப்பதற்கு என வாட்ஸ்அப் மின்னஞ்சல் ஐடியை அறிவித்துள்ளது.அது grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் ஐடி ஆகும். இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்த கருவிகளை கொண்டு கண்காணித்து வருகிறது.

Best Mobiles in India

English summary
WhatsApp Banned 23 Lakh indian Accounts in October 2022: Stirct Action Taking Against Users Complaint

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X