Whatsapp எடுக்கும் புது அவதாரம்: ரெடியா இருங்க, உங்களுக்கு பெரிய பங்கு இருக்கு!

|

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தேவை அறிந்து தொடர்ந்து பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. கொஞ்சம் கேப் விடுங்கள் என்று பயனர்களே கேட்கும் அளவிற்கு புதுப்புது அம்சங்கள் தொடர்ந்து அறிமுகமாகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப் தற்போது புது அம்சம் ஒன்றில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புது அம்சமானது வாட்ஸ்அப் பயன்பாட்டில் பயனர்கள் தங்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையில் இருக்கிறது. அது பிற குறிப்பிட்ட சமூகவலைதள பயன்பாடுகளில் இருக்கும் அவதார் அம்சமாகும்.

Facebook இல் இருப்பது போன்றே ஒரு அம்சம்

Facebook இல் இருப்பது போன்றே ஒரு அம்சம்

Facebook இல் இருப்பது போன்றே அவரதார் பயன்பாடு whatsapp தளத்திலும் வர இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. இந்த அம்சம் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த அவதார் அம்சத்தை எதற்கு பயன்படுத்தலாம், எப்படி இருக்கும் என்ற விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

வீடியோ கால் அழைப்புகளில் முகத்தை மறைக்கலாம்

வீடியோ கால் அழைப்புகளில் முகத்தை மறைக்கலாம்

வாட்ஸ்அப் நிறுவனம் அவதார் பயன்பாடுகளில் செயல்பட்டு வருவதை WABetaInfo கண்டறிந்திருக்கிறது. வீடியோ கால் அழைப்புகளை மேற்கொள்ளும் போது நீங்கள் இந்த அவதாரை முகமூடியாக பயன்படுத்தலாம்.

உங்கள் முகத்தை பிறருக்கு காட்ட விரும்பாத பட்சத்தில் இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கும். Facebook Messenger தளத்தில் இந்த அவதார் அம்சம் கடந்த சில ஆண்டுகளாக செயல்பாட்டில் இருக்கிறது. அதுமட்டுமில்லை, நீங்கள் உருவாக்கும் அவதாரை செயலியில் ஸ்டிக்கராகவும் பயன்படுத்த முடியும்.

பேஸ்புக்கை இன்ஸ்பிரேஷனாக வைத்து செயல்பட இருக்கும் அம்சம்

பேஸ்புக்கை இன்ஸ்பிரேஷனாக வைத்து செயல்பட இருக்கும் அம்சம்

வாட்ஸ்அப்பில் கிடைக்கும் அவதார் ஆனது பேஸ்புக்கை இன்ஸ்பிரேஷனாக வைத்து செயல்பட இருக்கிறது எனவும் இது பேஸ்புக்கில் இருப்பது போன்றே இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

வாட்ஸ்அப் பயன்பாட்டில் சேட்டிங் செய்யும் போது உங்கள் அவதாரை தனிப்பயனாக்கி ஸ்டிக்கராகவும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்த அம்சம் உருவாக்கத்தில் இருக்கும் காரணத்தால் எப்போது பயனர்களுக்கு கிடைக்கும் என்ற தகவல் எதுவும் இல்லை. இருப்பினும் இது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் மட்டும் தான் பாக்கி

வாட்ஸ்அப் மட்டும் தான் பாக்கி

மெட்டா நிறுவனம் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் அவதார்களை முன்னதாகவே அறிமுகப்படுத்தி இருக்கிறது. வாட்ஸ்அப் மட்டும் தான் பாக்கி என்று இருந்த நிலையில் விரைவில் இந்த பயன்பாட்டிலும் வெளியாக இருக்கிறது.

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது கார்டூன் வடிவங்களை உருவாக்கிக் கொள்ளலாம். இதை சேட்டிங் செய்யும் போது ஸ்டிக்கராகவும் பயன்படுத்தி பகிரலாம்.

வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்ஸ் ஆக வைக்கலாம்

வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்ஸ் ஆக வைக்கலாம்

வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு புது அம்சத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-க்கானது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இதுநாள் வரை வாட்ஸ்அப் தளத்தில் வீடியோ, புகைப்படங்கள் மற்றும் ஏதாவது கருத்துகளை டைப் செய்து மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.

இந்த நிலையில் விரைவில் வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்ஸ் ஆக வைக்க அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அனைத்து இமோஜிகளையும் பயன்படுத்தலாம்

அனைத்து இமோஜிகளையும் பயன்படுத்தலாம்

வாட்ஸ்அப் செயலியில் சோதனையில் இருந்த மற்றொரு அம்சம் தற்போது செயல்பாட்டில் வந்திருக்கிறது. மெசேஜ்களை குறிப்பிட்டு 6 இமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து இமோஜிகளையும் ரிப்ளையாக அனுப்பலாம்.

மெசேஜ்களை அழுத்தினால் இந்த இமோஜி ஆப்ஷன்கள் காட்டப்படும் அதில் ஏதேனும் ஒரு இமோஜியை கிளிக் செய்து ரிப்ளையாக அனுப்பலாம். இந்த ரிப்ளை அந்த மெசேஜின் கீழ் பகுதியில் ஓரமாக காட்டப்படும்.

எத்தனை இமோஜி ரிப்ளை அந்த மெசேஜுக்கு கிடைத்தாலும் எண்ணிக்கையுடன் அதன் கீழ் காண்பிக்கப்படும்.

Delete For Everyone கால வரம்பு நீட்டிப்பு

Delete For Everyone கால வரம்பு நீட்டிப்பு

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் 2018 இல் அனைவருக்கும் நீக்கு (Delete For Everyone) என்ற அம்சத்தை அறிமுகம் செய்தது. ஆரம்பத்தில் இந்த சேவை அறிமுகம் செய்த போது இதன் வரம்பு 7 நிமிடங்களாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து Delete For Everyone வரம்பு 1 மணிநேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டது. இதையடுத்து வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜை 1 மணிநேரம் 8 நிமிடங்கள் மற்றும் 16 வினாடிகளுக்குள் தற்போதுவரை டெலிட் செய்யலாம்.

2 நாட்களுக்கு பிறகும் டெலிட் செய்யலாம்

2 நாட்களுக்கு பிறகும் டெலிட் செய்யலாம்

இந்த நிலையில் வாட்ஸ்அப் இதற்கான கூடுதல் அவகாசத்தை வழங்கும் சோதனையில் ஈடுபட்டிருக்கிறது. இது தற்போது பீட்டா பதிப்பில் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த அம்சம் வெளியாகும் பட்சத்தில் பயனர்கள், தாங்கள் அனுப்பும் மெசேஜை 2 நாட்கள் 12 மணிநேரத்துக்கு பிறகும் டெலிட் செய்யலாம்.

குரூப் அட்மின்களுக்கு முழு அதிகாரம்

குரூப் அட்மின்களுக்கு முழு அதிகாரம்

இதுமட்டுமில்லை குரூப் அட்மின்களுக்கு முழு அதிகாரத்தையும் வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது. குரூப்பில் யார் அனுப்பிய மெசேஜை வேண்டுமானாலும் குரூப் அட்மின் டெலிட் செய்யும்படியான அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டுவர இருக்கிறது.

இந்த அம்சம் தற்போது WABetaInfo பதிப்பில் சோதனையில் இருக்கிறது. உதாரணமாக குரூப் உறுப்பினரை கலங்கடிக்கும் வகையில் யாராவது ஒருவர் குரூப்பில் மெசேஜ் அனுப்பினால் அதை அட்மின் டெலிட் செய்யலாம்.

லாஸ்ட் சீன் அம்சத்தில் வரும் புது அம்சம்

லாஸ்ட் சீன் அம்சத்தில் வரும் புது அம்சம்

அதேபோல் வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் என்பது நாம் எப்போது கடைசியாக வாட்ஸ்அப் பயன்பாட்டை அனுகினோம் என்பதை பிறருக்கு காண்பிக்க பயன்படும் அம்சமாகும்.

இந்த அம்சம் இதுநாள் வரை அனைவருக்கும் காண்பிக்கும்படியாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் தேவையில்லாத பயனர்களிடம் இருந்து லாஸ்ட் சீன் அம்சத்தை மறைக்கும் படியாகவும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp Avatars Might be Launching Soon Get Ready to Make your Avatar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X