அட்றா சக்கை! இனி டபுள் கேம் இல்ல.. ட்ரிபிள் கேம் கூட ஆடலாம்! WhatsApp-க்கு வந்துள்ள புதிய வீடியோ கால் Mode!

|

முன்னதாக வெறும் மெசேஜ் மட்டுமே அனுப்ப பயன்படும் ஒரு மெசேஜிங் பிளாட்ஃபார்ம் (Messaging Platform) ஆக இருந்த வாட்ஸ்அப், தற்போது ஒரு மிக முக்கியமான வீடியோ கால் பிளாட்ஃபார்மாகவும் (Video Call Platform) உருமாறி உள்ளது.

இந்த நிலையை இன்னும் மேம்படுத்தி கொள்ளும் நோக்கத்தின் கீழ் WhatsApp நிறுவனம் ஒரு புதிய வீடியோ கால் மோட்-ஐ (New Mode) அறிமுகம் செய்துள்ளது.

அதென்ன மோட்? அதனால் என்ன பயன்? வீடியோ காலிங்கிற்கும் அதற்கும் என்ன தொடர்பு? இதோ விவரங்கள்!

அதென்ன மோட்?

அதென்ன மோட்?

வாட்ஸ்அப்பில் வீடியோ காலிங்கிற்கான பிக்சர்-இன்-பிக்சர் மோட் (Picture-in-Picture Mode), அதாவது பிஐபி மோட் (PiP Mode) என்கிற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது வரையிலாக, ​​நீங்கள் ஒரு வீடியோ காலில் இருக்கும்போது வாட்ஸ்அப்பில் உள்ள மற்ற சாட்களை மட்டுமே பார்க்க முடியும். அப்படித்தானே? ஆனால் இனிமேல் அப்படி இல்லை!

வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆனது, வாட்ஸ்அப் வழியாக நீங்கள் ஒரு வீடியோ காலில் பேசிக்கொண்டே, உங்கள் போனில் உள்ள மற்ற ஆப்களை பயன்படுத்தவும் அனுமதிக்கும்.

Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!Google-ல உங்க சேர்ச் ஹிஸ்டரி கொஞ்சம் கேவலமா இருக்குமா? இனி அதை மட்டும் டெலிட் பண்ணா போதாது! இதையும் செய்யணும்!

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தற்போது வரையிலாக, இந்த புதிய பிஐபி மோட் (PiP Mode) ஆனது சில பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது.

வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாக வெளியான தகவலின்படி, ஐஓஎஸ்-க்கான 22.24.0.79 வெர்ஷனை இன்ஸ்டால் செய்த சில பீட்டா டெஸ்டர்கள் வீடியோ கால்களுக்கான புதிய பிக்சர்-இன்-பிக்ச்சர் மோட்-ஐ பார்த்து உள்ளனர்.

மேலும் இந்த அம்சம் குறைந்தபட்சம் iOS 16.1 மற்றும் அதற்கு பிந்தைய வெர்ஷனில் மட்டுமே இயங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில், இதே அம்சம் இன்னும் அதிகமான பயனர்களுக்கு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் என்ன பயன்?

இதனால் என்ன பயன்?

இந்த புதிய அம்சத்தின் கீழ், வாட்ஸ்அப் வழியாக - ஒருவருடன் அல்லது பலருடன் வீடியோ காலில் இருக்கும் போதே, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற ஆப்களுக்குமான அணுகல்களும் உங்களுக்கு கிடைக்கும்.

அதாவது மற்ற ஆப்களையும் உங்களால் பயன்படுத்த முடியும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் வேறொரு மெசேஜிங் ஆப்பை பயன்படுத்தி மெசேஜ் அனுப்ப முடியும்; நோட்ஸ் ஆப்பை திறந்து குறிப்புகள் எடுக்க முடியும்.

இது உங்களுடைய மல்டிடாஸ்க்கிங்கை மேம்படுத்தும். அதாவது ஒரே நேரத்தில் பல பணிகளை செய்ய வழிவகுக்கும்; நினைத்து பார்க்க முடியாதபடி, உங்கள் நேரத்தையும் மிச்சப்படுத்தும்!

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

இப்போது உங்களுக்கு மெசேஜ் யுவர்செல்ஃப்பும் கூட கிடைக்கும்!

இப்போது உங்களுக்கு மெசேஜ் யுவர்செல்ஃப்பும் கூட கிடைக்கும்!

கடந்த சில வாரங்களாகவே வாட்ஸ்அப்பில் எக்கச்சக்கமான புதிய அம்சங்கள் அறிமுகமான வண்ணம் உள்ளது. அப்படியாக சமீபத்தில் அறிமுகமான ஒரு முக்கியமான அம்சம் தான் - மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself).

இந்த அம்சம், உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ள உதவும் ஒரு அம்சம் ஆகும். இதை 1:1 அம்சம் என்றும் கூறலாம்; அதாவது உங்களுடன் நீங்களே பேசிக்கொள்ள வழிவகுக்கும் ஒரு அம்சம் ஆகும்!

இதெப்படி சாத்தியம்?

இதெப்படி சாத்தியம்?

இதை முயற்சி செய்து பார்ப்பதற்கு முன், உங்கள் போனில் உள்ள வாட்ஸ்அப்பை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு (ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ்) மேம்படுத்தி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

அதனை தொடர்ந்து உங்கள் வாட்ஸ்அப்பை திறந்து, காண்டாக்ட்ஸ் (Contacts) விருப்பத்திற்கு சென்றால் அங்கே Message Yourself என்கிற டெக்ஸ்ட் உடன் உங்களுடையே சொந்த வாட்ஸ்அப் நம்பர் இருப்பதை காண்பீர்கள்.

அதை கிளிக் செய்த உடன், ஒரு புதிய சாட் விண்டோ திறக்கும். அந்த சாட் விண்டோ வழியாக உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம்!

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

இது தனிமை தொடர்பான அம்சம் அல்ல!

இது தனிமை தொடர்பான அம்சம் அல்ல!

சிலர் இந்த மெசேஜ் யுவர்செல்ஃப் அம்சத்தை தனிமை தொடர்பான ஒரு அம்சம் என்பது போல் சித்தரிக்கின்றனர். அதாவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப யாருமே இல்லை என்றால்.. உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம் என்கிற முட்டாள்த்தனமான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

ஆனால் உண்மையில் இது நீங்கள் குறிப்பெடுக்க விரும்பும் தகவல்களை எழுதி வைத்து கொள்ளவும்; புகைப்படமாக சேமித்து வைக்கவும், வாய்ஸ் மெசேஜ் ஆக பதிவு செய்து வைக்கவும் உதவும்ஒரு அம்சம் ஆகும்.

ஒருவேளை நீங்கள் உங்களுடைய தனிமை தொடர்பான சிக்கல்களை சரி செய்ய விரும்பினால் நீங்கள் அணுக வேண்டியது - வாட்ஸ்அப்பில் உள்ள Message Yourself என்கிற அம்சத்தை அல்ல.. உங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அல்லது மருத்துவரையும் தான்!

Best Mobiles in India

English summary
WhatsApp Added New PiP Mode For Video Calls In Its Platform Which Helps You To Do Multitasking

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X