Home
News

WhatsApp இருக்கா.. இனி 24 மணி நேரம் இல்ல.. 1 மணி நேரம்.. உங்க மெசேஜ்களுக்கு வருது புது அப்டேட்.. என்ன மாறுது?

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது அதனுடைய டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள் (Disappearing Messages) பீச்சரில் புதிய அப்டேட்டை விரைவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இப்போது, இந்த பீச்சரில் 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆகிய கால அளவுகள் மட்டுமே கிடைக்கின்றன.

ஆனால், வரவிருக்கும் புதிய அப்டேட்டின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது மெசேஜ்களை 1 மணிநேரம் அல்லது 12 மணிநேரத்தில் தானாகவே மறைந்து போகும்படி கால அளவை நிர்ணயிக்க முடியும். இந்த புதிய அப்டேட் யாருக்கு கிடைக்கிறது, அதேபோல யாருக்கெல்லாம் இந்த அப்டேட் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp இருக்கா.. இனி 24 மணி நேரம் இல்ல.. 1 மணி நேரம்.. உங்க மெசேஜ்?

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான யூசர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனமானது, தொடர்ந்து புதுப்புது பீச்சர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், இப்போது யூசர்களின் பிரைவசியை பாதுகாக்கும் நோக்கில், ஏற்கனவே, அறிமுகப்படுத்தப்பட்ட டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள் பீச்சரில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டுவர இருக்கிறது.

டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள் பீச்சரானது, எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால், வாட்ஸ்அப் மூலம், சாட் செய்யும் போது அந்த மெசேஜ்களை நீங்களாக டெலிட் செய்வதை தவிர்த்து, தானாகவே டெலிட் செய்யும் சலுகையை கொடுக்கிறது. இப்போது, 24 மணி நேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களில் மெசேஜ்களை மறைந்து போகும் படி செய்து கொள்ளலாம்.

ஆனால், இது பல்வேறு கஸ்டமர்களுக்கு போதுமானதாக இல்லை. அதாவது, சில நேரங்களில் மிகவும் முக்கியமான அல்லது தனிப்பட்ட தகவல்களை பகிரும்போதும், தெரியாத நபர்களிடம் வாட்ஸ்அப் மூலம் தகவல்களை தெரிவிக்கும் போதும் அந்த செய்திகள் கூடுதல் விரைவில் மறைந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று யூசர்கள் விரும்புகின்றனர்.

இவர்களுக்காகவே இந்த அப்டேட் வந்துள்ளது. இப்போது, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய கால அளவுகளாக 1 மணிநேரம் மற்றும் 12 மணிநேரத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது ஒட்டுமொத்த யூசர்களுக்கும் கிடைக்கவில்லை. வாட்ஸ்அப்-இன் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மட்டும் கிடைக்கிறது. ஆகவே, இந்த புதிய பீச்சர் டெஸ்டிங் மூலம் மட்டுமே பயன்படுத்த கிடைக்கிறது.

பீட்டா வெர்சனுக்கு பிறகு விரைவில் ஒட்டுமொத்த வாட்ஸ்அப் யூசர்களுக்கும் கிடைக்க இருக்கிறது. யூசர்களின் தனிப்பட்ட சாட்களை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இந்த அப்டேட்டின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இந்த அப்டேட் வந்து விட்டால் ஒருமுறை மட்டும் தேவைப்படும் முக்கிய தகவல்கள் அல்லது பாஸ்வேர்டு போன்ற மற்ற தகவல்களை விரைவில் மறைந்து போக செய்யலாம்.

இதில் கிடைக்க இருக்கும் 1 மணிநேர கால அளவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேபோல, ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட உரையாடலை, அடுத்த நாள் காலையில் தானாகவே மறைந்து போக வேண்டும் என்று விரும்புவோருக்கு 12 மணிநேர கால அளவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இது தற்போது இருக்கும் 24 மணிநேர கால அளவை விட கூடுதல் வேகத்தை வழங்குகிறது.

வாட்ஸ்அப் டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள் பயன்படுத்துவது எப்படி? நீங்கள் மறைய செய்ய விரும்பும் சாட்களுக்கு செல்லுங்கள். வலது புறத்தின் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யுங்கள். அதில் டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள் ஆப்ஷன் இருக்கும். அதில், 24 மணி ரேம், 7 நாட்கள், 90 நாட்கள் மற்றும் ஆஃப் (Off) ஆகிய ஆப்ஷன்கள் இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

நீங்கள் 24 மணி நேர ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், அந்த சாட்டில் செய்யப்பட்ட ஒட்டுமொத்த மெசேஜ்களும் 24 மணி நேரத்துக்கு பிறகு இருக்காது. முற்றிலும் மறைந்து போகும். இது தேவையில்லாத சாட்களை தானாகவே டெலிட் செய்யும்படியான ஆப்ஷனை கொடுக்கிறது. இது வாட்ஸ்அப் யூசர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பீச்சராகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
WhatsApp Adds 1 Hour and 12 Hour Disappearing Message Options Soon Now Tested on Beta Version
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X