Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: இனி ஒரு வாரத்தில் மெசேஜ் தானாகவே அழிந்துவிடும்!
வாட்ஸ் அப் தொடர்ந்து புதிய வசதிகளை தங்களது பயனர்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மெசேஜ்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக மறைந்துவிடும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பிரதானமாக இருக்கும் வாட்ஸஅப்
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதானமாக இருக்கும் வாட்ஸஅப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அதன்படி தற்போது வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட மெசேஜ் தானாகவே 7 நாட்களில் மறைந்துவிடும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் Disappearing messages
வாட்ஸ்அப் மெசேஜ்கள் தாமாக மறைந்தவிடும் அம்சத்தை வெளியிடுவது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த அம்சம் கடந்தாண்டு முதல் சோதனையில் இருந்தது. வாட்ஸ்அப் Disappearing messages என்றழைக்கப்படும் இந்தம்சம் பெயர் குறிப்பிடுவது போல் நிர்ணயிக்கப்பட்டுள்ள கால வரம்பை அடைந்தவுடன் தானாகவே நீங்கிவிடும்.

மறைந்து போகும் அம்சத்திற்கான கால அவகாசம்
மெசேஜ்கள் மறைந்து போகும் அம்சத்திற்கான கால அவகாசம் ஏழு நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 7 நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப் மெசேஜ் தாமாகவே மறைந்துவிடும். வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சேட்டிங் அல்லது குரூப்பில் இதை பயன்படுத்தலாம்.

இயக்கவும் முடக்கவும் விருப்பம்
வாடஸ்அப்பில் இந்த அம்சம் ஆன் செய்வதற்கு முன்பு பெறப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. வாட்ஸ்அப் சேட்டிங்கில் Disappearing Message அம்சத்தை இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும். பயனர்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.

குரூப் அட்மின் மட்டும் செயல்படுத்தலாம்
வாட்ஸ்அப் பயனர் தனிப்பட்ட சேட்டிங்கிற்கு இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். குரூப் சேட்டிங்களுக்கு பயன்படுத்தும்போது இந்த அம்சத்தை குரூப் அட்மின் மட்டும் செயல்படுத்த முடியும். 7 நாட்கள் ஒருவர் குரூப் சேட்டிங் அல்லது தனிநபர் சேட்டிங்கை திறக்காமல் இருக்கும்போது மெசேஜ்கள் மறைந்தவிடும். இருப்பினும் வாட்ஸ்அப் பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கும்பட்சத்தில் மெசேஜ்கள் நோட்டிபிகேஷனில் காண்பிக்கப்படும்.

ஃபார்வேர்ட் செய்யப்பட்ட மெசேஜ்
கவனித்தக்க ஒன்று என்னவென்றால் 7 நாட்களில் மறைய வேண்டிய செய்தியை மற்றொருவருக்கு பார்வேர்ட் செய்திருந்தால் அங்கு மறையும் அம்சம் ஆஃப் செய்திருக்கும் பட்சத்தில் ஃபார்வேர்ட் செய்யப்பட்ட செய்தி மறையாது.

ஆட்டோமேட்டிக் டவுன்லோட்
வாட்ஸ்அப் Disappearing Messages அம்சம் செயல்படுத்தி மெசேஜ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ்கள் மறைந்தாலும் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் ஆனில் இருக்கும்பட்சத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள், வாய்ஸ் மெசேஜ்கள் மொபைல் மெமரியில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதத்திற்குள் அனைத்து பயனர்களுக்கும்
வாட்ஸ்அப்பின் மறைந்துபோகும் செய்திகள் அம்சம் இந்த மாதத்திற்குள் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேமிப்பக மேலாண்மை அம்சத்தை அறிமுகம் செய்த சிறிது நேரத்திலேயே இந்த அம்சத்தை கொண்டு வந்தது.
source: hindustantimes.com


Click it and Unblock the Notifications