அதிரடி காட்டும் வாட்ஸ்அப்: அடுத்தடுத்த புது அப்டேட்- இனி எளிதாக ஷாப்பிங் செய்யலாம்!
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதானமாக இருப்பது வாட்ஸ்அப். வாடஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எளிதாக ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.

பல்வேறு புதிய அம்சங்கள்
வாட்ஸ்அப் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. தற்போது புதிதாக இந்த பட்டியலில் வணிக கணக்குகளுக்கான ஷாப்பிங் பட்டன் இணைந்துள்ளது. இதன்மூலம் வணிக தயாரிப்பு பட்டியலை திறக்கலாம்.

புதிய அப்டேட் அறிமுகம்
வாட்ஸ்அப் தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அம்சம் 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே பீட்டா பயன்பாட்டின் இன் ஏபிகே டியர்டவுன் மூலம் தெரிவிக்கப்பட்டது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் எளிதாக ஷாப்பிங் செய்யலாம்.

வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு
அதேபோல் இந்த அப்டேட்டை பயன்படுத்தி ஆன்லைன் விற்பனை மூலமாகவும் தங்களது பிசினஸ் கணக்குகளை தொடங்கலாம். தங்களது வணிகத்தில் சில தயாரிப்புகள் இருந்தால் அதை வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு மூலம் கேட்டலாக் பிரிவில் பட்டியலிடலாம்.

ஷாப்பிங் பட்டன் வசதி
அதோடு இந்த அப்டேட்டில் ஷாப்பிங் பட்டன் வசதி அறிமுகமாகியிருக்கிறது. இதில் சேட்டிங் திரையில் வாய்ஸ் கால் தேர்வுக்கு அருகில் புதிய அப்டேட் தேர்வுக்கான பட்டன் காண்பிக்கப்படும். அந்த பட்டனை அழுத்தினால் போதும் விற்கப்படும் பொருட்கள், விலை ஆகியவைகளை அறிந்துக் கொள்ளலாம்.

வாட்ஸ்அப் வணிக கணக்கு
மேலும் பிற நபர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடும் போது இந்த பட்டன் காண்பிக்கப்படாது. எதிர்காலத்தில் வாட்ஸ்அப் ஷாப்பிங்கில் கார்ட் வசதி இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. தினசரி 175 மில்லியனுக்கு அதிகமானோர் வாட்ஸ்அப் வணிக கணக்குகளுக்கு செய்திகள் அனுப்புகின்றனர் என தகவல்கள் கூறப்படுகிறது. இந்த அப்டேட் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு தற்போதுமுதலே கிடைப்பதாக கூறப்படுகிறது.

யுபிஐ கட்டண சேவை
சமீபத்தில் வாட்ஸ்அப் மூலமாக பணம் அனுப்பும் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி முதல் யுபிஐ கட்டண சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப் இந்த சேவையை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உடன் இணைந்து தயாரித்துள்ளது. இதன்மூலம் இனி பயனர்கள் எளிதாக பணம் அனுப்பலாம்.

7 நாட்களில் மெசேஜ்கள் மறைந்துவிடும் அம்சம்
அதேபோல் வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட மெசேஜ் தானாகவே 7 நாட்களில் மறைந்துவிடும் அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த அம்சம் கடந்தாண்டு முதல் சோதனையில் இருந்தது. வாட்ஸ்அப் Disappearing messages என்றழைக்கப்படும் இந்த அம்சத்தில் மெசேஜ்கள் 7 நாட்களுக்கு பிறகு தாமாகவே மறைந்துவிடும். வாட்ஸ்அப் சேட்டிங்கில் Disappearing Message அம்சத்தை இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும். பயனர்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications