வாட்ஸ்அப்-ல் ஒரே ஒரு மெசேஜ் போதும்: பான் கார்ட், ஓட்டுனர் உரிமம் அனைத்தும் உங்கள் கையில்: அரசு அறிவிப்பு!

|

வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் அரசாங்க சேவையை எளிமையாக கையாளுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. MyGov புதிய டிஜிலாக்கர் சேவைகளை வழங்க வாட்ஸ்அப் உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. வாட்ஸ்அப் தற்போது பயனர்களை பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்ற பலவற்றை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. டிஜிலாக்கர் சேவைகள் +91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கிடைக்கும்.

புதிய டிஜிலாக்கர் சேவைகள்

புதிய டிஜிலாக்கர் சேவைகள்

பிரபலமான உடனடி செய்தியிடல் தளத்தில் புதிய டிஜிலாக்கர் சேவைகளை வழங்க MyGov WhatsApp உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது. இந்த சேவைகளில் டிஜிலாக்கர் கணக்கை உருவாக்குதல், அங்கீகாரம் வழங்குதல், பான் கார்ட், ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் போன்று ஆவணங்களை பதிவிறக்கம் உள்ளிட்டவைகள் அடங்கும்.

டிஜிட்டல் இந்தியா கொள்கை

டிஜிட்டல் இந்தியா கொள்கை

மத்திய அரசு அறிவித்த பல்வேறு கொள்கைகளில் பிரதான ஒன்று டிஜிட்டல் இந்தியா கொள்கை ஆகும். இந்தியா டிஜிட்டல் இந்தியா கொள்கையில் பல்வேறு கட்டங்கள் முன்னோக்கி வருகின்றன. அதன்படி தற்போது மத்திய அரசு, பொதுமக்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க டிஜி லாக்கர் என்ற பயன்பாட்டை அறிமுகம் செய்தது. இந்த பயன்பாட்டை வாட்ஸ்அப் மூலம் அணுகும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் "வாழ்க்கை வசதியை" மேம்படுத்துவதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு சேவைகளை விரல் நுனியில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது இதை அரசு தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆவண பதிவிறக்க விளக்கங்கள்

MyGov ஹெல்ப் டெஸ்க்கைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் பயனர்கள் எந்தெந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம். பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ், வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC), இருசக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் காப்பீட்டுக் கொள்கை ஆவணம் உள்ளிட்டவைகளைப் பெற முடியும்.

வாட்ஸ்அப் மூலம் ஆவணம் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

வாட்ஸ்அப் மூலம் ஆவணம் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்

வாட்ஸ்அப் பயன்படுத்த ஆவணங்கள் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். பயனர்கள் +91 9013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு "நமஸ்தே அல்லது ஹாய் அல்லது டிஜிலாக்கர்" (Namaste or Hi or Digilocker) என்று அனுப்ப வேண்டும்.

ஸ்டெப் 1: உங்கள் தொடர்பில் +919013151515 என்ற எண்ணைச் சேமிக்கவும்.

ஸ்டெப் 2: பின் வாட்ஸ்அப் கணக்கை திறக்க வேண்டும்.

ஸ்டெப் 3: +919013151515 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Namaste or Hi or Digilocker என அனுப்பவும்

ஸ்டெப் 4: Digilocker Helpdesk வழங்கும் சேவைகளின் பட்டியலை அனுப்பும்.

ஸ்டெப் 5: நீங்கள் பெற விரும்பும் சேவையின் எண்ணை உள்ளிட வேண்டும்.

பிரதானமான வழிமுறைகளில் ஒன்று

பிரதானமான வழிமுறைகளில் ஒன்று

செயல்முறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதும் டிஜிலாக்கர் ஹெல்ப் டெஸ்க் வாட்ஸ்அப் அனைத்து ஆவணங்களையும் பகிரும். ஆனால் இந்த அனைத்து வழிமுறைகளுக்கும் முன்னதாக கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் டிஜிலாக்கர் செயலியில் ஆவணங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும், அவர்களே இந்த சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

MyGov ஹெல்ப் டெஸ்க் பயன்பாடு வாட்ஸ்அப்பில்...

MyGov ஹெல்ப் டெஸ்க் பயன்பாடு வாட்ஸ்அப்பில்...

வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் முதன்முதலில் மார்ச் 2020-ல் கோவிட்19 தொற்று பரவலின் போது தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையானது தடுப்பூசி சந்திப்பு முன்பதிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கங்கள் குறித்த விவரங்களுடன் கோவிட் தொடர்பான தகவல்களின் உண்மை ஆதாரங்களை பயனர்களுக்கு வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிஜிலாக்கர் உதவி மையத்தை அணுகியுள்ளனர், 33 மில்லியனுக்கும் அதிமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மில்லியன் கணக்கான தடுப்பூசி சந்திப்புகள் இதன்மூலம் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

தடுப்பூசி சந்திப்பு முன்பதிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம்

தடுப்பூசி சந்திப்பு முன்பதிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம்

வாட்ஸ்அப்பில் MyGov ஹெல்ப் டெஸ்க் முதன்முதலில் மார்ச் 2020-ல் கோவிட்19 தொற்று பரவலின் போது தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையானது தடுப்பூசி சந்திப்பு முன்பதிவுகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கங்கள் குறித்த விவரங்களுடன் கோவிட் தொடர்பான தகவல்களின் உண்மை ஆதாரங்களை பயனர்களுக்கு வழங்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டிஜிலாக்கர் உதவி மையத்தை அணுகியுள்ளனர், 33 மில்லியனுக்கும் அதிமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மில்லியன் கணக்கான தடுப்பூசி சந்திப்புகள் இதன்மூலம் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல்

அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல்

MyGov Helpdesk மூலம் டிஜிலாக்கர் சேவைகளை வழங்குவது என்பது டிஜிட்டல் முன்னேற்றமாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் மூலம் எளிதான வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை உருவாக்குவதே இதன் நோக்கமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முன்னதாகவே டிஜிலாக்கரில் பதிவு செய்திருக்கின்றனர் மற்றும் 5 பில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் பெறப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப் சேவையானது மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது தொலைபேசி மூலமாகவே அசல் ஆவணங்கள் மற்றும் தகவல்களை அணுக உதவுவதன் மூலம் டிஜிட்டல் முறையில் ஆதாரமளிக்கும் என நாங்கள் நம்புகிறோம் என MyGov CEO, அபிஷேக் சிங் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய முயற்சி குறித்து கருத்து

புதிய முயற்சி குறித்து கருத்து

இந்த புதிய முயற்சி குறித்து கருத்து தெரிவித்த வாட்ஸ்அப் பொது கொள்கை இயக்குனர் ஷிவ்நாத் துக்ரால் கூறியதாக வெளியான தகவல் குறித்து பார்க்கையில், "MyGov Helpdesk-ஐ Digilocker சேவைகள் மூலம் நேரடியாக வாட்ஸ்அப்பில் அணுகலாம். அத்தியாவசிய சேவைகளின் நன்மைகளை நேரடியாக பொதுமக்களுக்கு நீட்டிக்க தொழில்நுட்பத்தின் திறனை நாங்கள் திறக்க விரும்புகிறோம். இது டிஜிட்டல் இந்தியா தொலைநோக்கு மற்றும் டிஜிட்டல் அதிகாரம் பெற்ற நாடு ஆகியவற்றை அளவிடுவதற்கு முக்கிய படியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Whatsapp allows to download Pancard, driving license on mygov helpdesk through Digilocker access

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X