Home
News

மிரட்டிவிட்ட வாட்ஸ்அப்.. புது AI ஸ்டிக்கர்ஸ் அம்சம்.. ஏஐ ஸ்டிக்கர் உருவாக்குவது எப்படி? ஈஸி டிப்ஸ்!

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இப்போது வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு ஏஐ திறன் கொண்ட ஸ்டிக்கர் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இது இப்போது சிலருக்கு பயன்படுத்த கிடைக்கிறது.

இந்த புதிய வாட்ஸ்அப் ஏஐ ஸ்டிக்கர் அம்சத்தை எப்படி பயன்படுத்துவது? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பது போன்ற தகவலை விரிவாக பார்க்கலாம். வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து, அதன் தளத்தை அப்டேட் செய்து வருகிறது. அந்த வரிசையில், நிறுவனம் அடுத்ததாக ஏஐ திறன் கொண்ட ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

மிரட்டிவிட்ட வாட்ஸ்அப்.. புது AI ஸ்டிக்கர்ஸ் அம்சம்..

வாட்ஸ்அப் தளத்தில் புது ஏஐ அம்சமா? இது என்ன செய்யும்?

அதன் ஒவ்வொரு புதிய அப்டேட்களுக்கும் முன்பாக நிறுவனம் புதிய அம்சங்களை சோதனை செய்து பார்க்கிறது. இவற்றை பீட்டா வெர்ஷனில் வைத்து வாட்ஸ்அப் நிறுவனம் சோதனை செய்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இப்போது, மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் தளம் AI தயாரிப்புகள் மற்றும் மேம்பாடுகளை பெறுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த புதிய AI திறன்கள் WhatsApp பயனர்களுக்கான தகவல்தொடர்புகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன.

புது வாட்ஸ்அப் AI ஸ்டிக்கர்ஸ் ஜெனெரேட்டர் (WhatsApp AI Stickers):

இந்த அறிமுகப்படுத்தப்பட்ட புது ஏஐ அம்சத்தில், AI ஸ்டிக்கர்ஸ் ஜெனெரேட்டர் (AI stickers generator) அம்சமும் உள்ளது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு AI ஸ்டிக்கர்களை உருவாக்கும் திறனை இந்த புதிய அம்சம் வழங்குகிறது. இது பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த AI ஸ்டிக்கர்கள் மெட்டாவின் சேவையால் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படுகின்றன.

இது பயனர்களின் டெக்ஸ்ட் உள்ளீட்டின் அடிப்படையில் ஸ்டிக்கர்களை வடிவமைக்கின்றன. இந்த AI ஸ்டிக்கர்ஸ் அம்சம் இப்போதைக்கு ஆங்கில மொழியை மட்டுமே ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. AI ஸ்டிக்கர்களை உருவாக்க, பயனர்கள் ஆங்கிலத்தில் விளக்கங்களை வழங்க வேண்டும். உதாரணமாக, 'Create rose with puppy' என்று டைப் செய்தால், ஒரு நாய்க்குட்டி உடன் ரோஜா பூக்கள் இருப்பது போன்ற ஸ்டிக்கரை இது உருவாகும்.

மிரட்டிவிட்ட வாட்ஸ்அப்.. புது AI ஸ்டிக்கர்ஸ் அம்சம்..

WhatsApp-ல் AI ஸ்டிக்கர்ஸ் உருவாக்குவது எப்படி?

AI ஸ்டிக்கர்களை உருவாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றவும். உங்கள் மொபைல் சாதனத்தில் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். சாட்டை திறந்து, பின்னர் ஸ்மைலி ஐகானை கிளிக் செய்யவும். பிறகு ஸ்டிக்கர் ஐகானைத் தட்டவும். அடுத்து, "கிரியேட் (create)" என்பதைத் தேர்ந்தெடுத்து, கன்டினியூ (Continue) என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர், நீங்கள் உருவாக்க விரும்பும் ஸ்டிக்கர்களுக்கான விளக்கத்தை உள்ளிடவும்.

வாட்ஸ்அப் உங்கள் உள்ளீட்டிற்கு தகுந்தாற்போல் 4 ஸ்டிக்கர்களை உருவாக்கும். உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து சென்ட் (Send) என்பதை கிளிக் செய்தால், ஏஐ-யால் உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர் சாட்டில் அனுப்பப்படும். இந்த புதிய அம்சம் புதிய வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் இல் கிடைக்கிறது. இது சோதனை கட்டத்தில் இருப்பதனால், குறுகிய எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே இப்போதைக்கு அணுக கிடைக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் இன்னும் பல புதிய அம்சங்களில் வேலை பார்த்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இது தவிர, நிறுவனம் புதிய குரூப் சாட் அம்சத்தில் வேலை செய்வதை வெளிப்படுத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இந்த அம்சம் தற்போது அணுகக்கூடியதாக இருப்பதால், உங்கள் பகுதியில், இந்த புதிய அம்சம் கிடைக்கிறதா என்று உங்கள் வாட்ஸ்அப் பயன்பாட்டை அப்டேட் செய்து பார்க்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp AI Stickers Generator Feature Is Now On Testing Under New Beta Version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X