புது ரூல்ஸ்.. ஜனவரி முதல் நடைமுறை.. WhatsApp, Amazon prime, UPI மற்றும் TRAI விதிகளில் மாற்றம்.. நீங்க ரெடியா?
ஒரே நாளில் இத்தனை புதிய மாற்றங்களா? என்று வியப்படையும் வகையில் புதிய-புதிய ரூல்ஸ்கள் (New rules 2025) இந்த 2025 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மொபைல் போன் (Mobile phone rules) பயனர்களுக்கு TRAI-ன் புதிய விதி, RBI ரூல்ஸ், வாட்ஸ்அப் புது விதி (WhatsApp new rules), UPI 123Pay லிமிட் ரூல்ஸ், அமேசான் பிரைம் வீடியோஸ் (Amazon Prime Videos Subscription Changes) சந்தா விதி மாற்றங்கள் என்று பல புதிய விதிகள் மற்றும் மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. இவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ஜனவரி 1, 2025 ஆம் தேதி என்னென்ன புதிய மாற்றங்களை பொதுமக்கள் அவர்களின் தினசரி வாழ்க்கையில் சந்திக்க வேண்டியதுள்ளது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

1. TRAI வெளியிட்டுள்ள புதிய SIM கார்டு விதி (TRAI safeguard rules for SIM card misuse):
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கோடிக்கணக்கான மொபைல் பயனர்களைப் (to safe guard mobile users) பாதுகாக்க, சிம் கார்டு (SIM card) தவறான பயன்பாட்டுடன் தொடர்புடைய சைபர் குற்றங்களைத் (cyber crime) தடுக்க DoT நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாக, மற்றவர்களின் பெயர்களில் சிம்களைப் பெறுதல் மற்றும் பல மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் குறிவைத்து, ஒரு விரிவான பிளாக்லிஸ்ட் (blacklist) தயாரிக்கப்படுகிறது. இனி புதிய சிம் கார்டு வாங்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
2. WhatsApp வெளியிட்ட புதிய விதி (WhatsApp support ends for these mobiles):
ஜான்.1, 2025 முதல், கூகுளின் பத்தாண்டு பழமையான இயங்குதளமான ஆண்ட்ராய்டு கிட்கேட் (Android Kitkat) தளத்தில் இயங்கும் சாதனங்களில் இனி வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்த கிடைக்காது. பாதுகாப்பு நலன் கருதி, இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஆண்ட்ராய்டு கிட்கேட்டைப் பயன்படுத்தும் சாம்சங் (Samsung), மோட்டோரோலா (Motorola), எச்டிசி (HTC), எல்ஜி (LG) மற்றும் சோனி (SONY) போன்ற பிரபலமான பிராண்டட் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது. வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த இவர்கள் புதிய போனை வாங்க வேண்டும்.
3. அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தா நன்மையில் புதிய மாற்றம் (Amazon Prime video device limit changed):
அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Videos) ஒரே நேரத்தில் பல சாதனங்களை பயன்படுத்தும் சேவைக்கு முடக்கு போட்டுள்ளது. அதாவது ஸ்கிரீனிங் டிவைஸ்களின் எண்ணிக்கைக்கு (streaming device count limit reduced) புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல், பயனர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரண்டு ஸ்மார்ட் டிவிகளில் (Smart TV) அமேசான் பிரைம் வீடியோஸ் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம். இரண்டுக்கும் மேற்பட்ட டிவிகளில் பிரைம் வீடியோவை அணுக, பயனர்களுக்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மொபைல் சாதனங்களுக்கு இந்த வரம்பு பொருந்துமா என்பதை நிறுவனம் இன்னும் தெளிவாக வெளியிடவில்லை. இன்னும் சில கேள்விகளுக்கு அமேசான் பதிலளிக்கவில்லை. அடுத்தபடியாக இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) வெளியிட்ட முக்கியமான புதிய விதியை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
4. யுபிஐ 123 பே லிமிட் ரூல்ஸ் (UPI 123Pay limit rules):
RBI ஆனது UPI 123Pay சேவைக்கான பரிவர்த்தனை வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளது. இது ஃபீச்சர் ஃபோன் (feature phone) பயனர்களுக்கான வரம்பை (transaction limit) ரூ.5,000 என்ற தொகையில் இருந்து, தற்போது ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளது. ஸ்மார்ட்போன் (Smartphone users transaction limit) பயனர்களுக்கு, தினசரி பரிவர்த்தனை வரம்பு ரூ. 1 லட்சமாக இருக்கும், அதே நேரத்தில் மருத்துவமனை கட்டணம் போன்ற அத்தியாவசிய சேவைகள் ரூ.5 லட்சம் வரை நீட்டிக்கப்பட்ட வரம்பை இனி மக்கள் அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








