2 மில்லியன் இந்தியர்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்., ஒரே மாதத்தில்- வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை!

|

சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருப்பது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் தளத்திற்கு மே 15 முதல் ஜூன் 15 வரை மட்டும் பணமோசடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கில் புகார்கள் வந்துள்ளன.

புகார்கள் உள்ளிட்டவைகளின் கீழ் நடவடிக்கை

புகார்கள் உள்ளிட்டவைகளின் கீழ் நடவடிக்கை

புகார்கள் உள்ளிட்டவைகளின் நடவடிக்கையாக இந்தியாவில் 20 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது. தம்மிடம் உள்ள தொழில்நுட்பம் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவிக்கிறது. மேலும் உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பயனர்களிடம் இருந்து 345 வினவல்களை பெற்றுள்ளதாகவும் 63 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

2 மில்லியன் பயனர்கள் கணக்குகள் தடை

2 மில்லியன் பயனர்கள் கணக்குகள் தடை

கடந்த மாதம் மட்டும் இந்தியாவில் 2 மில்லியன் பயனர்கள் கணக்குகள் தடை செய்யப்பட்டது என வாட்ஸ்அப் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு 2021 கீழ் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியான அறிக்கையின்படி, மே 15முதல் ஜூன் 15 வரைலியான புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறை தீர்க்கும் முறைகள்

குறை தீர்க்கும் முறைகள்

2 மில்லியன் கணக்குகளில் 95%-க்கும் அதிகமானவை தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. குறை தீர்க்கும் முறைகளை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பயனர்களிடம் இருந்து 345 வினவல்களை பெற்றதாகவும் 63 கணக்குகள் மீது அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. நிவாரண வழிமுறைகளை பயன்படுத்தி ஏணைய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக வைத்திருக்கும் தொழில்நுட்பங்களுக்கு முதலீடு

பாதுகாப்பாக வைத்திருக்கும் தொழில்நுட்பங்களுக்கு முதலீடு

தங்கள் பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் தொழில்நுட்ப செயல்முறைக்கு தொடர்ந்து முதலீடு செய்வோம் எனவும் கணக்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் தேவையற்ற தகவல்களை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்குவிளைவிக்கும் நடத்தைகளை தடுக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதாக நிறுவனம் தெரிவிக்கிறது.

தகவல் தொழில்நுட்ப விதிகள்

தகவல் தொழில்நுட்ப விதிகள்

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு வாட்ஸ்அப் இணங்குவதாக அறிக்கையில் தெரிவித்த போதும். நிறுவனம் கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த விதிமுறைகளை தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் ஒன்று உள்ளூரில் குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்க வேண்டும் என்பதாகும்.

குறைகளை கேட்டறியும் அதிகாரி

குறைகளை கேட்டறியும் அதிகாரி

சமூகவலைதளம் பயனர்கள் குறைகளை கேட்டறியும் அதிகாரி, தலைமை இணக்க அதிகாரி, நோடர் தொடர்பு நபர் ஆகியவர்களை நியமிக்க வேண்டும். சமூகவலைதளங்களில் பல குற்றச் செயல்கள் நடக்கிறது, எனவே பயனர்கள் குற்றங்களை கேட்கும் நேரடி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

புதிய சமூக ஊடக விதிகள் மூலம், இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசின் பாதுகாப்பு விவகாரம், பாலியன் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற சமூகவலைதள புதிய திருத்தம் வழிவகுக்கும். மேலும் இந்த விவகாரத்தை தீர்க்க நாட்டில் ஒரு அதிகாரி நியமித்து புகார்களை கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் ஆகியவற்றை 24 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும் எனவும் மத்திய அரசு புதிய தொழில்நுட்ப சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Whatsapp Banned 2 Million Indian Accounts in One Month For Keep Users Safe

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X